பண்டைய தமிழ்நாட்டில் வாழ்ந்த பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவர் அகஸ்திய முனிவர். தாமிரபரணி நதியின் பிறப்பிடமான பொதிகை மலையில் தவம் செய்தபோது , உரோமச மகரிஷி முக்தி அடைய விரும்பி,அவருடைய குருவான அகஸ்தியரை வேண்டுகின்றார். அகஸ்திய முனிவரும் புனிதமான தாமிரபரணியில் ஒன்பது மலர்களை மிதக்க விடுமாறும், அந்த ஒவ்வொரு மலர்களும் கரையை அடையும் இடத்தில் சிவன் கோவில் கட்டினால் முக்தி பெறலாம் என்று கூற ..உரோமச மகரிஷி அதன்படி மலர்களை மிதக்க விடுகிறார் அவைகள் கரையில் சேரும் இடங்களில் சிவபெருமான் கோவில் கட்டுகிறார் அவையே நவ கைலாசம் திரு கோவில்களாக திகழ்கின்றது.
முதல் மலர் அடைந்த இடம் - பாபநாசம் (சூரிய தலம்)
2 வது மலர் அடைந்த இடம் - சேரன்மகாதேவி (திங்கள் தலம்)
3 வது மலர் அடைந்த இடம் - கொடகநல்லூர்.(செவ்வாய் தலம்)
4 வது மலர் அடைந்த இடம் - குன்னத்தூர் (ராகு தலம்)
5 வது மலர் அடைந்த இடம் - முறப்பநாடு . (குரு தலம்)
6 வது மலர் அடைந்த இடம் - ஸ்ரீ வைகுண்டம் (சனி தலம்)
7 வது மலர் அடைந்த இடம் - தென்திருப்பேரை (புதன் தலம்)
8 வது மலர் அடைந்த இடம் - ராஜபதி(கேது தலம்)
9 வது மலர் அடைந்த இடம் - சேர்ந்தபூமங்கலம் (சுக்கிரன் தலம்)
உரோமச மகரிஷி ஒன்பது கோவில்களிலும் சிவபெருமானின் திவ்யதரிசனம் பெற்று முக்தி அடைந்தார்.