English

மண் மணம் மாறா பாரம்பரிய உணவுகள்

திருநெல்வேலினு சொன்ன உடனே எல்லாருக்கும் ஞாபகம் வருவது அல்வா. அல்வா மட்டும் இல்லைங்க!
இங்க சொதி குழம்பு சாப்பாடு, கூட்டாஞ்சோறு, உளுந்தம்பருப்பு சோறு இன்னும் நிறைய மண் மணம் மாறாத உணவு வகைகள் இருக்கு. அதுபற்றிய தகவல்களை இங்கு நாம் காணலாம்.

நெல்லை பிரபல உணவு வகைகள்

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்

சூடான வெள்ளை சாதத்தை சிறு மலை போல வாழை இலையில் பரப்பி, நடுவில் குழி பறித்து நீச்சல்குளம் போல அதில் சொதி குழம்பை ஊற்றி சாப்பிடும் ரசனை மிக்கவர்கள் திருநெல்வேலிக்காரர்கள்!
பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
 • சப்பாத்தியை தயார் செய்து சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் அது நீண்ட நேரத்திற்கு சூடாக இருக்கும்.
 • சேனைகிழங்கை சீக்கிரம் வேக வைப்பதற்கு, வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
 • உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
 • தயிர் அதிகம் புளிக்காமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைக்கலாம்.
 • கோதுமை மாவில் வண்டு வராமல் இருக்க அதில் சிறிதளவு உப்பை கலந்து வைக்கலாம்.
 • இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் தலை கீழாக மாவிற்குள் போட்டு வைக்கலாம். இதனால் மாவு இரண்டு நாட்கள் வரை கெடாமலும், பளககமலம இரககம.
 • இட்லி மாவு மிருதுவாக இருக்க, மாவு அரைக்கும் போது சிறிது வெண்டக்காய் துண்டுகளை சேர்த்து அரைக்கலாம்.
 • குக்கரில் சாதம் வைக்கும் போது நிறம் மாறாமல் இருக்க தண்ணிரில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
 • பாஸ்மதி அரிசியை குக்கரில் வைக்கும் போது, சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வேக வைத்தால், சாதம் நன்றாக உதிரி உதிரியாக வெந்து வரும்.
 • சப்பாத்திக்கு மாவு பிசையும் போது வெந்நீர் ஊற்றி பிசைந்தால், சப்பாத்தி மிகவும் மென்மையாக இருக்கும்.
அறுசுவை நெல்லை உணவுகள்
 • புளியில்லா குழம்பு - சுட்ட அப்பளம்
 • முழு உளுந்து தோசை - பச்சை மிளகாய் துவையல்
 • சொதி குழம்பு - இஞ்சி பச்சடி
 • கூட்டாஞ்சோறு - தயிர் பச்சடி
 • உளுந்தம் பருப்பு சோறு - எள்ளு துவையல்
 • இடியாப்பம் - சொதி
 • இட்லி - கத்திரிக்காய் கிச்சடி
 • இடிசாம்பார் - அவியல்

தற்போதைய பதிவுகள்

உங்களுக்குப் பிடித்தமான திருநெல்வேலி இனிப்புகள், பாரம்பரிய உணவுகள் மற்றும் பலகாரங்கள் ஆகியவற்றை பற்றிய செய்முறை குறிப்புகள் பற்றி இங்கு காணலாம். இந்த உணவுகளை நீங்களே செய்யவும், உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் எங்கள் தற்போதைய பதிவுகளை தவறாமல் படியுங்கள்!

நெல்லை சமையல் குறிப்புகள்

கருப்பட்டி குழல் புட்டு
புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு தமிழகத்தின் தென் மாநிலங்களிலும் மிகவும் பிரசித்தம் ஆகும். கேரளாவில் புட்டுக்கு தொட்டுக்கொள்ள அப்பளம், நேந்திரம் பழம், பாசி பயறு மற்றும் கடலை கறி பயன்படுத்த படும் வேளையில் திருநெல்வேலி பகுதியில் கருப்பட்டி மற்றும் தேங்காய் பூ கலந்து புட்டு தயார் செய்யப்படும். இப்போது நாம் திருநெல்வேலி பகுதிகளில் பிரபலமான கருப்பட்டி குழல் புட்டு செய்யும் முறை […]
மேலும் படிக்க
நெல்லிக்காய் சாதம்
நெல்லிக்காய் சாதம் மதிய உணவுக்கு ஏற்ற சத்தான சாப்பாடு ஆகும். இது எலுமிச்சை சாதம் மற்றும் மாங்காய் சாதம் செய்முறையுடன் ஒத்து போகும் விதத்தில் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் அதிக அளவில் நம் உணவில் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எனவே நெல்லிக்காயை கொண்டு சாதம் சமைக்கும் முறை பற்றி இங்கு நாம் காணலாம். தேவையான பொருட்கள்: சாப்பாடு அரிசி - இரண்டு கப். நெல்லிக்காய் - 10 […]
மேலும் படிக்க
புளி மிளகாய் கீரை குழம்பு
திருநெல்வேலியில் புளி மிளகாய் கீரை குழம்பு மிகவும் பிரசித்தம். இது புளி, மிளகாய் வத்தல், அரைக்கீரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த குழம்பின் செய்முறையும் மிகவும் எளிது தான். இதற்காக ரொம்ப மெனக்கிட வேண்டியதில்லை. சுமார் இருபது நிமிடத்தில் இந்த குழம்பை தயார் செய்து விடலாம். இந்த குழம்பு தயார் செய்ய அரைக் கீரைகளை முன்பே சுத்தம் செய்து வைத்துக் கொண்டால், அதை தயாரிப்பது மிகவும் எளிதானது. இப்போது நாம் இந்த புளி மிளகாய் கீரை குழம்பு […]
மேலும் படிக்க
திருநெல்வேலி கார வடை
கார வடை (Nellai famous food / Kara vadai) என்பது மிகக் குறைந்த பொருட்களை பயன்படுத்தி எளிதாக தயார் செய்யப்படும் பதார்த்தம் ஆகும். இது பட்டாணி பருப்பு, உருட்டு பருப்பு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வடையில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்க்கப்படுவதால் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மொறுமொறுப்பான வெளிப்புற அமைப்பு மற்றும் மென்மையான உள்புற அமைப்பு கொண்ட இந்த கார வடையின் ருசிக்கு அடிமையாகாதவர்கள் […]
மேலும் படிக்க
சுசியம்
சுசியம் என்பது தென்தமிழகத்தில் பண்டிகை காலத்தில் பிரபலமாக தயார் செய்யப்படும் ஒரு இனிப்பு வகை ஆகும். இது வழக்கமாக கொழுக்கட்டை மற்றும் போலிக்கு பயன்படுத்தப்படும் கடலை பருப்பு பூரணத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சுசியத்தின் மிருதுவான வெளிப்புற அடுக்கு மைதா மாவு கலவையின் மூலம் தயாரிக்கப்படுகிறது. சில இடங்களில் இட்லி மாவு கலவையும் சுசியத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதே சுசியத்தை கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசி பயிறு பயன்படுத்தி செய்யும் வழக்கமும் இருக்கிறது. எது எப்படியோ இங்கு திருநெல்வேலி […]
மேலும் படிக்க
இனிப்பு பிடி கொழுக்கட்டை
இனிப்பு பிடி கொழுக்கட்டை என்பது அரிசியினால் செய்யப்படும் பாரம்பரிய இனிப்பு வகை ஆகும். இந்த கொழுக்கட்டை இனிப்பை விரும்பும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. எனவே இது ஒரு நல்ல மாலை சிற்றுண்டியாக விளங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. பொதுவாக இந்த இனிப்பு பிடி கொழுக்கட்டை கார்த்திகை தீபம், விநாயகர் சதுர்த்தி மற்றும் வரலக்ஷ்மி விரதம் ஆகிய விழாக்காலங்களில் வீடுகளில் பிரபலமாக தயார் செய்யப்படும். இங்கு நாம் இந்த இனிப்பு கொழுக்கட்டையை வீட்டில் எளிதாக தயாரிக்கும் செய்முறை […]
மேலும் படிக்க
1 2 3 4
மேலும் படிக்க

நெல்லை உணவு கேலரி

உதவிக்கு அழைக்க
 • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
 • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
 • போக்குவரத்து காவல்துறை : 103
 • மருத்துவ உதவி எண் : 104
 • தீயணைப்பு துறை : 101
 • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
 • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
 • குழந்தைகள் நலம் : 1098
 • பாலியல் துன்புறுத்தல் : 1091
 • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

பார் போற்றும் பாரம்பரிய சுவை - திருநெல்வேலியின் தனித்துவம்!

திருநெல்வேலி மக்கள் உணவுகளை ரசித்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். பாரம்பரிய உணவுப் பழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வரும். இங்கு ஆச்சிகள் வகுத்த சமையல் குறிப்புகள் இன்று வரை பின்பற்றப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நகரமும் அதன் சொந்த சமையல் பாணி மற்றும் செய்முறையைக் கொண்டுள்ளது, இது உணவின் மீதான தீவிர ரசனையை பிரதிபலிக்கிறது. உண்மையில் திருநெல்வேலி உணவுகள் பார் போற்றும் பாரம்பரிய சுவை கொண்டதாக திகழ்கிறது.
அறுசுவைக்கு விருந்தளிக்கும் உணவுகள்
 • சுடச்சுட கருப்பட்டி பணியாரம்!
 • நெய் மணக்கும் அல்வா!
 • தித்திக்கும் திருப்பாகம்!
 • தேங்காய் பாலில் சொதி குழம்பு!
 • காரசாரமான கூட்டாஞ்சோறு!
 • ஆரோக்கியமான உளுந்தஞ்சோறு!
இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு? மேலும் தெரிந்துகொள்ள எங்கள் பதிவுகளை காணுங்கள்!
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top magnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram