Logo of Tirunelveli Today
English

திருக்கோவில்கள்

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் பற்றிய தகவல்கள்.

பிரசித்தி பெற்ற கோவில்கள்

ஆன்மீக குறிப்புக்கள்

முக்கிய விரத நாட்கள், விசேஷ நாட்கள், கோவில் திருவிழாக்கள், உற்சவங்கள் பற்றிய குறிப்புக்கள்.
முக்கிய விழாக்கள்

ஆனி தேரோட்டம்:
தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேர் என்று சிறப்பிக்கப்படும் ராஜ தேரில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருள தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

காந்திமதி அம்மை ஆடிப்பூரம் முளைக்கொட்டு உற்சவம்:
ஆடிப்பூரம் அன்று மாலை அம்மன் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மை எழுந்தருள முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

திருப்புடைமருதூர் தைப்பூச தீர்த்தவாரி:
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவிலில் தைப்பூசம் அன்று பகலில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெறும்.

ஐப்பசி தபசு / திருக்கல்யாணம் விழா:
திருநெல்வேலி காந்திமதி அம்மை திருக்கோவிலில் ஐப்பசி பூரம் அன்று தபசு விழாவும், மறுநாள் ஐப்பசி உத்திரம் அன்று திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.

பாளையங்கோட்டை தசரா விழா:
மைசூருக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் உள்ள 12 அம்மன் கோவில்களிலிலும் ஒன்றாக சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஆழ்வார்திருநகரி வைகாசி விசாக திருவிழா:
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் நவதிருப்பதிகளில் இருந்து ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளி கருட சேவை காட்சியருள்வார்கள்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா:
அசுரரை வென்று தேவர்களை காத்த குமரப்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெறும்.

நாங்குநேரி தை அமாவாசை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் தை மாதம் வரும் அமாவாசை அன்று ஒரு கோட்டை தூய நல்லெண்ணெயால் காப்பு செய்விக்கப்படும். இந்த எண்ணெய் கோவிலில் உள்ள எண்ணெய் கிணற்றில் சேமிக்கப்படும்.

முக்கிய விரதங்கள்

சிவ விரதங்கள்

  • ஆனி உத்திரம்
  • சிவராத்திரி, பிரதோஷ விரதம்
  • கேதாரகௌரி விரதம்

விநாயகர் விரதங்கள்

  • சதுர்த்தி விரதம்
  • விநாயகர் நவராத்திரி விரதம்
  • சங்கடஹர சதுர்த்தி விரதம்
  • பிள்ளையார் நோன்பு (குமார சஷ்டி விரதம்)

சக்தி விரதங்கள்

  • நவராத்திரி, வரலட்சுமி நோன்பு
  • ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய்
  • பங்குனித் திங்கள், மாசி மகம்
கந்த விரதங்கள்
  • கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை
  • வைகாசி விசாகம், தைப்பூசம்
  • திருக்கார்த்திகை விரதம்

தற்போதைய பதிவுகள்

"திங்கள்நாள் விழ மல்கு திருநெல்வேலி" என்று ஞானசம்பந்த பெருமான் பாடிய திருநெல்வேலி கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், விசேஷ வழிபாடுகள், உற்சவங்கள் பற்றிய தகவல்கள்.

ஆலய தரிசனம்

திருக்குறுங்குடி அழகியநம்பி பங்குனி திருவிழா(Thirukurungudi Azhagiya Nambi Panguni Thiruvizha)
வைணவ திவ்ய தேச ஸ்தலங்கள் நூற்றியெட்டினுள் ஒன்றாகத் திகழ்வது திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருக்கோவில் ஆகும். இங்குப் பஞ்சகேத விமானத்தின் கீழ் மூலவர் ஸ்ரீ நம்பிராயர் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். நம்பியாற்றின் கரையில் அமையப்பெற்றிருக்கும் இந்தத் திருக்கோவிலில் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை மேல் நம்பி, திருப்பாற்கடல் நம்பியென ஐந்து நிலைகளில் பெருமாள் சேவை சாதிக்கிறார். முன்னர் மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்தபோது மிகப் பெரிய வடிவத்தில் இருந்த […]
மேலும் படிக்க
பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி பங்குனி திருவிழா
பாளையங்கோட்டை நகரின் மத்திய பகுதியில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ அழகியமன்னார், ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, ஸ்ரீ வேதநாராயணர் திருக்கோவில். இங்கு அஷ்டாங்க விமானத்தின் கீழ் பெருமாள் இரண்டு தளங்களில் காட்சித் தருகிறார். விமானத்தின் முதல் தளத்தில் (திருக்கோவில் மாடியில்) ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ அழகியமன்னார் நின்ற கோலத்தில் வர்ணகலாபத் திருமேனியாகக் காட்சி தருகிறார். இரண்டாம் தளத்தில் (திருக்கோவில் கருவறையில்) ஸ்ரீ வேதவல்லி, ஸ்ரீ குமுதவல்லி உடனுறை ஸ்ரீ வேதநாராயணர் அமர்ந்த கோலத்தில் கருவறை மூலவராகக் காட்சி தருகிறார். இவருடன் […]
மேலும் படிக்க
பாபநாசம் சித்திரை விசு திருவிழா
நெல்லை மாவட்டம்., அம்பாசமுத்திரம் வட்டம், பொதிகை மலைச்சாரலில் தாமிரபரணி நதி சமநிலை அடைந்து பாய்ந்து வரும் இடத்தில் அமையப்பெற்ற முதல் கோவிலும், பொதிகைமலை, சையமலை, தருத்திரமலை ஆகிய மூன்று மலைகள் பூசனை புரிந்து, வரம் பெற்ற தலமாகியதும், வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வைரவ தீர்த்தம், நாரத தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களை உள்ளடக்கிய தாமிரபரணியின் மேற்குக்கரையில் அமைந்துள்ளதும், நவ கைலாயங்களில் முதன்மையாகியதும், சூரிய தலமாகியதும், இந்திரனுடைய சாபம் நீங்கப் பெற்ற தலமாகியதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய […]
மேலும் படிக்க
ஸ்ரீவில்லிபுத்தூர் பங்குனி உத்திரம் திருவிழா(Srivilliputhur Panguni Uthiram Festival)
"மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர்" என்று புகழப்படும் திருவில்லிபுத்தூரில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ ஆண்டாள் - ஸ்ரீ ரங்கமன்னார் திருக்கோவில். இங்கு வருடந்தோறும் பல திருவிழாக்கள் நடைபெற்று வந்தாலும், அவற்றுள் ஆடிப் பூரத்தை ஒட்டி நடைபெறும் பெரிய தேரோட்ட திருவிழாவும், பங்குனி உத்திரத்தை ஒட்டி நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்ற விழாக்களாகும். திருவில்லிபுத்தூரில் நடைபெற உள்ள பங்குனி திருவிழா நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை இங்குக் காணலாம். ஸ்ரீ ஆண்டாள் - ஸ்ரீ ரங்கமன்னார் திருக்கல்யாண […]
மேலும் படிக்க
சிவசைலம் பங்குனி திருவிழா(Sivasailem Panguni Uthiram Festival)
ஆழ்வார்குறிச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி, கடனா நதிக்கரையில் அமையப்பெற்றுள்ள ஸ்தலம் சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மை உடனுறை ஸ்ரீ சிவசைலப்பர் திருக்கோவில். இந்தத் திருக்கோவில் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளதால் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இந்தக் கோவிலில் வருடந்தோறும் பல விழாக்கள் நடைபெற்றாலும் பங்குனி மாதம் நடைபெறும் தேரோட்ட திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சார்ந்த பக்தர்கள் அனைவரும் இந்தத் தேரோட்டத்தில் பங்குபெற்றுத் திருத்தேர்களை இழுப்பார்கள். இந்தக் […]
மேலும் படிக்க
பங்குனி உத்திரம் குலதெய்வ வழிபாடு (Panguni Uthiram kuladeiva valipadu)
பங்குனி உத்திரம் (Panguni Uthiram) தமிழகத்தின் தென்கோடியில் உள்ள திருநெல்வேலி மாநகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பங்குனி உத்திர விழா மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கும்.  குலதெய்வம் மற்றும் குல சாஸ்தா திருக்கோவிலை வழிபடும் நாளாக இந்தப் பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல சாஸ்தா கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் என ஒரு குல தெய்வம் மற்றும் குல […]
மேலும் படிக்க
மேலும் படிக்க

சைவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

வைஷ்ணவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

திருக்கோவில்கள் புகைப்படத்தொகுப்பு

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

தாமிரபரணி நதிக்கரை திருக்கோவில்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தன்பொருநை என்று சிறப்பிக்கப்படும் தாமிரபரணி நதிக்கரையில் எண்ணற்ற பழம்பெருமை வாய்ந்த சிவன் திருக்கோவில்கள், விஷ்ணு திருக்கோவில்கள், கிராம தெய்வங்களின் திருக்கோவில்கள், சாஸ்தா திருக்கோவில்கள், அம்மன் திருக்கோவில்கள், முருகன் திருக்கோவில்கள், விநாயகர் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப்பெற்ற திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை இங்கு நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம்.
திக்கனைத்தும் திருக்கோவில்கள்
  • நவதிருப்பதி
  • நவகைலாயம்
  • ஆதி நவகைலாயம்
  • பஞ்ச குரோச ஸ்தலங்கள்
  • பஞ்ச விக்ரக ஸ்தலங்கள்
  • பஞ்ச பூத ஸ்தலங்கள்
  • பஞ்ச ஆசன ஸ்தலங்கள்
  • நவசமுத்திர ஸ்தலங்கள்
  • முப்பீட ஸ்தலங்கள்
  • சாஸ்தா திருத்தலங்கள்
என திக்கனைத்திலும் திருக்கோவில்களை கொண்டது திருநெல்வேலி!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top calendar-fullmagnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram