Logo of Tirunelveli Today
English

அல்வா!

திருநெல்வேலி அப்படினு சொன்னாலே அல்வாவும், அல்வா அப்படினு சொன்னாலே திருநெல்வேலியும் தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு திருநெல்வேலியும், அல்வாவும் பிரிக்க முடியாத இரட்டையர்கள்!

நெல்லை பிரபல அல்வா வகைகள்

திருநெல்வேலி அல்வா என்றாலே தித்திக்கும் அல்லவா!

திருநெல்வேலி அல்வா என்றால் நாக்கில் வைத்த உடன் அப்படியே தொண்டைக்குழி வழியாக வழுக்கி இடை நிறுத்தம் இல்லாமல் வயிற்றுக்குள் சென்று விழ வேண்டும் என்பது எழுதப்படாத விதி!
அல்வா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:
  • திருநெல்வேலி என்றாலே பிரபலமானது அல்வா தான். திருநெல்வேலியில் அல்வாவிற்கு பிரபலமானது இருட்டுக்கடை தான்.
  • தினமும் அந்தி சாயும் நேரத்தில் திறக்கப்படும் இந்த கடைக்குள் பழங்காலத்தில் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்திகள் மட்டுமே ஏற்றி வைக்கப்படுமாம்.
  • இன்றும் கூட, அதன் பாரம்பரியத்தை தக்க வைத்துக் கொள்ள ஒரு சிறு மஞ்சள் பல்பு மட்டுமே கடைக்குள் ஒளிர்கிறது. இதனால் தான் இதற்கு இருட்டு கடை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
  • இருட்டுக்கடை அல்வா தயாரிப்பில் கோதுமை பாலை பிழிந்து எடுக்க எந்த இயந்திரத்தையும் இன்று வரை பயன்படுத்துவதில்லை. கைகளால் உரலில் ஆட்டி தான் பால் எடுக்கப்படுகிறது.
  • இருட்டுக்கடையின் அல்வா ருசிக்கு திருநெல்வேலியில் பாயும் தாமிரபரணி தண்ணீரும், பாரம்பரியம் மாறாத செய்முறையும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
  • திருநெல்வேலியில் நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு எதிரில் அமையப்பெற்றுள்ள இருட்டுக்கடைக்கு வேறு எங்குமே கிளைகள் கிடையாது.
அல்வா வகைகள்
  • கேரட் அல்வா
  • கோதுமை அல்வா
  • பாதாம் அல்வா
  • மாம்பழ அல்வா
  • ஓட்ஸ் அல்வா
  • பிரட் அல்வா
  • சுரைக்காய் அல்வா
  • பாசி பருப்பு அல்வா
  • ஆப்பிள் அல்வா
  • பால் அல்வா
  • அண்ணாச்சி பழ அல்வா
  • பீட்ரூட் அல்வா
  • கருப்பட்டி அல்வா
  • சீனிக்கிழங்கு அல்வா
  • வாழைப்பழ அல்வா
  • பப்பாளி அல்வா
  • கேப்பை அல்வா
  • பூசணி அல்வா
  • கேரட் அல்வா
  • கோதுமை அல்வா
  • பாதாம் அல்வா
  • மாம்பழ அல்வா
  • ஓட்ஸ் அல்வா
  • பிரட் அல்வா
  • சுரைக்காய் அல்வா
  • பாசி பருப்பு அல்வா
  • ஆப்பிள் அல்வா
  • பால் அல்வா
  • அண்ணாச்சி பழ அல்வா
  • பீட்ரூட் அல்வா
  • கருப்பட்டி அல்வா
  • சீனிக்கிழங்கு அல்வா
  • வாழைப்பழ அல்வா
  • பப்பாளி அல்வா
  • கேப்பை அல்வா
  • பூசணி அல்வா

தற்போதைய பதிவுகள்

திருநெல்வேலிக்கு வருகை தரும் அனைவருமே இங்கு கிடைக்கும் சுவையான அல்வாவை வாங்கி கொண்டு தான் வீடு திரும்புவார்கள். திருநெல்வேலி அல்வாவுக்கு என்று தனி சுவையும் தரமும் இருப்பதால், அனைவருக்குமே அல்வா என்றால் கொள்ளை பிரியமாக தான் இருக்கும். அல்வா தயார் செய்ய பயன்படுத்தும் சம்பா கோதுமை மற்றும் தாமிரபரணி தண்ணீர் தான் அதன் தனித்துவமான சுவைக்கு காரணம். அல்வா பற்றிய எங்கள் தற்போதைய பதிவுகள் உங்களுக்கு சுவாரசியமான தகவல்களை வழங்குகிறது.

நெல்லை பிரசித்தி பெற்ற அல்வா கடைகள்

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வரலாறு (History of Tirunelveli Iruttukadai Halwa)
திருநெல்வேலியில் உள்ள இருட்டுக்கடை என்னும் அல்வா கடை உலக புகழ் பெற்றதாகும். இருட்டுக்கடை அல்வா என்றாலே உள்ளூர் மக்கள் முதல் வெளியூர் மக்கள்வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறி விடும். அந்த அளவுக்குப் பிரசித்தி பெற்ற இந்த இருட்டுக்கடையானது நெல்லை மாநகரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய பாடல் பெற்ற சிவாலயமான நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே அமையப்பெற்றுள்ளது. தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து செயல்பட்டு வரும் இந்த இருட்டுக்கடை பற்றியும், அதன் சுவைமிக்க அல்வாவை பற்றியும் சுவாரசியமான […]
மேலும் படிக்க
Read More

கேலரி

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

திருநெல்வேலி அல்வாவை சுவைக்க வாருங்கள்!

திருநெல்வேலிக்கு செல்லும் போதெல்லாம் அல்வா பற்றிய சிந்தனை உங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு திருநெல்வேலியும் அல்வாவும் பிரிக்க முடியாத ஜோடியாக இருக்கிறது. இங்குள்ள பாரம்பரிய இருட்டுக்கடையில் சுருட்டிய துண்டு வாழை இலையில் விற்கப்படும் சூடான அல்வாவை ஒருமுறை சுவைத்தால், மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்!
திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற அல்வா கடைகள்
  • இருட்டுக்கடை அல்வா.
  • சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா.
  • லெட்சுமி விலாஸ் அல்வா.
  • சந்திர விலாஸ் அல்வா.
  • வெள்ளூர் பிள்ளை கடை அல்வா.
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top magnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram