Logo of Tirunelveli Today
English

Tirunelveli Nellaiappar kovil (Paguthi-6)

முக்கிய திருவிழாக்கள் :

இந்த திருக்கோவிலில் வருடத்தின் பன்னிரு மாதங்களும் சிறப்புமிக்க பல உற்சவங்கள் நடைபெற்று வருவதாக தலப் புராணம் விவரித்து கூறுகிறது.

இதனை "திங்கள் நாள் விழமல்கு திருநெல்வேலி" என்று திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் புகழ்ந்து பாடிப் போற்றியுள்ளார்.

சித்திரை மாதம்:
சித்திரை மாதம் முதல் நாள், சித்திரை விசு அன்று சுவாமி சந்திரசேகரர் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் எழுந்தருள, தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெறும். (தலப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த உற்சவம் தற்போது நடைபெறவில்லை)

சித்திரை முதல் நாள் அன்று இரவு சுவாமி நெல்லையப்பர், அம்மை காந்திமதி உடன் கைலாச பர்வத சன்னதி மேல் எழுந்தருளி காட்சியளிக்க, புது வருட பஞ்சாங்கம் வாசிக்கப்படும்.

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடிய பெளர்ணமி அன்று சுவாமி-நெல்லையப்பர், அம்மை-காந்திமதி, தாமிரபரணி அம்மை, அஸ்திர தேவர், அஸ்திர தேவி, சண்டிகேசுவரர் ஆகியோர்களுடன் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் எழுந்தருள, தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

சித்திரை பெளர்ணமி முடிந்து பின்வரும் பத்து நாட்கள் சுவாமி நெல்லையப்பர், அம்மை காந்திமதி வசந்த மண்டபம் எழுந்தருள வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

வைகாசி மாதம்:

வைகாசி மாதம் விசாகத்தன்று காலை சுவாமி-அம்மைக்கு ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா.

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சண்முகர் - சட்டத் தேர்,
சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி இடப வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி இடப வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்.

ஆனி மாதம்:

Two shots of idol during Ani peru festival: On the left is photo of Pittapurathi Amman idol decorated beautifully in silk and the photo on the right is a distant shot of idol on the chariot.

ஆனி மாதம் இத்தலத்தின் வருடாந்திர உற்சவமாகிய "ஆனி பெருந் திருவிழா" வெகு கோலாகலமாக நடைபெறும்.

இவ்விழாவுக்கு முன்னோட்டமாக வைகாசியில் கிராம தேவதையான பிட்டாபுரத்தி அம்மனுக்கு கொடியேற்றமாகி பத்து நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். அதனை அடுத்து இராத்திரி மூவர் உற்சவம் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெறும்.

ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சுவாமி சன்னதி தங்க கொடிமரத்தில் "ஆனி பெருந் திருவிழா" கொடியேற்றமாகி, பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

ஆனிப் பெருந் திருவிழா நாள் - 1:

காலை:-

ஆனிப் பெருந் திருவிழா கொடியேற்றம்: சுவாமி நெல்லையப்பர் , அம்மை காந்திமதி இருவரும் தங்க பூங்கோவில் சப்பரத்தில் எழுந்தருள சுவாமி சன்னதி தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றமாகி தொடர்ந்து அஷ்ட திக்குகளிலும் கொடியேற்றம்.

இரவு:-

பஞ்சமூர்த்திகள் வீதி உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம், சுவாமி நெல்லையப்பர் - தங்கப் பூங்கோவில் சப்பரம்,
அம்மை காந்திமதி - தங்கப் பூங்கோவில் சப்பரம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்.

ஆனிப் பெருந் திருவிழா நாள் - 2:

காலை:-

பஞ்சமூர்த்திகள் வீதி உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம், சுவாமி நெல்லையப்பர் - வெள்ளிச் சப்பரம்,
அம்மை காந்திமதி - வெள்ளிச் சப்பரம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்

இரவு:-

பஞ்சமூர்த்திகள் வீதி உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம், சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி கற்பக விருட்ச வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி கமல வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்.

ஆனிப் பெருந் திருவிழா நாள் - 3:

காலை:-

பஞ்சமூர்த்திகள் வீதி உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம், சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி கற்பக விருட்ச வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி கமல வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்.

இரவு:-

பஞ்சமூர்த்திகள் வீதி உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம், சுவாமி நெல்லையப்பர் - தங்க பூத வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி சிம்ம வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்.

ஆனிப் பெருந் திருவிழா நாள் - 4:

காலை:-

பஞ்சமூர்த்திகள் வீதி உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம், சுவாமி நெல்லையப்பர் - வெள்ளிக் குதிரை வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளிக் காமதேனு வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்

இரவு:-

பஞ்சமூர்த்திகள் வீதி உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம், சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி இடப வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி இடப வாகனம்,
63 நாயன்மார்கள் - மரச் சப்பரங்கள்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்.

"With a backdrop of trees and a clear blue sky, this colourful temple gopuram stands out. "

ஆனிப் பெருந் திருவிழா நாள் - 5:

காலை:-

பஞ்சமூர்த்திகள் வீதி உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம், சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி இடப வாகனம் ,
அம்மை காந்திமதி - வெள்ளி இடப வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்.

இரவு:-

பஞ்சமூர்த்திகள் வீதி உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம், சுவாமி நெல்லையப்பர் - இந்திர விமான வாகனம்,
அம்மை காந்திமதி - இந்திர விமான வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்.

ஆனிப் பெருந் திருவிழா நாள் - 6:

காலை:-

பஞ்சமூர்த்திகள் வீதி உலா:

திருஞானசம்பந்தருக்கு ஞானப் பால் ஊட்டும் விழா.
விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம், சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி யானை வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி அன்ன வாகனம்,
திருஞானசம்பந்தர் - தங்கப் பல்லக்கு,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்.

இரவு:-

பஞ்சமூர்த்திகள் வீதி உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம், சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி யானை வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி அன்ன வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்.

ஆனிப் பெருந் திருவிழா நாள் - 7:

காலை:-

பஞ்சமூர்த்திகள் வீதி உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம், சுவாமி நெல்லையப்பர் - தந்த பல்லக்கு,
அம்மை காந்திமதி - முத்து பல்லக்கில் தவழும் குழந்தை திருக் கோலம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்

இரவு:-

பஞ்சமூர்த்திகள் வீதி உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம், சுவாமி நெல்லையப்பர் - வெள்ளிக் குதிரை வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி காமதேனு வாகனம்,
தாமிர சபை நடராஜர் - மரச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி திருக்கோலம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்.

ஆனிப் பெருந் திருவிழா நாள் - 8:

காலை:-

தாமிர சபை நடராஜர் - வெள்ளி சாத்தி திருக்கோலம்

பகல்:-

தாமிர சபை நடராஜர் - மரச் சப்பரத்தில் பச்சை சாத்தி திருக்கோலம்.

மாலை:-

கங்காளநாதர் - தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல்.

இரவு:-

தேர் கடாட்சம்:

விநாயகர் - தேர்,
சுப்பிரமணியர் - தேர்,
சுவாமி நெல்லையப்பர் - தங்கக் கைலாச பர்வத வாகனம்,
அம்மை காந்திமதி - தங்கக் கிளி வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்.

ஆனிப் பெருந் திருவிழா நாள் - 9:

காலை:-திருத்தேரோட்டம்.

சுவாமி நெல்லையப்பர் - பெரிய தேர்,
அம்மை காந்திமதி - தேர்,

மாலை:-தேர்த் தடம் பார்த்தல்:
சண்டிகேசுவரர் - தேர்.

இரவு:-
சப்த வர்ண பல்லக்கில் சுவாமி நெல்லையப்பர், அம்மை காந்திமதி தேர் வீதிகளில் உலா.

ஆனிப் பெருந் திருவிழா - 10:

காலை:-

சுவாமி நெல்லையப்பர் - அம்மை காந்திமதி, சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி. (தலப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த உற்சவம் தற்போது பொற்றாமரை திருக்குளத்தில் நடைபெறுகிறது)

இரவு:

தனி உற்சவ மூர்த்தியான சோமாஸ்கந்தர் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்.

இந்த ஆனித் திருவிழாவின் பத்து நாட்களும் திருக்கோவில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் பல முண்ணனி இசை வித்வான்கள், பேச்சாளர்கள், பிற கலைஞர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும்.

இது தவிர ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தின்று தாமிர சபை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும்.

ஆடி மாதம்:

A candid shot of devotee pulling majestic chariot rope during festival

ஆடி மாதம் முதல் நாளன்று அயன தீர்த்தவாரி விழா சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் நடைபெறும். (தலப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த உற்சவம் தற்போது நடைபெறவில்லை)

ஆடி மாதம் பரணி நட்சத்திரத்தில் காந்திமதி அம்மை சன்னதியில் ஆடிப் பூரத் திருவிழா கொடியேற்றமாகி பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

இந்த உற்சவத்தின் நான்காம் திருநாளன்று அம்மை சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மைக்கு வளைகாப்பு உற்சவம் விமரிசையாக நடைபெறும்.

இந்த உற்சவத்தின் பத்தாம் திருநாளான ஆடிப் பூரம் அன்று காலை காந்திமதி அம்மை சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும் (தலப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த உற்சவம் தற்போது பொற்றாமரைக் குளத்தில் நடைபெறுகிறது). தொடர்ந்து அன்று மாலை ஆடிப்பூரம் முளைகொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

ஆவணி மாதம்:

ஆவணி மூலத் திருவிழா சுவாமி சன்னதி சிறிய கொடிமரத்தில் ஆனி மகம் நட்சத்திரத்தில் கொடியேற்றமாகி பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

ஆவணி மூலத் திருவிழாவின் நான்காம் நாள் இரவு பஞ்சமூர்த்திகள்,
விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம்,
சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி இடப வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி இடப வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா.

ஆவணி மூலம் அன்று இங்கிருந்து சுவாமி சந்திரசேகரர் தன் பரிவாரங்களுடன் மானூர் அம்பலவாணர் கோவில் எழுந்தருளி கருவூர் சித்தருக்கு காட்சியளிக்கும் வைபவம் சிறப்பாக நடைபெறும்.

ஆவணி மாத திரியோதசி திதியில் தாமிர சபை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும்.

புரட்டாசி மாதம்:

புரட்டாசி மாதம் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சுவாமி நெல்லையப்பர், அம்மை காந்திமதி சோமவார மண்டபத்தில் கொலு தர்பார் காட்சியளிக்கும் வைபவமும் விஜய தசமி அன்று சந்திரசேகரர் - வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டை உற்சவமும் சிறப்பாக நடைபெறும்.

புரட்டாசி மாதம் பூர்வ பட்சம் பிரதமை திதியில் தொடங்கி அம்மை காந்திமதிக்கு லட்ச்சார்ச்சனை விமரிசையாக நடைபெறும்.

ஐப்பசி மாதம்:

ஐப்பசி மாதம் முதல் நாளன்று விசு தீர்த்தவாரி விழா சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் நடைபெறும். (தலப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த உற்சவம் தற்போது நடைபெறவில்லை).

ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் காந்திமதி அம்மை சன்னதியில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றமாகி பதினைந்து நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 1:

காலை:-

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்: சஅம்மை காந்திமதி தங்க பூங்கோவில் சப்பரத்தில் எழுந்தருள அம்மை சன்னதி தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம்.

இரவு:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - தங்கப் பூங்கோவில் சப்பரம்,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்.

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 2:

காலை:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளிச் சப்பரம்,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்

இரவு:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி கமல வாகனம்,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்.

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 3:

காலை:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளிக் கமல வாகனம்,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்.

இரவு:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி சிம்ம,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்.

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 4:

காலை:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளிக் காமதேனு வாகனம் ,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்.

இரவு:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி இடப வாகனம்,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்.

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 5:

காலை:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி இடப வாகனம்,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்.

இரவு:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - இந்திர விமான வாகனம்,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்.

Temple car stands out in this extreme long shot of chariot being pulled during the festival

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 6:

காலை:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி அன்ன வாகனம்,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்

இரவு:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி அன்ன வாகனம்,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்.

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 7:

காலை:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - முத்துப் பல்லக்கில் தவழ்ந்த குழந்தை திருக்கோலம்,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்

இரவு:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளிக் காமதேனு வாகனத்தில் சிவப்பு சாத்தி கோலம்,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்.

பின்னிரவு:-

அம்மை காந்திமதி - வெள்ளை சாத்தி திருக்கோலம்.

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 8:

காலை:-

தேர் வீதிகளில் உலா:

விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளிச் சப்பரத்தில் கோலாட்ட அலங்கார பச்சை சாத்தி கோலம் ,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்

இரவு:-

தேர் வீதிகளில் உலா:

தேர் கடாட்சம்:

அம்மை காந்திமதி - தங்கக் கிளி வாகனம்,
சண்டிகேசுவரி - மரச் சப்பரம்.

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 9:

காலை:-

திருத்தேரோட்டம்:

அம்மை காந்திமதி - சட்டத் தேரில் எழுந்தருளல்.

மாலை:-அம்மை காந்திமதி சிவபூஜை செய்தருளும் திருக்கோலம்.

இரவு:-அம்மை காந்திமதி சப்தாவர்ண பல்லக்கில் எழுந்தருளி தேர்த்தடம் பார்த்தல்.

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 10:

காலை: அம்மை காந்திமதி பல்லக்கில் எழுந்தருளல்.

பகல்: அம்மை காந்திமதி சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் தீர்த்தவாரி சிபொற்றாமரை குளத்தில் அம்மை தீர்த்தவாரி.

இரவு: அம்மைக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை.

சுவாமி நெல்லையப்பருக்கு சுவாமி கோவில் முன் மண்டபத்தில் வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை.

நள்ளிரவு: அம்மை ஒற்றைக்கால் தவசுக்கோலம் பூண்டு தங்கச்சப்பரத்தில் கம்பாநதி எழுந்தருளல்.

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 11:

ஐப்பசி தபசு திருவிழா:-

காலை: அம்மை கம்பாநதி காமாட்சி கோவில் மண்டகப்படியில் ஐப்பசி தபசு காட்சி.

பகல்: சுவாமி நெல்லையப்பரை, நெல்லை கோவிந்தர் மாப்பிள்ளை அழைப்பு செய்து அழைத்துவர., கம்பாநதி மண்டபத்தில் தவசிருக்கும் அம்மைக்கு, சுவாமி நெல்லையப்பர் வெள்ளி இடப வாகனத்தில் காட்சி மண்டபம் எழுந்தருளி காட்சியளித்தல்.

பின்னர் கம்பாநதி காமாட்சி அம்மன் கோவில் மண்டகப்படியில் அம்மை, சுவாமிக்கு பூஜை செய்தருளல்.

பின்னர் அங்கிருந்து சுவாமி, அம்மை இருவரும் வீதிகளெங்கும் உலாவந்து பின்னிரவு திருக்கோவில் சேர்தல்.

பின்னிரவு: அம்மை காந்திமதி சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் எழுந்தருள கதிர்குளித்தல் தீர்த்தவாரி நடைபெறும். (தலப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கதிர்குளித்தல் தீர்த்தவாரி தற்போது பொற்றாமரை குளத்தில் தான் நடைபெறுகிறது)

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 12:

ஐப்பசி திருக்கல்யாணம்.

அதிகாலை: சுவாமி நெல்லையப்பரை, நெல்லை கோவிந்தர் மாப்பிள்ளை அழைப்பு செய்து, அம்மை கோவில் ஆயிரங்கால் மண்டபம் அழைத்துவர பிரம்ம முகூர்த்த வேளையில் சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்மை திருக்கல்யாணம் நடைபெறும்.

காலை: சுவாமி நெல்லையப்பர் வெள்ளி யானை வாகத்திலும், காந்திமதி அம்மை பூம் பல்லக்கிலும் எழுந்தருளி பட்டினப்பிரவேசம்.

மாலை: ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருள நலுங்கு உற்சவம் நடைபெறும்.

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 13:

மாலை: ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருள நலுங்கு உற்சவம் நடைபெறும்.

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 14:

மாலை: ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருள நலுங்கு உற்சவம் நடைபெறும்.

ஐப்பசி திருக்கல்யாண திருநாள் - 15:

காலை: சுவாமி நெல்லையப்பர், அம்மை காந்திமதி பல்லக்கில் தேர் வீதிகளில் உலா வந்து சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெறும். (தலப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த உற்சவம் தற்போது பொற்றாமரை குளத்தில் நடைபெறுகிறது)

இரவு: மறுவீடு பட்டிணப்பிரவேசம்.

சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி இடப வாகனம், அம்மை காந்திமதி - வெள்ளி இடப வாகனம் எழுந்தருளி தேர் வீதி உலா வந்து சுவாமி திருக்கோவில் சேர்தல்.

இந்த ஐப்பசி மாதம் திருக்கல்யாண திருவிழா நாட்களில் அம்மை சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு சமய சொற்பொழிவுகள் மற்றும் கச்சேரிகள் நடைபெறும்.

கார்த்திகை மாதம்:

கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடு நடைபெறும்.

கார்த்திகை சோமவார நாட்களில் சுவாமிக்கு சிறப்பு சங்காபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவில்,
விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம்,
சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி இடப வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி இடப வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம்., எழுந்தருள திருக்கார்த்திகை சொக்கப்பனை ஏற்றுதல் விழா விமரிசையாக நடைபெறும்.

மார்கழி மாதம்:

மார்கழி மாதம் சதயம் நட்சத்திரத்தில் திருவாதிரை திருநாள் கொடியேற்றமாகி பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

மார்கழி திருவாதிரை திருவிழாவின் நான்காம் நாள் இரவு பஞ்சமூர்த்திகள்,
விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம்,
சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி இடப வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி இடப வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.

மார்கழி திருவாதிரை திருவிழாவின் ஆறாம் நாள் இரவு மனோண்மணி அம்மை திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.

மார்கழி திருவாதிரை அன்று முதல் நாள் இரவு தொடங்கி விடிய விடிய தாமிர சபையில் வைத்து நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகமும், பசு தீபாராதனையும் நடைபெற்று அருணோதய காலத்தில் தாமிரசபையில் அம்மை காந்திமதிக்கும், 63 - நாயன்மார்களுக்கும் மத்தியில் திருநடனக் காட்சியளிக்க, ஆருத்ரா தரிசனம் வெகு கோலாகலமாக நடைபெறும்.

தை மாதம்:

தை மாதம் முதல் நாளன்று அயன தீர்த்தவாரி விழா சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் நடைபெறும்.

தை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தைப்பூச திருநாள் கொடியேற்றமாகி பன்னிரெண்டு நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

தை மாதம் பூசம் நட்சத்திரம் கூடிய பெளர்ணமி அன்று சுவாமி-நெல்லையப்பர், அம்மை-காந்திமதி, தாமிரபரணி அம்மை, அஸ்திர தேவர், அஸ்திர தேவி, சண்டிகேசுவரர் ஆகியோர்களுடன் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் எழுந்தருள, தைப் பூச தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

தைப் பூச திருவிழாவின் பதினோறாம் நாள் செளந்தர சபையில் காந்திமதி அம்மைக்கு செளந்தர சபாபதி திருநடனக் காட்சி காட்டி மறைந்தருள, சுவாமியை தேடி அம்மை காந்திமதி தேர் வீதிகளில் உலா செல்ல, சந்திப் பிள்ளையார் கோவில் முன்னர் சுவாமி நெல்லையப்பர், வெள்ளி இடப வாகனத்தில் எழுந்தருளி அம்மை காந்திமதிக்கு காட்சியளித்தல் நடைபெறும்.

தைப் பூச திருவிழாவின் பன்னிரெண்டாம் நாள் சுவாமி சன்னதி தெரு சந்திர புஷ்கரணி தெப்பக்குளத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, தெப்பத் திருவிழா வெகு விமரிசையாய் நடைபெறும்.

தை மாத அமாவாசை அன்று பத்ர தீப விழாவும் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை லட்ச தீப விழாவும் மூன்று நாட்கள் நடைபெறும்.

இவ்விழாவில் முதலாம் நாளான கிருஷ்ண பட்சம் திரயோதசி அன்று சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்படும்.

இவ்விழாவின் மூன்றாம் நாளான தை அமாவாசை அன்று பத்ர தீபம் (லட்ச தீபம்) நடைபெறும். அன்று மாலை பெரிய நந்தி (மாக்காளை) முன்பு நந்தி தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனை தொடருத்து திருக்கோவில் வளாகம் முழுவதும் பத்தாயிரம் தீபங்களும், லட்சம் தீபங்களும் ஏற்றப்படும். அன்று இரவு பஞ்ச மூர்த்திகள்,
விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சண்முகர் - தங்கச் சப்பரம்,
சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி இடப வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி இடப வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.

A beautiful view of long outer corridor of Nellaippar temple with several pillars

மாசி மாதம்:

மாசி மாதம் சிவராத்திரி அன்று இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் சுவாமிக்கும், அம்மைக்கும் வெகு விமரிசையாக நடைபெறும்.

மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பொற்றாமரை திருக்குளத்தில் அப்பர் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அன்று இரவு சுவாமி நெல்லையப்பர் - தங்கக் கைலாச பர்வத வாகனத்திலும், அம்மை காந்திமதி - தங்கக் கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு காட்சியளித்தல்.

பங்குனி மாதம்:

பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பங்குனி உத்திர திருநாள் திருநாள் கொடியேற்றமாகி பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

பங்குனி உத்திர திருவிழாவின் முதல் ஒன்பது நாட்கள் சுவாமி சன்னதி அனவரததானநாத மண்டபத்தில் வைத்து உடையவர் லிங்கத்துக்கு சாயரட்சை காலத்தில் அபிஷேகம் செய்வித்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பங்குனி உத்திர திருவிழாவின் நான்காம் நாள் காலை வேணுவனத்தில் ஈசன் வெட்டுபட்ட திருவிளையாடல். இரவு பஞ்சமூர்த்திகள்,
விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்,
சுப்பிரமணியர் - மர மயில் வாகனம்,
சுவாமி நெல்லையப்பர் - வெள்ளி இடப வாகனம்,
அம்மை காந்திமதி - வெள்ளி இடப வாகனம்,
சண்டிகேசுவரர் - மரச் சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.

பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை திருக்கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், அம்மை காந்திமதி எழுந்தருள பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா சிறப்பாக நடைபெறும்.

அமைவிடம்: திருநெல்வேலி மாநகரின் மத்தியப் பகுதி. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி. மீ தொலைவிலும், திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் 3 கி. மீ தொலைவிலும் அமையப் பெற்றுள்ள இந்த கோவிலை நகரப் பேருந்துகள் மற்றும் தனியார் வாடகை வாகனங்கள் மூலம் எளிதாக அடையலாம்.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram