Logo of Tirunelveli Today
English

திருக்கோவில்கள்

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் பற்றிய தகவல்கள்.

பிரசித்தி பெற்ற கோவில்கள்

ஆன்மீக குறிப்புக்கள்

முக்கிய விரத நாட்கள், விசேஷ நாட்கள், கோவில் திருவிழாக்கள், உற்சவங்கள் பற்றிய குறிப்புக்கள்.
முக்கிய விழாக்கள்

ஆனி தேரோட்டம்:
தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேர் என்று சிறப்பிக்கப்படும் ராஜ தேரில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருள தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

காந்திமதி அம்மை ஆடிப்பூரம் முளைக்கொட்டு உற்சவம்:
ஆடிப்பூரம் அன்று மாலை அம்மன் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மை எழுந்தருள முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

திருப்புடைமருதூர் தைப்பூச தீர்த்தவாரி:
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவிலில் தைப்பூசம் அன்று பகலில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெறும்.

ஐப்பசி தபசு / திருக்கல்யாணம் விழா:
திருநெல்வேலி காந்திமதி அம்மை திருக்கோவிலில் ஐப்பசி பூரம் அன்று தபசு விழாவும், மறுநாள் ஐப்பசி உத்திரம் அன்று திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.

பாளையங்கோட்டை தசரா விழா:
மைசூருக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் உள்ள 12 அம்மன் கோவில்களிலிலும் ஒன்றாக சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஆழ்வார்திருநகரி வைகாசி விசாக திருவிழா:
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் நவதிருப்பதிகளில் இருந்து ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளி கருட சேவை காட்சியருள்வார்கள்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா:
அசுரரை வென்று தேவர்களை காத்த குமரப்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெறும்.

நாங்குநேரி தை அமாவாசை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் தை மாதம் வரும் அமாவாசை அன்று ஒரு கோட்டை தூய நல்லெண்ணெயால் காப்பு செய்விக்கப்படும். இந்த எண்ணெய் கோவிலில் உள்ள எண்ணெய் கிணற்றில் சேமிக்கப்படும்.

முக்கிய விரதங்கள்

சிவ விரதங்கள்

  • ஆனி உத்திரம்
  • சிவராத்திரி, பிரதோஷ விரதம்
  • கேதாரகௌரி விரதம்

விநாயகர் விரதங்கள்

  • சதுர்த்தி விரதம்
  • விநாயகர் நவராத்திரி விரதம்
  • சங்கடஹர சதுர்த்தி விரதம்
  • பிள்ளையார் நோன்பு (குமார சஷ்டி விரதம்)

சக்தி விரதங்கள்

  • நவராத்திரி, வரலட்சுமி நோன்பு
  • ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய்
  • பங்குனித் திங்கள், மாசி மகம்
கந்த விரதங்கள்
  • கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை
  • வைகாசி விசாகம், தைப்பூசம்
  • திருக்கார்த்திகை விரதம்

தற்போதைய பதிவுகள்

"திங்கள்நாள் விழ மல்கு திருநெல்வேலி" என்று ஞானசம்பந்த பெருமான் பாடிய திருநெல்வேலி கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், விசேஷ வழிபாடுகள், உற்சவங்கள் பற்றிய தகவல்கள்.

ஆலய தரிசனம்

Manimoortheeswaram Uchishta Ganapathy Kovil
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோவில் ஆசியாவின் தனிப் பெரும் விநாயகர் கோவில் என்று சிறப்பிக்கப்படும், மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோவில். மூலவர்: ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி. சிறப்பு சன்னதி: சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மை, விநாயகரின் 32 வடிவங்களான, சொர்ண ஆகர்ஷன பைரவர். தீர்த்தம்: தாமிரபரணியின் ரிஷி தீர்த்தக் கட்டம். திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் வித்யாகரன் என்னும் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் படைக்கும் கடவுளான நான்முகனை வேண்டி கடுமையான தவம் புரிந்தான். அவனுடைய தவத்திற்கு இறங்கிய […]
மேலும் படிக்க
Tirunelveli Nellaiappar kovil (Paguthi-6)
முக்கிய திருவிழாக்கள் : இந்த திருக்கோவிலில் வருடத்தின் பன்னிரு மாதங்களும் சிறப்புமிக்க பல உற்சவங்கள் நடைபெற்று வருவதாக தலப் புராணம் விவரித்து கூறுகிறது. இதனை "திங்கள் நாள் விழமல்கு திருநெல்வேலி" என்று திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் புகழ்ந்து பாடிப் போற்றியுள்ளார். சித்திரை மாதம்: சித்திரை மாதம் முதல் நாள், சித்திரை விசு அன்று சுவாமி சந்திரசேகரர் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் எழுந்தருள, தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெறும். (தலப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த உற்சவம் தற்போது நடைபெறவில்லை) […]
மேலும் படிக்க
Tirunelveli Nellaiappar kovil (Paguthi-5)
திருக்கோவில் அமைப்பு - அம்மை சன்னதி: அம்மை சன்னதி ராஜ கோபுரம் வாயில் இருபுறமும் முறையே விநாயகர், சுப்பிரமணியர் சன்னதி இருக்கிறது. அவர்களை வணங்கி உள்ளே சென்றால் அழகிய சிம்ம தூண்களை கொண்ட ஊஞ்சல் மண்டபம் நடுநயமாக இருக்கிறது. அதனை தாண்டி உள்ளே சென்றால் வடக்கு பக்கம் ஆயிரங்கால் மண்டபம் இருக்கிறது. ஊஞ்சல் மண்டபத்துக்கு தெற்கே பொற்றாமைரை தீர்த்தக் குளமும், அத் தீர்த்தத்தின் மேற்கு கரையில் விநாயகர் சன்னதி, மீனாட்சி - சுந்தரேசுவரர் சன்னதி, பொற்றாமரை விநாயகர் […]
மேலும் படிக்க
Tirunelveli Nellaiappar kovil (Paguthi-4)
தாமிர சபை: சிவபெருமான் நடனம் புரிந்த பஞ்ச சபைகளுள் ஒன்றான தாமிர சபை இங்கு அமையப் பெற்றுள்ளது. சுவாமி நெல்லையப்பர் கோவிலின் இரண்டாம் மேல பிரகாரத்தில் உள்ள இந்த சபை, மரத்தால் நிர்மாணிக்கப் பட்டு, செப்பு கூறை வேயப்பட்டு காட்சியளிக்கிறது. இங்கு தான் சுவாமி பிரம்ம தாண்டவம் ஆடியருளியதாக கூறப்படுகிறது. சகஸ்ர லிங்கம்: சுவாமி நெல்லையப்பர் கோவிலின் இரண்டாம் வடக்கு பிரகாரத்தில் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார் சகஸ்ர லிங்க சுவாமி. சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். […]
மேலும் படிக்க
Tirunelveli Nellaiappar kovil (Paguthi-3)
சுவாமி திரு மூல மகாலிங்கர்: இவரே இந்த தலத்தின் ஆதி மூலவர் ஆவார். கிழக்கு நோக்கிய தனி கருவறையில் லிங்கத் திருமேனியராக எழுந்தருளி உள்ள இவருக்கே இன்றும் முதல் வழிபாடு நடைபெறுகிறது. இவருக்கு பூஜைகள் முடிந்த பின்னர் தான் நெல்லையப்பருக்கு பூஜை நடைபெறும். ஆதிப் பிரளய காலத்தில் நான்கு வேதங்களும் இந்த வேணுவனத்தில் உள்ள திரு மூல மகா லிங்கத்தை வணங்கியே அழிவிலாத நிலையப் பெற்றதாக தல புராணம் கூறுகிறது. திருநெல்வேலியில் உள்ள மூல மகா லிங்கமே […]
மேலும் படிக்க
Tirunelveli Nellaiappar kovil (Paguthi-2)
காந்திமதி அம்மை வரலாறு: முற்காலத்தில் உமையம்மை இப் பூவுலக உயிர்கள் உய்யும் பொருட்டு, சிவபெருமானிடம் இரு நாழி நெல் பெற்று, கைலாய மலையை விட்டு நீங்கி, பெருமான் வேண்ட வளர்ந்து திருவிளையாடல் புரிந்த இந்த மூங்கில் காடாகிய வேணு வனம் வந்து., வறியவர்களுக்கு உணவு-உறைவிடம் கொடுத்தல், மகப்பேற்றுக்கு உதவுதல், கற்பவர்களுக்கு உணவளித்தல், பிள்ளைகளைத் தத்து எடுத்து வளர்த்தல், தண்ணீர் பந்தல் அமைத்தல், அடியார்கள் தங்க மடம் அமைத்தல், சுமங்கலி பெண்களுக்கு மங்கலப்பொருட்கள் வழங்குதல், சிறார்களுக்கும்-முதியவர்களுக்கும் பசியாற்றுதல், தாயற்ற […]
மேலும் படிக்க
1 6 7 8 9 10 14
மேலும் படிக்க

சைவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

வைஷ்ணவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

திருக்கோவில்கள் புகைப்படத்தொகுப்பு

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

தாமிரபரணி நதிக்கரை திருக்கோவில்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தன்பொருநை என்று சிறப்பிக்கப்படும் தாமிரபரணி நதிக்கரையில் எண்ணற்ற பழம்பெருமை வாய்ந்த சிவன் திருக்கோவில்கள், விஷ்ணு திருக்கோவில்கள், கிராம தெய்வங்களின் திருக்கோவில்கள், சாஸ்தா திருக்கோவில்கள், அம்மன் திருக்கோவில்கள், முருகன் திருக்கோவில்கள், விநாயகர் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப்பெற்ற திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை இங்கு நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம்.
திக்கனைத்தும் திருக்கோவில்கள்
  • நவதிருப்பதி
  • நவகைலாயம்
  • ஆதி நவகைலாயம்
  • பஞ்ச குரோச ஸ்தலங்கள்
  • பஞ்ச விக்ரக ஸ்தலங்கள்
  • பஞ்ச பூத ஸ்தலங்கள்
  • பஞ்ச ஆசன ஸ்தலங்கள்
  • நவசமுத்திர ஸ்தலங்கள்
  • முப்பீட ஸ்தலங்கள்
  • சாஸ்தா திருத்தலங்கள்
என திக்கனைத்திலும் திருக்கோவில்களை கொண்டது திருநெல்வேலி!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top calendar-fullmagnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram