Logo of Tirunelveli Today
English

திருக்கோவில்கள்

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் பற்றிய தகவல்கள்.

பிரசித்தி பெற்ற கோவில்கள்

ஆன்மீக குறிப்புக்கள்

முக்கிய விரத நாட்கள், விசேஷ நாட்கள், கோவில் திருவிழாக்கள், உற்சவங்கள் பற்றிய குறிப்புக்கள்.
முக்கிய விழாக்கள்

ஆனி தேரோட்டம்:
தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேர் என்று சிறப்பிக்கப்படும் ராஜ தேரில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருள தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

காந்திமதி அம்மை ஆடிப்பூரம் முளைக்கொட்டு உற்சவம்:
ஆடிப்பூரம் அன்று மாலை அம்மன் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மை எழுந்தருள முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

திருப்புடைமருதூர் தைப்பூச தீர்த்தவாரி:
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவிலில் தைப்பூசம் அன்று பகலில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெறும்.

ஐப்பசி தபசு / திருக்கல்யாணம் விழா:
திருநெல்வேலி காந்திமதி அம்மை திருக்கோவிலில் ஐப்பசி பூரம் அன்று தபசு விழாவும், மறுநாள் ஐப்பசி உத்திரம் அன்று திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.

பாளையங்கோட்டை தசரா விழா:
மைசூருக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் உள்ள 12 அம்மன் கோவில்களிலிலும் ஒன்றாக சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஆழ்வார்திருநகரி வைகாசி விசாக திருவிழா:
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் நவதிருப்பதிகளில் இருந்து ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளி கருட சேவை காட்சியருள்வார்கள்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா:
அசுரரை வென்று தேவர்களை காத்த குமரப்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெறும்.

நாங்குநேரி தை அமாவாசை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் தை மாதம் வரும் அமாவாசை அன்று ஒரு கோட்டை தூய நல்லெண்ணெயால் காப்பு செய்விக்கப்படும். இந்த எண்ணெய் கோவிலில் உள்ள எண்ணெய் கிணற்றில் சேமிக்கப்படும்.

முக்கிய விரதங்கள்

சிவ விரதங்கள்

  • ஆனி உத்திரம்
  • சிவராத்திரி, பிரதோஷ விரதம்
  • கேதாரகௌரி விரதம்

விநாயகர் விரதங்கள்

  • சதுர்த்தி விரதம்
  • விநாயகர் நவராத்திரி விரதம்
  • சங்கடஹர சதுர்த்தி விரதம்
  • பிள்ளையார் நோன்பு (குமார சஷ்டி விரதம்)

சக்தி விரதங்கள்

  • நவராத்திரி, வரலட்சுமி நோன்பு
  • ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய்
  • பங்குனித் திங்கள், மாசி மகம்
கந்த விரதங்கள்
  • கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை
  • வைகாசி விசாகம், தைப்பூசம்
  • திருக்கார்த்திகை விரதம்

தற்போதைய பதிவுகள்

"திங்கள்நாள் விழ மல்கு திருநெல்வேலி" என்று ஞானசம்பந்த பெருமான் பாடிய திருநெல்வேலி கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், விசேஷ வழிபாடுகள், உற்சவங்கள் பற்றிய தகவல்கள்.

ஆலய தரிசனம்

சேரன்மகாதேவி அம்மநாதர் சுவாமி திருக்கோவில்
சேரன்மகாதேவி அம்மநாதர் சுவாமி திருக்கோவில். நவகைலாய ஸ்தலங்களில் இரண்டாம் தலமான சேரன்மகாதேவி அம்மநாதசுவாமி திருக்கோவில். சுவாமி: அம்மநாதர், அம்மை: ஆவுடையம்மை, திருக்கோவில் விருட்சம்: ஆல மரம், தீர்த்தம்: தாமிரபரணி - வியாச தீர்த்த கட்டம். தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் இரண்டாவது […]
மேலும் படிக்க
Kodaganallur Kailasanathar Thirukovil
கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோயில் கார்க்கோடகன் வழிபட்ட கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர், அம்மை: சிவகாமி அம்மை, சிறப்பு சன்னதி: ஆனந்த கெளரி அம்மன், திருக்கோவில் விருட்சம்: வில்வம், தீர்த்தம்: தாமிரபரணி. தல வரலாறு : முற்காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இந்த பகுதியில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருந்தார். ஒரு நாள் அந்த முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அந்த முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான சமித்துகளை சேகரிப்பதற்காக, அந்த முனிவரின் மகன் […]
மேலும் படிக்க
Ambalavanapuram Ulakkarisi Pillaiyar Kovil
அம்பலவாணபுரம் உழக்கரிசி பிள்ளையார் கோவில் (Ambalavanapuram Uzhakkarisi Pillayar Temple) திருநெல்வேலி மாவட்டம் - அம்பலவாணபுரம்., உழக்கரிசி விநாயகர் (எ) கருணை விநாயகர் திருக்கோவில். திருக்கோவில் வரலாறு (Karunai Vinayagar Temple History): முற்காலத்தில் அம்மையப்பர் திருமணத்தின் போது தாழ்ந்த தென் பகுதியை சமன் செய்ய பொதிகை மலை பகுதிக்கு வந்தார் தமிழ் முனிவர் அகத்தியர். அப்போது பல தெய்வங்களை இந்த பகுதியில் பிரதிட்சை செய்து வணங்கினார் அவர். அதுபோலவே அகத்தியர் பிரதிஷ்டை செய்து வணங்கிய பிள்ளையார் […]
மேலும் படிக்க
Vittalapuram Temple
விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோவில் (Vittalapuram Pandurangan Temple) ‘தென் நாட்டு பண்டரிபுரம்’ என்று சிறப்பிக்கப்படும் விட்டிலாபுரம் பாண்டுரங்க பெருமாள் கோவில். மூலவர்: பாண்டுரங்க விட்டலேஸ்வரர். உற்சவர்: பாண்டுரங்கன். தாயார்: ருக்மணி, சத்யபாமா. தீர்த்தம்: தாமிரபரணி. விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோவில் தல வரலாறு : (Vittalapuram Pandurangan Temple History) முற்காலத்தில் விஜய நகரப் பேரரசு மிகவும் சிறப்பாக விளங்கியது. அந்த காலத்தில் விட்டலராயர் என்னும் அரசன், தாமிரபரணி ஆற்றின்கரையில் உள்ள பகுதியை முறப்பநாட்டை தலைநகராக கொண்டு ஆட்சி […]
மேலும் படிக்க
Pappankulam Thiruvenkadar Sivan Kovil
பாப்பாங்குளம் திருவெண்காடர் சிவன் கோவில் சந்திர காந்த கல் திருமேனியராக ஈசன் உறையும் பாப்பாங்குளம் (மடவார் விளாகம்) திருவெண்காடர் திருக்கோவில். சுவாமி : திருவெண்காடர். அம்மை : வாடாகலை நாயகி. தல விருட்சம் : வில்வம். தீர்த்தம் : கடனா நதி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் பாண்டிய மன்னர் ஆதித்தவர்மன் என்பவர் சிறந்த சிவஙபக்தராக திகழ்ந்தார். அவர் பல சிவன் திருக்கோவில்களை கட்டி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். அவர் கட்டிய கோயில்களை சதுர்வேதி என்ற சிற்பி வடிவமைத்தார். […]
மேலும் படிக்க
Sivalaperi Sundarraja Perumal Kovil(சீவலப்பேரி சுந்தரராஜ பெருமாள் கோவில்)
சீவலப்பேரி சுந்தரராஜ பெருமாள் கோவில்(Sivalaperi Sundarraja Perumal Temple) தென் திருமாலிருஞ்சோலை என்று சிறப்பிக்கப்படும்., சீவலப்பேரி அழகர் கோவில். மூலவர்: சுந்தரராஜ பெருமாள். உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி உடனாய அழகர் பெருமாள். தீர்த்தம்: தாமிரபரணி சக்கர தீர்த்தக் கட்டம். சிறப்பு: கருட வாகனம், திரி சங்கு. சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் வரலாறு: (Sundarraja Perumal Temple History) முற்காலத்தில் கயிலாயத்தில் நடைபெற்ற அம்மையப்பர் திருமணம் காண அனைவரும் ஒரே இடத்தில் குழுமியதால், வடதிசை தாழ்ந்து […]
மேலும் படிக்க
1 4 5 6 7 8 14
மேலும் படிக்க

சைவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

வைஷ்ணவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

திருக்கோவில்கள் புகைப்படத்தொகுப்பு

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

தாமிரபரணி நதிக்கரை திருக்கோவில்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தன்பொருநை என்று சிறப்பிக்கப்படும் தாமிரபரணி நதிக்கரையில் எண்ணற்ற பழம்பெருமை வாய்ந்த சிவன் திருக்கோவில்கள், விஷ்ணு திருக்கோவில்கள், கிராம தெய்வங்களின் திருக்கோவில்கள், சாஸ்தா திருக்கோவில்கள், அம்மன் திருக்கோவில்கள், முருகன் திருக்கோவில்கள், விநாயகர் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப்பெற்ற திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை இங்கு நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம்.
திக்கனைத்தும் திருக்கோவில்கள்
  • நவதிருப்பதி
  • நவகைலாயம்
  • ஆதி நவகைலாயம்
  • பஞ்ச குரோச ஸ்தலங்கள்
  • பஞ்ச விக்ரக ஸ்தலங்கள்
  • பஞ்ச பூத ஸ்தலங்கள்
  • பஞ்ச ஆசன ஸ்தலங்கள்
  • நவசமுத்திர ஸ்தலங்கள்
  • முப்பீட ஸ்தலங்கள்
  • சாஸ்தா திருத்தலங்கள்
என திக்கனைத்திலும் திருக்கோவில்களை கொண்டது திருநெல்வேலி!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top calendar-fullmagnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram