துருவிய கேரட், பால், நெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. நெல்லையில் அனைத்து விருந்துகளிலும் இந்த அறுசுவை இனிப்பு பரிமாறப்படுகிறது.
இந்த அல்வா தேங்காய்ப்பாலில் செய்யப்படுவதால், தேங்காய் பால் அல்வா என்றும் அழைக்கப்படுகிறது. நெல்லை மாவட்டம் அருகில் உள்ள முதலூர் என்னும் ஊரில் இந்த அல்வா மிகவும் பிரபலம் ஆகும். இதையும் படியுங்கள்: திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வரலாறு
இந்த அல்வாவில் பல்வேறு வகையான பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க, குறைந்த சர்க்கரை மற்றும் நெய்யுடன் இதை தயார் செய்து கொள்ளலாம்.
பல்வேறு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய்களை துண்டு துண்டாக நறுக்கி அதில் இனிப்பு சேர்த்து செய்யப்படும் இந்த அல்வா உடலுக்கு வலு சேர்த்து குளிர்ச்சியை தருகிறது.
இரும்புச் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழங்கள், நெய், கோதுமை மாவு மற்றும் பாதாம் ஆகியவற்றை கொண்டு தயார் செய்யப்படும் இந்த இனிப்பு, சுவையான மற்றும் ஆரோக்கியமான விருந்தாக இருக்கிறது.
சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் நெல்லை அல்வாவின் மறுவடிவம் தான் கருப்பட்டி அல்வா. கருப்பட்டியில் உள்ள அதிக கால்சியம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
ஊற வைக்கப்பட்ட சம்பா கோதுமையில் இருந்து நேர்த்தியான முறையில் பால் எடுக்கப்பட்டு, அதனுடன் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் இந்த அல்வா தான் நெல்லை மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் அல்வா ஆகும்.