Logo of Tirunelveli Today
English

திருக்கோவில்கள்

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் பற்றிய தகவல்கள்.

பிரசித்தி பெற்ற கோவில்கள்

ஆன்மீக குறிப்புக்கள்

முக்கிய விரத நாட்கள், விசேஷ நாட்கள், கோவில் திருவிழாக்கள், உற்சவங்கள் பற்றிய குறிப்புக்கள்.
முக்கிய விழாக்கள்

ஆனி தேரோட்டம்:
தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேர் என்று சிறப்பிக்கப்படும் ராஜ தேரில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருள தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

காந்திமதி அம்மை ஆடிப்பூரம் முளைக்கொட்டு உற்சவம்:
ஆடிப்பூரம் அன்று மாலை அம்மன் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மை எழுந்தருள முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

திருப்புடைமருதூர் தைப்பூச தீர்த்தவாரி:
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவிலில் தைப்பூசம் அன்று பகலில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெறும்.

ஐப்பசி தபசு / திருக்கல்யாணம் விழா:
திருநெல்வேலி காந்திமதி அம்மை திருக்கோவிலில் ஐப்பசி பூரம் அன்று தபசு விழாவும், மறுநாள் ஐப்பசி உத்திரம் அன்று திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.

பாளையங்கோட்டை தசரா விழா:
மைசூருக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் உள்ள 12 அம்மன் கோவில்களிலிலும் ஒன்றாக சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஆழ்வார்திருநகரி வைகாசி விசாக திருவிழா:
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் நவதிருப்பதிகளில் இருந்து ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளி கருட சேவை காட்சியருள்வார்கள்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா:
அசுரரை வென்று தேவர்களை காத்த குமரப்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெறும்.

நாங்குநேரி தை அமாவாசை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் தை மாதம் வரும் அமாவாசை அன்று ஒரு கோட்டை தூய நல்லெண்ணெயால் காப்பு செய்விக்கப்படும். இந்த எண்ணெய் கோவிலில் உள்ள எண்ணெய் கிணற்றில் சேமிக்கப்படும்.

முக்கிய விரதங்கள்

சிவ விரதங்கள்

  • ஆனி உத்திரம்
  • சிவராத்திரி, பிரதோஷ விரதம்
  • கேதாரகௌரி விரதம்

விநாயகர் விரதங்கள்

  • சதுர்த்தி விரதம்
  • விநாயகர் நவராத்திரி விரதம்
  • சங்கடஹர சதுர்த்தி விரதம்
  • பிள்ளையார் நோன்பு (குமார சஷ்டி விரதம்)

சக்தி விரதங்கள்

  • நவராத்திரி, வரலட்சுமி நோன்பு
  • ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய்
  • பங்குனித் திங்கள், மாசி மகம்
கந்த விரதங்கள்
  • கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை
  • வைகாசி விசாகம், தைப்பூசம்
  • திருக்கார்த்திகை விரதம்

தற்போதைய பதிவுகள்

"திங்கள்நாள் விழ மல்கு திருநெல்வேலி" என்று ஞானசம்பந்த பெருமான் பாடிய திருநெல்வேலி கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், விசேஷ வழிபாடுகள், உற்சவங்கள் பற்றிய தகவல்கள்.

ஆலய தரிசனம்

Manur Ambalavanaswamy Thirukovil(மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோவில்)
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலின் "ஆச்சாரிய சபை" யாக திகழும் மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோவில். மூலவர்: சுவாமி நெல்லையப்பர். அம்மை: காந்திமதி அம்மை. சிறப்பு சன்னதிகள்: அம்பலவாண சுவாமி, கருவூர் சித்தர், திருவாளி போத்தி. மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோவில் வரலாறு(History of Manur Ambalavanaswamy Temple): முற்காலத்தில் அம்பலவாண முனிவர் என்பவர் இங்கு வாழ்ந்து வந்தார். அவருக்கு ஈசன் மீது அளவிலா பக்தி. அதிலும் ஈசன் ஆடும் திருநடனத்தின் மீது அளவு கடந்த நாட்டம் கொண்டிருந்தார். […]
மேலும் படிக்க
Arumugamangalam Aayirathu Enn Vinayakar Kovil
விநாயகப் பெருமானே மூலவராக அமர்ந்து அருள்பாலிக்கும் ஆறுமுகமங்கலம் "ஆயிரத்தெண் விநாயகர்" திருக்கோவில். மூலவர் : ஆயிரத்தெண் விநாயகர். தல விருட்சம்: வில்வ மரம். தீர்த்தம்: தாமிரபரணி. சிறப்பு சன்னதி: பஞ்சமுக விநாயகர். திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் கொற்கையைத் தலைநகரமாகவும், துறைமுகமாகவும் கொண்டு பாண்டிய நாட்டை கோமாற வல்லபன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். இந்த மன்னன் ஆயிரம் யாகங்கள் செய்தவன் என்று போற்றப்படுகிறான். இவன் தான் செய்த யாகங்களுக்காக இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள […]
மேலும் படிக்க
திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோவில்(Thiruvenkatanathapuram Venkatachalapathy Temple)
"தென் திருப்பதி" என்று சிறப்பிக்கப்படும் திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில். மூலவர்: வெங்கடாசலபதி பெருமாள். உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி உடனுறை ஸ்ரீ நிவாச பெருமாள். திருக்கோவில் விருட்சம்: நெல்லி மரம். தீர்த்தம்: தாமிரபரணி (ஸ்ரீ நிவாச தீர்த்தம்). சிறப்பு: பன்னிரெண்டு படிகள். Image Credit : blogspot.com திருவேங்கடநாதபுரம் திருக்கோவில் வரலாறு:(History of Thiruvenkatanathapuram Temple) முற்காலத்தில் வைப்பராச்சியம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் வியாச முனிவரின் சீடராகிய பைலர் என்ற முனிவர் வாழ்ந்து […]
மேலும் படிக்க
Kurukkuthurai Murugan Temple(குறுக்குத்துறை முருகன் கோவில்)
குறுக்குத்துறை முருகன் கோவில் திருவுருமாமலை என்று சிறப்பிக்கப்படும் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். மூலவர்: சுப்பிரமணிய சுவாமி. தீர்த்தம்: தாமிரபரணி. சிறப்பு: குடைவறைத் திருமேனி. திருவுருமாமலை பெயர்க் காரணம்: இங்குள்ள கற்பாறைகள் தெய்வ திருவுருவங்களை செதுக்கிட ஏற்றதாக இருந்ததால், இங்கு சிற்பிகள் பாறைகளை செதுக்கி உருவம் கொடுத்தார்கள் என்பதால் திருவுருமாமலை என்ற பெயர் வழங்கப் பெற்றது. குறுக்குத்துறை முருகன் திருக்கோவில் வரலாறு(History of Kurukkuthurai Murugan Temple): முற்காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள இந்த பகுதியில் […]
மேலும் படிக்க
Tirunelveli Pittapurathi Amman Kovil
திருநெல்வேலி பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில் திருநெல்வேலி மாநகரின் எல்லைக் காவல் தெய்வமாக விளங்கும், ஸ்ரீ பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில். மூலவர்: பிட்டாபுரத்தி அம்மன். அம்மைக்கு விளங்கும் வேறு பெயர்கள்: நெல்லை மாக் காளி, சண்பகச் செல்வி, வடக்கு வாசல் செல்வி. சிறப்பு சன்னதி: அகோர விநாயகர். தீர்த்தம்: தாமிரபரணி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் பிரம்மனை குறித்து கடுந் தவம் இருந்தனர். அவர்களின் தவத்திற்கு இறங்கிய பிரம்மன் அவர்கள் முன் தோன்றி வேண்டும் […]
மேலும் படிக்க
Tirunelveli Perathu Selvi Amman Kovil
திருநெல்வேலி பேராத்துச்செல்வி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் கிடைத்த அற்புத செல்வியாம், ஸ்ரீ பேராத்துச்செல்வி அம்மன் திருக்கோவில். மூலவர்: பேராத்துச் செல்வி அம்மன். தீர்த்தம்: தாமிரபரணி (குட்டத்துறை) விருட்சம்: வேம்பு. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் தற்போது கோவில் அமையப் பெற்றுள்ள இந்த பகுதியில் வசித்த ஏழை பக்தர் ஒருவர், அம்பாளை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தார். அவருக்கு அம்பாளுக்கு என ஒரு தனி கோயில் கட்ட வழிபட வேண்டும் என விருப்பம். ஆனால் கோயில் கட்டுமளவிற்கு […]
மேலும் படிக்க
1 5 6 7 8 9 14
மேலும் படிக்க

சைவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

வைஷ்ணவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

திருக்கோவில்கள் புகைப்படத்தொகுப்பு

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

தாமிரபரணி நதிக்கரை திருக்கோவில்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தன்பொருநை என்று சிறப்பிக்கப்படும் தாமிரபரணி நதிக்கரையில் எண்ணற்ற பழம்பெருமை வாய்ந்த சிவன் திருக்கோவில்கள், விஷ்ணு திருக்கோவில்கள், கிராம தெய்வங்களின் திருக்கோவில்கள், சாஸ்தா திருக்கோவில்கள், அம்மன் திருக்கோவில்கள், முருகன் திருக்கோவில்கள், விநாயகர் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப்பெற்ற திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை இங்கு நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம்.
திக்கனைத்தும் திருக்கோவில்கள்
  • நவதிருப்பதி
  • நவகைலாயம்
  • ஆதி நவகைலாயம்
  • பஞ்ச குரோச ஸ்தலங்கள்
  • பஞ்ச விக்ரக ஸ்தலங்கள்
  • பஞ்ச பூத ஸ்தலங்கள்
  • பஞ்ச ஆசன ஸ்தலங்கள்
  • நவசமுத்திர ஸ்தலங்கள்
  • முப்பீட ஸ்தலங்கள்
  • சாஸ்தா திருத்தலங்கள்
என திக்கனைத்திலும் திருக்கோவில்களை கொண்டது திருநெல்வேலி!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top calendar-fullmagnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram