Logo of Tirunelveli Today
English

திருக்கோவில்கள்

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் பற்றிய தகவல்கள்.

பிரசித்தி பெற்ற கோவில்கள்

ஆன்மீக குறிப்புக்கள்

முக்கிய விரத நாட்கள், விசேஷ நாட்கள், கோவில் திருவிழாக்கள், உற்சவங்கள் பற்றிய குறிப்புக்கள்.
முக்கிய விழாக்கள்

ஆனி தேரோட்டம்:
தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேர் என்று சிறப்பிக்கப்படும் ராஜ தேரில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருள தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

காந்திமதி அம்மை ஆடிப்பூரம் முளைக்கொட்டு உற்சவம்:
ஆடிப்பூரம் அன்று மாலை அம்மன் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மை எழுந்தருள முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

திருப்புடைமருதூர் தைப்பூச தீர்த்தவாரி:
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவிலில் தைப்பூசம் அன்று பகலில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெறும்.

ஐப்பசி தபசு / திருக்கல்யாணம் விழா:
திருநெல்வேலி காந்திமதி அம்மை திருக்கோவிலில் ஐப்பசி பூரம் அன்று தபசு விழாவும், மறுநாள் ஐப்பசி உத்திரம் அன்று திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.

பாளையங்கோட்டை தசரா விழா:
மைசூருக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் உள்ள 12 அம்மன் கோவில்களிலிலும் ஒன்றாக சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஆழ்வார்திருநகரி வைகாசி விசாக திருவிழா:
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் நவதிருப்பதிகளில் இருந்து ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளி கருட சேவை காட்சியருள்வார்கள்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா:
அசுரரை வென்று தேவர்களை காத்த குமரப்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெறும்.

நாங்குநேரி தை அமாவாசை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் தை மாதம் வரும் அமாவாசை அன்று ஒரு கோட்டை தூய நல்லெண்ணெயால் காப்பு செய்விக்கப்படும். இந்த எண்ணெய் கோவிலில் உள்ள எண்ணெய் கிணற்றில் சேமிக்கப்படும்.

முக்கிய விரதங்கள்

சிவ விரதங்கள்

  • ஆனி உத்திரம்
  • சிவராத்திரி, பிரதோஷ விரதம்
  • கேதாரகௌரி விரதம்

விநாயகர் விரதங்கள்

  • சதுர்த்தி விரதம்
  • விநாயகர் நவராத்திரி விரதம்
  • சங்கடஹர சதுர்த்தி விரதம்
  • பிள்ளையார் நோன்பு (குமார சஷ்டி விரதம்)

சக்தி விரதங்கள்

  • நவராத்திரி, வரலட்சுமி நோன்பு
  • ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய்
  • பங்குனித் திங்கள், மாசி மகம்
கந்த விரதங்கள்
  • கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை
  • வைகாசி விசாகம், தைப்பூசம்
  • திருக்கார்த்திகை விரதம்

தற்போதைய பதிவுகள்

"திங்கள்நாள் விழ மல்கு திருநெல்வேலி" என்று ஞானசம்பந்த பெருமான் பாடிய திருநெல்வேலி கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், விசேஷ வழிபாடுகள், உற்சவங்கள் பற்றிய தகவல்கள்.

ஆலய தரிசனம்

செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா திருக்கோவில்
திருநெல்வேலி அருகில் உள்ள செய்துங்கநல்லூர் ஸ்ரீ சுந்தரபாண்டிய சாஸ்தா திருக்கோவில். மூலவர்: ஸ்ரீ சுந்தரபாண்டிய சாஸ்தா. பரிவார மூர்த்திகள்: தளவாய் மாடசாமி அம்மன், கருத்தசாமி, கருத்த அம்மன், பேச்சியம்மன், பிரம்மராட்சி அம்மன், இசக்கியம்மன், சுடலைமாடன், மாடத்தி அம்மன், பாதாளகண்டி அம்மன், பலவேஷக்கார சாமி, வன்னியசாமி, வன்னியச்சி அம்மன், முண்டன்சாமி, சப்த கன்னியர், ஆழிபூதத்தேவர். அருகிலுள்ள கோவில்கள் (Nearby Temples) by Car Shri Pandurangan Temple Manakkadu murugavudayar sastha Kovil Sri Kailasanathar Temple, Murappanadu […]
மேலும் படிக்க
திருமலாபுரம் குகைக் கோயில்(Thirumalapuram Cave Temple)
திருநெல்வேலி அருகில் உள்ள சங்கரன்கோவில் தாலுகாவில் அமைந்துள்ளது திருமலாபுரம் குகை கோவில். பாறையைக் குடைந்து வெட்டப்பட்ட இந்தத் திருமலாபுரம் குகைக் கோயில் "வாரணாசிமலை" என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பழங்கால குகை கோயில் இப்போது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கூட மக்கள் இங்கு வாழ்ந்துள்ளார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் தொல்பொருள் சான்றுகள் இங்குக் கிடைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியிலிருந்து தோண்டப்பட்ட கற்கால கருவிகள் இந்த உண்மைக்குச் சாட்சியம் அளிக்கின்றன. பாறையைக் […]
மேலும் படிக்க
மேலவீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில்(Melaveeraragavapuram Varadharaja Perumal Temple)
மூலவர்: ஸ்ரீ வீரராகவப் பெருமாள். உற்சவர்: ஸ்ரீ தேவி - பூ தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள். தாயார்கள்: வேதவல்லி தாயார், பெருந்தேவி தாயார். தீர்த்தம்: வீரராகவ தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம். மேலவீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வரலாறு(History of Melaveeraragavapuram Varadharaja Perumal Temple): முற்காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்த இந்த பகுதியைச் சந்திர வம்சத்து அரசரான கிருஷ்ணவர்மன் என்னும் மன்னன் நீதி, நெறி தவறாமல் செங்கோல் செலுத்தி ஆட்சி செய்து வந்தான். […]
மேலும் படிக்க
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் (Karaiyar Sorimuthu Ayyanar Temple)
சொரிமுத்து அய்யனார் கோவில் (Sorimuthu Ayyanar Temple) திருநெல்வேலி மாவட்டம்., காணிக் குடியிருப்பு சொரி முத்து அய்யனார் திருக்கோவில். மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை சரகத்தின் அடர்ந்த வனப் பகுதிக்குள் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப் பெற்றுள்ள முதல் திருக்கோவிலாக விளங்கி வருகிறது சொரி முத்து அய்யனார் கோவில். சுவாமி பெயர்: மகா லிங்க சுவாமி. சாஸ்தா பெயர்: பூர்ணா, புஷ்கலா உடனுறை சொரி முத்து அய்யனார். தெற்கு தனி சன்னதி: சங்கிலி பூதத்தார் மற்றும் […]
மேலும் படிக்க
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா "திங்கள் நாள் விழா மல்கு திருநெல்வேலி" என்று சம்மந்தர் பாடிய திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவிலில் அனைத்து மாதங்களும் திருவிழாக்கள் தான். தற்போது திருநெல்வேலி சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் பங்குனி மாதம் 5 (18/03/2021) ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சிவாலயம் என்று போற்றப்படும் […]
மேலும் படிக்க
குல சாஸ்தா, குல தெய்வம் கோவில்கள் பற்றிய தொகுப்பு
குல சாஸ்தா, குல தெய்வம் கோவில்கள் பற்றிய தொகுப்பு திருநெல்வேலி ஜில்லா என்று பொதுவாக அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் நாஞ்சில் நாடு  என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ வழிபாடு செய்வது விசேஷமாக நடைபெறும். இதற்காக அன்று இந்தப் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல சாஸ்தா கோவில் இருக்கும், அந்தக் குடும்பத்திற்கென ஒரு குலதெய்வமும் இருக்கும். பெரும்பாலும் சாஸ்தா கோவில்கள் […]
மேலும் படிக்க
மேலும் படிக்க

சைவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

வைஷ்ணவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

திருக்கோவில்கள் புகைப்படத்தொகுப்பு

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

தாமிரபரணி நதிக்கரை திருக்கோவில்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தன்பொருநை என்று சிறப்பிக்கப்படும் தாமிரபரணி நதிக்கரையில் எண்ணற்ற பழம்பெருமை வாய்ந்த சிவன் திருக்கோவில்கள், விஷ்ணு திருக்கோவில்கள், கிராம தெய்வங்களின் திருக்கோவில்கள், சாஸ்தா திருக்கோவில்கள், அம்மன் திருக்கோவில்கள், முருகன் திருக்கோவில்கள், விநாயகர் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப்பெற்ற திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை இங்கு நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம்.
திக்கனைத்தும் திருக்கோவில்கள்
  • நவதிருப்பதி
  • நவகைலாயம்
  • ஆதி நவகைலாயம்
  • பஞ்ச குரோச ஸ்தலங்கள்
  • பஞ்ச விக்ரக ஸ்தலங்கள்
  • பஞ்ச பூத ஸ்தலங்கள்
  • பஞ்ச ஆசன ஸ்தலங்கள்
  • நவசமுத்திர ஸ்தலங்கள்
  • முப்பீட ஸ்தலங்கள்
  • சாஸ்தா திருத்தலங்கள்
என திக்கனைத்திலும் திருக்கோவில்களை கொண்டது திருநெல்வேலி!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top calendar-fullmagnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram