Logo of Tirunelveli Today
English

திருக்கோவில்கள்

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் பற்றிய தகவல்கள்.

பிரசித்தி பெற்ற கோவில்கள்

ஆன்மீக குறிப்புக்கள்

முக்கிய விரத நாட்கள், விசேஷ நாட்கள், கோவில் திருவிழாக்கள், உற்சவங்கள் பற்றிய குறிப்புக்கள்.
முக்கிய விழாக்கள்

ஆனி தேரோட்டம்:
தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேர் என்று சிறப்பிக்கப்படும் ராஜ தேரில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருள தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

காந்திமதி அம்மை ஆடிப்பூரம் முளைக்கொட்டு உற்சவம்:
ஆடிப்பூரம் அன்று மாலை அம்மன் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மை எழுந்தருள முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

திருப்புடைமருதூர் தைப்பூச தீர்த்தவாரி:
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவிலில் தைப்பூசம் அன்று பகலில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெறும்.

ஐப்பசி தபசு / திருக்கல்யாணம் விழா:
திருநெல்வேலி காந்திமதி அம்மை திருக்கோவிலில் ஐப்பசி பூரம் அன்று தபசு விழாவும், மறுநாள் ஐப்பசி உத்திரம் அன்று திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.

பாளையங்கோட்டை தசரா விழா:
மைசூருக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் உள்ள 12 அம்மன் கோவில்களிலிலும் ஒன்றாக சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஆழ்வார்திருநகரி வைகாசி விசாக திருவிழா:
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் நவதிருப்பதிகளில் இருந்து ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளி கருட சேவை காட்சியருள்வார்கள்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா:
அசுரரை வென்று தேவர்களை காத்த குமரப்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெறும்.

நாங்குநேரி தை அமாவாசை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் தை மாதம் வரும் அமாவாசை அன்று ஒரு கோட்டை தூய நல்லெண்ணெயால் காப்பு செய்விக்கப்படும். இந்த எண்ணெய் கோவிலில் உள்ள எண்ணெய் கிணற்றில் சேமிக்கப்படும்.

முக்கிய விரதங்கள்

சிவ விரதங்கள்

  • ஆனி உத்திரம்
  • சிவராத்திரி, பிரதோஷ விரதம்
  • கேதாரகௌரி விரதம்

விநாயகர் விரதங்கள்

  • சதுர்த்தி விரதம்
  • விநாயகர் நவராத்திரி விரதம்
  • சங்கடஹர சதுர்த்தி விரதம்
  • பிள்ளையார் நோன்பு (குமார சஷ்டி விரதம்)

சக்தி விரதங்கள்

  • நவராத்திரி, வரலட்சுமி நோன்பு
  • ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய்
  • பங்குனித் திங்கள், மாசி மகம்
கந்த விரதங்கள்
  • கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை
  • வைகாசி விசாகம், தைப்பூசம்
  • திருக்கார்த்திகை விரதம்

தற்போதைய பதிவுகள்

"திங்கள்நாள் விழ மல்கு திருநெல்வேலி" என்று ஞானசம்பந்த பெருமான் பாடிய திருநெல்வேலி கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், விசேஷ வழிபாடுகள், உற்சவங்கள் பற்றிய தகவல்கள்.

ஆலய தரிசனம்

சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சங்கரன்கோவில்
நெல்லை அருகில் உள்ளது சங்கரநயினார் கோவில் என்று அழைக்கப்படும் சங்கரன்கோவில். சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் இந்த திருக்கோவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்கு அரியும், அரனும் ஒன்றே என்ற உண்மையை உலகுக்கு எடுத்துக் காட்ட சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சித் தருகிறார்கள். முற்காலத்தில் உமையம்மை கோமதி என்ற பெயரில் புன்னை வனமாக இருந்த இந்த பகுதியில் தோன்றி தவம் இருக்க, அவளுக்கு சுவாமியும், பெருமாளும் இணைந்து சங்கரநாராயணராக காட்சியளித்ததாக […]
மேலும் படிக்க
திருச்செந்தூர் பஞ்சலிங்க தரிசனம்
ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் ஸ்தலம் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். கடற்கரையில் அமையப்பெற்றுள்ள இந்த கோவிலில் முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் கையில் தாமரை மலர் ஏந்தி சிவ பூஜை செய்யும் திருக்கோலத்தில்  காட்சித் தருகிறார். முற்காலத்தில் இங்கு முருகப்பெருமான், சூரபத்மனுடன் போரிட்டு அவனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டு தேவர்களை காத்து நின்றார்.  அசுரர் படைகளை சம்ஹாரம் செய்த பாவம் நீங்க, முருகப்பெருமான் கடற்கரையில் ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து […]
மேலும் படிக்க
பாபநாசம் மலையில் மீண்டும் அகத்தியர் - லோபாமுத்திரை திருமேனிகள் பிரதிஷ்டை
நெல்லை மாவட்டம், பாபநாசம்  பொதிகை மலையில் உள்ள அகத்தியர் அருவிக்கு அருகில் கல்யாண தீர்த்தம் என்னும் தீர்த்தக்கட்டம் உள்ளது. இங்கு ஒரு சிவன் கோவிலும், திறந்தவெளியில் அகத்தியர் - லோபாமுத்திரை சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதிக்கு செல்வதற்கு  பக்தர்கள் அதிக அளவில் முன்னர் வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் வனத்துறையின் பாதுகாப்பு கட்டுப்பாடுகளாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் இந்த பகுதிக்கு செல்ல கடந்த ஓராண்டுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஜனவரி மாதம் […]
மேலும் படிக்க
அதிசய உறங்காப்புளி மரம்
நெல்லை மாநகரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது ஆழ்வார்திருநகரி என்னும் வைணவ திவ்ய தேச ஸ்தலம். இங்கு பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான நம்மாழ்வார், கொடிமரத்துடன் கூடிய தனி சந்நிதியில் பெருமாளுக்கு நிகரான அந்தஸ்த்தில் எழுந்தருளி காட்சி தருகிறார். தாமிரபரணி நதிக்கரையில் அமையப்பெற்றுள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த திருக்கோவிலில் பெருமாள் ஆதிநாதர் என்ற திருநாமம் தாங்கி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.  இந்த கோவிலின் ஸ்தல விருட்சமாக விளங்கும் உறங்காப்புளி மரம் பல ஆயிரம் […]
மேலும் படிக்க
சங்கீத ஒலி எழுப்பும் நெல்லையப்பர் கோவில் தூண்கள்
நெல்லை மாநகரில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ நெல்லையப்பர் ஸ்ரீ காந்திமதி அம்பாள் திருக்கோவில். மிகப்பெரிய பரப்பளவில் இரு பெரும் கோவிலாக அமையப்பெற்றுள்ள இந்த திருக்கோவில் எண்ணற்ற பல சிறப்புகளையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலுக்குள் உள்ள மணி மண்டபத்தில் காணப்படும் சங்கீதத் தூண்கள் சிறப்பு பெற்றவையாகும். இங்குள்ள மணி மண்டபத்தின் முன்பக்கம் பெரிய தூண்கள் மண்டபத்தைத் தாங்கி நிற்க, அதனைச் சுற்றி ஒலி எழுப்பக்கூடிய சிறு சிறு இசை தூண்கள் காணப்படும். […]
மேலும் படிக்க
நாங்குநேரி கோவில் எண்ணெய் கிணறு..!
நெல்லை மாவட்டத்தில் உள்ளது நாங்குநேரி ஸ்ரீ வானமாமலையப்ப பெருமாள் திருக்கோவில். வைணவ திவ்ய தேச ஸ்தலங்கள் நூற்றியெட்டினுள் ஒன்றாக விளங்கும்   சிறப்புமிக்க "எண்ணெய் கிணறு" அமையப்பெற்றுள்ளது. இங்குக் கருவறையில் உள்ள பெருமாளுக்கு ஒரு கோட்டை எண்ணெய் காப்பு உற்சவம் வருடந்தோறும் தை அமாவாசை அன்று  சிறப்பாக நடைபெறும். இதற்காகப் பிரத்யேகமாக செக்கில் ஆட்டப்பட்ட சுத்தமான நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.  பெருமாளுக்கு இங்குச் சாற்றப்படும் அந்த எண்ணெய் முழுவதும், இந்தத் திருக்கோவில் வளாகத்துக்குள் இருக்கும் கிணற்றில் சேமிக்கப்பட்டு வருகிறது. […]
மேலும் படிக்க
மேலும் படிக்க

சைவ திருத்தலங்கள்

தென்திருப்பேரை கைலாசநாதர் திருக்கோவில்
தென்திருப்பேரை கைலாசநாதர் திருக்கோவில். நவகைலாய ஸ்தலங்களில் ஏழாவது தலமான தென்திருப்பேரை  கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர். அம்மை: அழகிய பொன்னம்மை. திருக்கோவில் விருட்சம்: வில்வம்  தீர்த்தம்: தாமிரபரணி. தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் […]
திருவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோவில்
திருவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோவில். நவகைலாய ஸ்தலங்களில் ஆறாவது  தலமான திருவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர். அம்மை: சிவகாமி அம்மை. திருக்கோவில் விருட்சம்: இலுப்பை  மரம். தீர்த்தம்: தாமிரபரணி. தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய இடம் […]
முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோவில்
முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோவில். நவகைலாய ஸ்தலங்களில் ஐந்தாம் தலமான முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர். அம்மை: சிவகாமி அம்மை. திருக்கோவில் விருட்சம்:  பலா மரம். தீர்த்தம்: தாமிரபரணி. தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஐந்தாவது மலர் கரை ஒதுங்கிய இடம் […]
குன்னத்தூர் கோத பரமேஸ்வரர் திருக்கோவில்(Kunnathur Kotha Parameswarar Temple)
குன்னத்தூர் கோவில் (Kunnathur Temple) நவகைலாய ஸ்தலங்களில் நான்காம் தலமான குன்னத்தூர் கோத பரமேஸ்வரர்  திருக்கோவில்.  சுவாமி: கோத பரமேஸ்வரர், அம்மை: சிவகாமியம்மை, திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம், தீர்த்தம்: தாமிரபரணி. குன்னத்தூர் கோத பரமேஸ்வரர்  கோவில் தல வரலாறு : (Kunnathur Kotha Parameswarar Temple) உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே […]
சேரன்மகாதேவி அம்மநாதர் சுவாமி திருக்கோவில்
சேரன்மகாதேவி அம்மநாதர் சுவாமி திருக்கோவில். நவகைலாய ஸ்தலங்களில் இரண்டாம் தலமான சேரன்மகாதேவி அம்மநாதசுவாமி திருக்கோவில். சுவாமி: அம்மநாதர், அம்மை: ஆவுடையம்மை, திருக்கோவில் விருட்சம்: ஆல மரம், தீர்த்தம்: தாமிரபரணி - வியாச தீர்த்த கட்டம். தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் இரண்டாவது […]
Kodaganallur Kailasanathar Thirukovil
கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோயில் கார்க்கோடகன் வழிபட்ட கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர், அம்மை: சிவகாமி அம்மை, சிறப்பு சன்னதி: ஆனந்த கெளரி அம்மன், திருக்கோவில் விருட்சம்: வில்வம், தீர்த்தம்: தாமிரபரணி. தல வரலாறு : முற்காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இந்த பகுதியில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருந்தார். ஒரு நாள் அந்த முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அந்த முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான சமித்துகளை சேகரிப்பதற்காக, அந்த முனிவரின் மகன் […]
Brahmadesam(Ambasamudram) Kailasanathar Kovil
பிரம்மதேசம் (Brahmadesam) திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் கங்கைக்கு நிகரான சிறப்புக்களை உடைய கடனை ஆற்றின் தென் கரையில் அமையப்பெற்றுள்ள திருக்கோவில் பிரம்மதேசம். இந்த கோவிலின் புராண பெயர் "அயனீச்சுவரம்" என்றும் வரலாற்று பெயர் "ராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்" என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது. சுவாமி பெயர்: கைலாசநாதர். அம்மை பெயர்: பெரியநாயகி அம்மை. திருக்கோவில் விருட்சம்: இலந்தை மரம். தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், கடனை நதி. சிறப்பு சன்னதி: கங்காளநாதர், இலந்தையடி […]
மேலும் படிக்க

வைஷ்ணவ திருத்தலங்கள்

தென்திருப்பேரை திவ்ய தேசம் (Thenthiruperai Divya Desam)
பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஆறாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஏழாவதாகவும் விளங்கும் கோவில் "தென்திருப்பேரை". இது சுக்கிரனின் அம்சமாக விளங்குகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த கோலம்) உற்சவர் பெயர் : நிகரில்முகில்வண்ணன். தாயார்கள்: குழைக்காதவல்லி, திருப்பேரை […]
Navathirupathi - 9: Alwarthirunagari
பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஐந்தாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஒன்பதாவதாகவும் விளங்கும் கோவில் "ஆழ்வார்திருநகரி". இது குருவின் அம்சம்சமாக விளங்குகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: ஆதிநாத பெருமாள் (நின்ற கோலம்) உற்சவர் பெயர் : ஸ்ரீ தேவி, பூ […]
Navathirupathi - 3 : Thirupulingudi
பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் நான்காவதாகவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் மூன்றாவதாகவும் விளங்கும் கோவில் "திருப்புளிங்குடி". இது புதன் அம்சம்சமாக விளங்குகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் திருப்புளிங்குடி பெருமாள் கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: பூமிபாலகர் (கிடந்த கோலம்) உற்சவர் பெயர் : காய்சினிவேந்தன் தாயார்கள்: […]
Navathirupathi - 8: Thirukolur
பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றுள் நவக்கிரக வரிசையில் மூன்றாவதாக, செவ்வாய்க்குரிய தலமாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் எட்டாவதாகவும் விளங்கும் கோவில் "திருக்கோளூர்". 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: வைத்தமாநிதி பெருமாள் (கிடந்த கோலம்) உற்சவர் பெயர் : நிஷேபவித்தன் (நித்தியபவித்திரர் - நின்றகோலம்) […]
திருவைகுண்டம் வைகுண்டநாத பெருமாள் கோவில் (Srivaikuntam Sri Vaikundanatha Perumal Temple)
பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றுள் முதலாவதாக சூரியனுக்குரிய தலமாக விளங்கும் கோவில் "திருவைகுண்டம்". 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: வைகுண்டநாதர் (நின்ற கோலம்). உற்சவர் பெயர் : கள்ளர்பிரான் (சோரநாதர்). தாயார்கள்: வைகுந்தநாயகி, சோரநாதநாயகி. விமானம்: இந்திர விமானம். திருக்கோவில் விருட்சம்: […]
மேலும் படிக்க

திருக்கோவில்கள் புகைப்படத்தொகுப்பு

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

தாமிரபரணி நதிக்கரை திருக்கோவில்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தன்பொருநை என்று சிறப்பிக்கப்படும் தாமிரபரணி நதிக்கரையில் எண்ணற்ற பழம்பெருமை வாய்ந்த சிவன் திருக்கோவில்கள், விஷ்ணு திருக்கோவில்கள், கிராம தெய்வங்களின் திருக்கோவில்கள், சாஸ்தா திருக்கோவில்கள், அம்மன் திருக்கோவில்கள், முருகன் திருக்கோவில்கள், விநாயகர் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப்பெற்ற திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை இங்கு நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம்.
திக்கனைத்தும் திருக்கோவில்கள்
  • நவதிருப்பதி
  • நவகைலாயம்
  • ஆதி நவகைலாயம்
  • பஞ்ச குரோச ஸ்தலங்கள்
  • பஞ்ச விக்ரக ஸ்தலங்கள்
  • பஞ்ச பூத ஸ்தலங்கள்
  • பஞ்ச ஆசன ஸ்தலங்கள்
  • நவசமுத்திர ஸ்தலங்கள்
  • முப்பீட ஸ்தலங்கள்
  • சாஸ்தா திருத்தலங்கள்
என திக்கனைத்திலும் திருக்கோவில்களை கொண்டது திருநெல்வேலி!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top calendar-fullmagnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram