Logo of Tirunelveli Today
English

திருநெல்வேலி

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணை நிலங்களையும், பொதிகை மலையில் உற்பத்தியாகி வற்றாது வளம் கொழிக்கும் தாமிரபரணி நதியையும் தன்னகத்தே கொண்ட மாநகரம் திருநெல்வேலி!
நெல்லைச்சீமை எனும் திருநெல்வேலி!

பசுமை பூமி!

திருநெல்வேலி தகவல் களஞ்சியம்

திருநெல்வேலி மாநகரின் நிலப்பரப்பு, மக்கள்தொகை, உள்ளாட்சி அமைப்பு, கிராம பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்கள்.
நெல்லை ஒரு பார்வை

பொது :
மாவட்டம் : திருநெல்வேலி
தலைநகரம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு

நிலப்பரப்பு :
மொத்தம் : 3876.06 சதுர.கி.மீ
கிராமப்புறம் : 2923.25 சதுர.கி.மீ
நகர்ப்புறம் : 115.23 சதுர.கி.மீ
வனம் : 837.58 சதுர.கி.மீ

மக்கள் தொகை :
2011 மக்கள் தொகை கணக்குப்படி (திருநெல்வேலி - தென்காசி மாவட்டம் சேர்த்து)
மொத்தம் : 33,22,644
ஆண்கள் : 16,42,403
பெண்கள் : 16,80,241

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

திரு. நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி,
பாரதிய ஜனதா கட்சி.

திரு. இசக்கி சுப்பையா
அம்பாசமுத்திரம்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

திரு. அப்துல் வஹாப்
பாளையங்கோட்டை,
திராவிட முன்னேற்றக் கழகம்.

திரு. ரூபி ஆர். மனோகரன்
நாங்குநேரி,
இந்திய தேசிய காங்கிரஸ்.

திரு. எம்.அப்பாவு
இராதாபுரம்,
திராவிட முன்னேற்ற கழகம்.

துறைகள்

வருவாய்
பிரிவுகள் : 2
தாலுகாக்கள் : 8
வருவாய் கிராமங்கள் : 370

வளர்ச்சி
தொகுதிகள் : 9
பஞ்சாயத்து
கிராமங்கள் : 204

உள்ளாட்சி அமைப்புகள்
முனிசிபல் கார்ப்பரேஷன்: 1
நகராட்சிகள்: 2

தொகுதிகள்
சட்டசபை: 5
பாராளுமன்றம்: 1

அண்மை பதிவுகள்

திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அன்றாட நிகழ்வுகள், முக்கியமான சம்பவங்கள், ஆன்மீக நிகழ்ச்சிகள், மாவட்டத்தில் உள்ள அணைகளின் தண்ணீர் இருப்பு விவரங்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்கள்.

நெல்லை செய்திகள்

மேலும் அறிய

திருநெல்வேலி கோவில்கள்

தாமிரபரணி பாயும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆற்றின்கரையில் எண்ணற்ற பல சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும் மற்ற கோவில்களும் அமையப்பெற்றுள்ளன. அவற்றுள் நவ கைலாய ஸ்தலங்கள், நவ திருப்பதிகள், தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள், தச வீரட்டான ஸ்தலங்கள், முப்பீட ஸ்தலங்கள், நவ சமுத்திர ஸ்தலங்கள், பஞ்ச ஆசன ஸ்தலங்கள், பஞ்ச விக்ரக ஸ்தலங்கள், பஞ்ச குரோச ஸ்தலங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கது. இந்த கோவில்களின் வரலாறு, அமைவிடம், சிறப்பம்சங்கள், முக்கிய திருவிழாக்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேலும் அறிய

நெல்லை கோவில்கள் பற்றிய பதிவுகள்

பங்குனி உத்திரம் (Panguni Uthiram)
பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திர நட்சத்திரம் நாள்தான் பங்குனி உத்திரம் என கொண்டாடப்படுகிறது. அந்த தினமே முருகனுக்குரிய சிறப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது .தமிழ் மாதத்தில் 12 ஆம் மாதமாக பங்குனி மாதம் விளங்குகிறது. நட்சத்திரங்களில் 12 ஆம் நட்சத்திரமாக உத்திர நட்சத்திரம் இருக்கிறது.12 என்னும் எண்ணில் வரக்கூடிய பங்குனி உத்திரம் 12 கைகளையுடைய முருகப் பெருமானுக்கு விசேஷ தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து முருகன் கோவில்களிலும் வருடம்தோறும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. சிறப்புக்குரிய பங்குனி உத்திரம் பிறந்த வரலாறு (History […]
வீரவநல்லூர் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவில் ( veeravanallur sri sundararaja perumal Temple )
தமிழ்நாட்டின் திருநெவேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் என்ற அழகிய கிராமத்தில், பழமையான வைணவ யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவில். அமைந்துள்ளது, ஒருபுறம் பார்ப்பதற்கு அற்புதமான பொதிகை மலைத்தொடரும், மறுபுறம் பொருநை நதியும் ஓடி வருகின்ற அழகான இயற்கை காட்சிகளோடு , பசுமையான வயல்களால் சூழப்பட்டுள்ளது . சுந்தரராஜப் பெருமாள் கோயில் இந்துக் கடவுளான விஷ்ணுவுக்காக கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற திருத்தலம் ஆகும். வீரவநல்லூரில் சேரன்மகாதேவிக்கு மேற்கே 6 கிமீ தொலைவில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது […]
1 2 3 42
மேலும் அறிய

திருநெல்வேலி உணவுகள்

கருப்பட்டி குழல் புட்டு
புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு தமிழகத்தின் தென் மாநிலங்களிலும் மிகவும் பிரசித்தம் ஆகும். கேரளாவில் புட்டுக்கு தொட்டுக்கொள்ள அப்பளம், நேந்திரம் பழம், பாசி பயறு மற்றும் கடலை கறி பயன்படுத்த படும் வேளையில் திருநெல்வேலி பகுதியில் கருப்பட்டி மற்றும் தேங்காய் பூ கலந்து புட்டு தயார் செய்யப்படும். இப்போது நாம் திருநெல்வேலி பகுதிகளில் பிரபலமான கருப்பட்டி குழல் புட்டு செய்யும் முறை […]
நெல்லிக்காய் சாதம்
நெல்லிக்காய் சாதம் மதிய உணவுக்கு ஏற்ற சத்தான சாப்பாடு ஆகும். இது எலுமிச்சை சாதம் மற்றும் மாங்காய் சாதம் செய்முறையுடன் ஒத்து போகும் விதத்தில் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் அதிக அளவில் நம் உணவில் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எனவே நெல்லிக்காயை கொண்டு சாதம் சமைக்கும் முறை பற்றி இங்கு நாம் காணலாம். தேவையான பொருட்கள்: சாப்பாடு அரிசி - இரண்டு கப். நெல்லிக்காய் - 10 […]
1 2 3 11
மேலும் அறிய

திருநெல்வேலி உணவுகள்

சொதி குழம்பு , கூட்டாஞ்சோறு, நெல்லை அவியல், முழு உளுந்து தோசை, உளுந்தம்பருப்பு சோறு, திருநெல்வேலி அல்வா போன்ற பல சுவைமிக்க உணவு வகைகள் திருநெல்வேலியில் மிகவும் பிரபலம் ஆகும். திருநெல்வேலியின் சிறப்பு மிக்க உணவு வகைகள் மற்றும் அதன் செய்முறை பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

மேலும் அறிய

திருநெல்வேலி சுற்றுலா தலங்கள்

இயற்கை எழில் சூழ்ந்த பூமி என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை, மணிமுத்தாறு, பாபநாசம், காரையார், களக்காடு, முண்டந்துறை, கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், அரியகுளம் பறவைகள் சரணாலயம், மருதூர் அணைக்கட்டு, அகத்தியர் அருவி போன்ற சுற்றுலா தலங்களும், திருநெல்வேலிக்கு அருகே அமையப்பெற்றுள்ள குற்றாலம், தோரணமலை, அத்திரி மலை, கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், மணப்பாடு கடற்கரை, கழுகுமலை போன்ற சுற்றுலா தலங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இங்கு நாம் அந்த சுற்றுலா தலங்களின் சிறப்புக்கள் மற்றும் சென்றடையும் வழிமுறைகள் பற்றி காணலாம்.

மேலும் அறிய

திருநெல்வேலி சுற்றுலா தலங்கள்

பண்பொழி (Panboli)
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் பண்பொழி இரண்டாம்நிலை பேரூராட்சி அமைந்துள்ளது. மாவட்டத்திற்கு தலைமையிடமான தென்காசிக்கு கிழக்கே 9 கிமீதொலைவில் பண்பொழி பேரூராட்சி இருக்கிறது. செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலைவிலும். கடையநல்லூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், குற்றாலத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ள பேரூராட்சியாக விளங்குகிறது. 15 வார்டுகளும், 60 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி 8 சகிமீ பரப்பளவு கொண்டு அமைந்திருக்கிறது. இந்த மாநகராட்சி தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் , கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் […]
குற்றாலம் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்
திருநெல்வேலிக்கு மேலும் அழகு சேர்க்கும் பாபநாசம் அணை குற்றாலத்திலிருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் பாபநாசம் அணை அமைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாபநாசம் அணை விளங்குகின்றது. 143 அடி வரை தண்ணீர் இந்த அணைகளில் தேக்கி வைக்க முடியும். பாபநாசம் அணையின் கொள்ளளவு 5500 மில்லியன் கனஅடியை.கொண்டுள்ளது. 1942ஆம் ஆண்டு முதன்முதலில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மலையில் பாபநாசத்தில் கட்டப்பட்ட ஒரு அழகிய அணையாகும். தாமிரபரணி ஆற்றங்கரைக்கு மிகவும் அருகாமையில் அமைந்துள்ள பாபநாச […]
1 2 3 4
மேலும் அறிய

புகைப்படங்களின் தொகுப்பு

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

திருநெல்வேலி ஓர் சிறந்த சுற்றுலா தலம்

திருநெல்வேலிக்கு சுற்றுலா செல்வது நிச்சயம் உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை தரும். சாலை மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் முக்கிய நகரங்களில் இருந்து நன்கு இணைக்கப்பட்ட திருநெல்வேலியை சென்றடைவது மிகவும் எளிதானது. நீங்கள் இயற்கை அழகை ரசிக்க விரும்பினாலும் சரி, பழமையான திருக்கோயில்களை தரிசிக்க விரும்பினாலும் சரி, ஆர்ப்பரித்து விழும் அருவியில் குளிக்க விரும்பினாலும் சரி, பல்வேறு வெளிநாட்டு பறவைகளை கண்டு ரசிக்க விரும்பினாலும் சரி, மண் மணம் மாறாத உணவுகளை உண்டு ரசிக்க விரும்பினாலும் சரி அதற்கு திருநெல்வேலியை விட சிறந்த இடம் வேறில்லை!
நினைத்தாலே இனிக்கும் நிகரில்லா திருநெல்வேலி!
  • குடிப்பதற்கு - தாமிரபரணி
  • குளிப்பதற்கு - அகத்தியர் அருவி
  • கும்பிடுவதற்கு - நெல்லையப்பர் கோவில்
  • திருவிழாவுக்கு - ஆனித்தேரோட்டம்
  • உண்பதற்கு - இருட்டுக்கடை அல்வா
  • பசுமைக்கு - நெல் வயல்கள்
  • சுற்றுலாவுக்கு - மாஞ்சோலை
  • வியப்பதற்கு - பாபநாசம் அணைக்கட்டு
  • சரணாலயத்துக்கு - கூந்தன்குளம்
  • காது குளிர - திருநெல்வேலி தமிழ்
  • ரசிப்பதற்கு - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள்
  • குறிஞ்சி நிலத்துக்கு - பொதிகை மலை
  • முல்லை நிலத்துக்கு - களக்காடு
  • மருதம் நிலத்துக்கு - சேரன்மகாதேவி
  • பாலை நிலத்துக்கு - திசையன்விளை
  • நெய்தல் நிலத்துக்கு - உவரி
இப்படி எண்ணற்ற சிறப்புகளையும் ஒருங்கே பெற்று திக்கெல்லாம் புகழும்படியாக விளங்குகிறது திருநெல்வேலி!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top homeuserusersstorechart-barsmagnifiercrosschevron-right-circletext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram