Logo of Tirunelveli Today
English

திருக்கோவில்கள்

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் பற்றிய தகவல்கள்.

பிரசித்தி பெற்ற கோவில்கள்

ஆன்மீக குறிப்புக்கள்

முக்கிய விரத நாட்கள், விசேஷ நாட்கள், கோவில் திருவிழாக்கள், உற்சவங்கள் பற்றிய குறிப்புக்கள்.
முக்கிய விழாக்கள்

ஆனி தேரோட்டம்:
தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேர் என்று சிறப்பிக்கப்படும் ராஜ தேரில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருள தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

காந்திமதி அம்மை ஆடிப்பூரம் முளைக்கொட்டு உற்சவம்:
ஆடிப்பூரம் அன்று மாலை அம்மன் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மை எழுந்தருள முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

திருப்புடைமருதூர் தைப்பூச தீர்த்தவாரி:
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவிலில் தைப்பூசம் அன்று பகலில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெறும்.

ஐப்பசி தபசு / திருக்கல்யாணம் விழா:
திருநெல்வேலி காந்திமதி அம்மை திருக்கோவிலில் ஐப்பசி பூரம் அன்று தபசு விழாவும், மறுநாள் ஐப்பசி உத்திரம் அன்று திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.

பாளையங்கோட்டை தசரா விழா:
மைசூருக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் உள்ள 12 அம்மன் கோவில்களிலிலும் ஒன்றாக சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஆழ்வார்திருநகரி வைகாசி விசாக திருவிழா:
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் நவதிருப்பதிகளில் இருந்து ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளி கருட சேவை காட்சியருள்வார்கள்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா:
அசுரரை வென்று தேவர்களை காத்த குமரப்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெறும்.

நாங்குநேரி தை அமாவாசை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் தை மாதம் வரும் அமாவாசை அன்று ஒரு கோட்டை தூய நல்லெண்ணெயால் காப்பு செய்விக்கப்படும். இந்த எண்ணெய் கோவிலில் உள்ள எண்ணெய் கிணற்றில் சேமிக்கப்படும்.

முக்கிய விரதங்கள்

சிவ விரதங்கள்

  • ஆனி உத்திரம்
  • சிவராத்திரி, பிரதோஷ விரதம்
  • கேதாரகௌரி விரதம்

விநாயகர் விரதங்கள்

  • சதுர்த்தி விரதம்
  • விநாயகர் நவராத்திரி விரதம்
  • சங்கடஹர சதுர்த்தி விரதம்
  • பிள்ளையார் நோன்பு (குமார சஷ்டி விரதம்)

சக்தி விரதங்கள்

  • நவராத்திரி, வரலட்சுமி நோன்பு
  • ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய்
  • பங்குனித் திங்கள், மாசி மகம்
கந்த விரதங்கள்
  • கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை
  • வைகாசி விசாகம், தைப்பூசம்
  • திருக்கார்த்திகை விரதம்

தற்போதைய பதிவுகள்

"திங்கள்நாள் விழ மல்கு திருநெல்வேலி" என்று ஞானசம்பந்த பெருமான் பாடிய திருநெல்வேலி கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், விசேஷ வழிபாடுகள், உற்சவங்கள் பற்றிய தகவல்கள்.

ஆலய தரிசனம்

Ambasamudram Agastheeswarar Kovil
அம்பாசமுத்திரம் அகத்தியர் கோவில் தமிழ் முனிவர் அகத்தியரை மூலவராக கொண்ட தனி திருக்கோவிலாக திகழ்கிறது அம்பாசமுத்திரம் அகத்தீஸ்வர சுவாமி திருக்கோவில். சுவாமி பெயர்: அகத்தீஸ்வரர். அம்மை பெயர்: லோபா முத்ரை அம்மை. தீர்த்தம்: தாமிரபரணி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் கைலாயத்தில் நடைபெறும் அம்மை அப்பர் திருமணத்தினை காண முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள் என அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வட திசை தாழ்ந்து தென் திசை உயர்கிறது. பூமியை சம நிலைப் படுத்த சிவபெருமான் தமிழ் […]
மேலும் படிக்க
Karungulam Venkatachalapathy Kovil
கருங்குளம் வெங்கடாசலபதி கோயில் வகுளகிரி என்று சிறப்பிக்கப்படும் கருங்குளம் வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில். மூலவர் பெயர்: ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் ( வகுளகிரி நாதர்) உற்சவர் பெயர் : ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக ஸ்ரீ நிவாச பெருமாள். திருக்கோவில் விருட்சம்: உறங்கா புளிய மரம். தீர்த்தம்: தாமிரபரணி. கோவில் வரலாறு: முற்காலத்தில் சுபகண்டன் என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு ஒரு முறை கண்ட மாலை என்னும் […]
மேலும் படிக்க
Kalakkad Periya Kovil(களக்காடு பெரிய கோவில்)
களக்காடு பெரிய கோவில்(Kalakkad Periya Kovil) திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பச்சையாற்றின் கரையில் உள்ளது திருக் களந்தை நகர் என்று சிறப்பிக்கப்படும் களக்காடு கோமதி அம்மை உடனுறை சத்தியவாகீஸ்வரர் திருக்கோவில்.  சுவாமி பெயர்: சத்தியவாகீஸ்வரர் ( பொய்யா மொழி ஈசர்)  அம்மை பெயர்: கோமதி அம்மை ( ஆவுடை நாயகி ) . திருக்கோவில் விருட்சம்: புன்னை மரம். தீர்த்தம்: சத்திய தீர்த்தம், ஆருத்ரா நதி ( பச்சையாறு ) . களக்காடு […]
மேலும் படிக்க
Nanguneri Vanamamalai Thothathrinathar Perumal Kovil
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்(Nanguneri Vanamamalai Perumal Temple) 108 திவ்ய தேசங்களுள் சுயம்பு சேத்திரமாக விளங்குவதும், ஸ்ரீ வர மங்கை புரம், தோதாத்திரி புரம், வானமாமலை, உரோமச சேத்திரம், நாகணை சேரி, வர மங்கள சேத்திரம் என்ற சிறப்பு பெயர்களையும் பெற்றது நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்.  மூலவர் பெயர்: ஸ்ரீ வானமாமலை பெருமாள் ( தோதாத்திரி நாதர்) .  உற்சவர் பெயர் : ஸ்ரீ தெய்வ நாயக பெருமாள்.  தாயார்: ஸ்ரீ வரகுணமங்கை நாச்சியார்,  […]
மேலும் படிக்க
தென்காசி உலகம்மை காசி விஸ்வநாதர் திருக்கோவில் (Tenkasi Ulagammai Kasi Viswanathar Temple)
வடக்கே உள்ள காசிக்கு நிகரான சிறப்பையும், வானளாவிய ராஜ கோபுரத்தையும் பெற்றது தென்காசி உலகம்மன் உடனுறை காசி விசுவநாதர் திருக்கோவில் சுவாமி பெயர்: காசி விசுவநாத சுவாமி. அம்மை பெயர்: உலகாம்பிகை . திருக்கோவில் விருட்சம்: செண்பக மரம். தீர்த்தம்: சிவகங்கை தீர்த்தம், சித்ரா நதி. சிறப்பு சன்னதி: பராசக்தி பீடம் காசி விசுவநாதர் திருக்கோவில் வரலாறு(History of Kasi Viswanathar Temple): முற்காலத்தில் செண்பக வனமாக இருந்த இந்த தென்காசி பகுதியை பராக்கிரம பாண்டியன் என்ற […]
மேலும் படிக்க
Kadayam NithyakalyaniAmmaiUdanurai Vilva Vananathar Thirukkovil
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் ராம நதிக் கரையில் அமையப் பெற்றுள்ளது கடையம் நித்ய கல்யாணி அம்மை உடனுறை வில்வ வன நாத சுவாமி திருக்கோயில். சுவாமி பெயர் : வில்வ வன நாதர். அம்மை பெயர் : நித்ய கல்யாணி அம்மை. திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம். தீர்த்தம்: பூஞ்சுனை தீர்த்தம், ராம நதி. நித்யகல்யாணி அம்மை திருக்கோவில் வரலாறு(History of Kadayam NithyakalyaniAmmaiUdanurai Vilva Vananathar Temple) : முற்காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மா, […]
மேலும் படிக்க
1 8 9 10 11 12 14
மேலும் படிக்க

சைவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

வைஷ்ணவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

திருக்கோவில்கள் புகைப்படத்தொகுப்பு

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

தாமிரபரணி நதிக்கரை திருக்கோவில்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தன்பொருநை என்று சிறப்பிக்கப்படும் தாமிரபரணி நதிக்கரையில் எண்ணற்ற பழம்பெருமை வாய்ந்த சிவன் திருக்கோவில்கள், விஷ்ணு திருக்கோவில்கள், கிராம தெய்வங்களின் திருக்கோவில்கள், சாஸ்தா திருக்கோவில்கள், அம்மன் திருக்கோவில்கள், முருகன் திருக்கோவில்கள், விநாயகர் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப்பெற்ற திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை இங்கு நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம்.
திக்கனைத்தும் திருக்கோவில்கள்
  • நவதிருப்பதி
  • நவகைலாயம்
  • ஆதி நவகைலாயம்
  • பஞ்ச குரோச ஸ்தலங்கள்
  • பஞ்ச விக்ரக ஸ்தலங்கள்
  • பஞ்ச பூத ஸ்தலங்கள்
  • பஞ்ச ஆசன ஸ்தலங்கள்
  • நவசமுத்திர ஸ்தலங்கள்
  • முப்பீட ஸ்தலங்கள்
  • சாஸ்தா திருத்தலங்கள்
என திக்கனைத்திலும் திருக்கோவில்களை கொண்டது திருநெல்வேலி!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top calendar-fullmagnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram