Logo of Tirunelveli Today
English

திருக்கோவில்கள்

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் பற்றிய தகவல்கள்.

பிரசித்தி பெற்ற கோவில்கள்

ஆன்மீக குறிப்புக்கள்

முக்கிய விரத நாட்கள், விசேஷ நாட்கள், கோவில் திருவிழாக்கள், உற்சவங்கள் பற்றிய குறிப்புக்கள்.
முக்கிய விழாக்கள்

ஆனி தேரோட்டம்:
தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேர் என்று சிறப்பிக்கப்படும் ராஜ தேரில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருள தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

காந்திமதி அம்மை ஆடிப்பூரம் முளைக்கொட்டு உற்சவம்:
ஆடிப்பூரம் அன்று மாலை அம்மன் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மை எழுந்தருள முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

திருப்புடைமருதூர் தைப்பூச தீர்த்தவாரி:
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவிலில் தைப்பூசம் அன்று பகலில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெறும்.

ஐப்பசி தபசு / திருக்கல்யாணம் விழா:
திருநெல்வேலி காந்திமதி அம்மை திருக்கோவிலில் ஐப்பசி பூரம் அன்று தபசு விழாவும், மறுநாள் ஐப்பசி உத்திரம் அன்று திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.

பாளையங்கோட்டை தசரா விழா:
மைசூருக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் உள்ள 12 அம்மன் கோவில்களிலிலும் ஒன்றாக சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஆழ்வார்திருநகரி வைகாசி விசாக திருவிழா:
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் நவதிருப்பதிகளில் இருந்து ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளி கருட சேவை காட்சியருள்வார்கள்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா:
அசுரரை வென்று தேவர்களை காத்த குமரப்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெறும்.

நாங்குநேரி தை அமாவாசை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் தை மாதம் வரும் அமாவாசை அன்று ஒரு கோட்டை தூய நல்லெண்ணெயால் காப்பு செய்விக்கப்படும். இந்த எண்ணெய் கோவிலில் உள்ள எண்ணெய் கிணற்றில் சேமிக்கப்படும்.

முக்கிய விரதங்கள்

சிவ விரதங்கள்

  • ஆனி உத்திரம்
  • சிவராத்திரி, பிரதோஷ விரதம்
  • கேதாரகௌரி விரதம்

விநாயகர் விரதங்கள்

  • சதுர்த்தி விரதம்
  • விநாயகர் நவராத்திரி விரதம்
  • சங்கடஹர சதுர்த்தி விரதம்
  • பிள்ளையார் நோன்பு (குமார சஷ்டி விரதம்)

சக்தி விரதங்கள்

  • நவராத்திரி, வரலட்சுமி நோன்பு
  • ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய்
  • பங்குனித் திங்கள், மாசி மகம்
கந்த விரதங்கள்
  • கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை
  • வைகாசி விசாகம், தைப்பூசம்
  • திருக்கார்த்திகை விரதம்

தற்போதைய பதிவுகள்

"திங்கள்நாள் விழ மல்கு திருநெல்வேலி" என்று ஞானசம்பந்த பெருமான் பாடிய திருநெல்வேலி கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், விசேஷ வழிபாடுகள், உற்சவங்கள் பற்றிய தகவல்கள்.

ஆலய தரிசனம்

Veeravanallur Bhoominathar Thirukkovil
வீரவநல்லூர் பூமிநாதர் கோவில் (Veeravanallur Boominathar Temple) திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் அமையப் பெற்றுள்ளது எமனை உயிர்பித்தருளிய மற்றும் பூமா தேவி வழிபட்ட வீரவநல்லூர் பூமி நாத சுவாமி திருக்கோவில்.  சுவாமி பெயர்: பூமிநாத சுவாமி.  அம்மை பெயர்: மரகதாம்பிகை . திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம். தீர்த்தம்: தாமிரபரணி., சிவ கங்கை தீர்த்தம்.  வீரவநல்லூர் பூமிநாதர் கோவில் வரலாறு:(Veeravanallur Bhoominathar Temple History) மார்க்கண்டேயனுக்காக எமதர்மனை எட்டி உதைத்தல்: முற்காலத்தில் மிருகண்டு […]
மேலும் படிக்க
Athalanallur Gajendra Varathar Thirukkovil
அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் திருக்கோவில் கஜேந்திரன் என்ற யானையின் பக்திக்கு இறங்கி பெருமாள் காட்சியளித்து அருள் செய்த "ஆனை காத்த நயினார் கோவில்" என்று சிறப்பிக்கப்படும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் திருக்கோவில்.  மூலவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி உடனாய ஆதி மூலப் பெருமாள். உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி உடனாய கஜேந்திர வரத பெருமாள். தல விருட்சம்: நெல்லி மரம். தீர்த்தம்: தாமிரபரணி, விஷ்ணு பாத தீர்த்தம், கஜேந்திர மோட்ச தீர்த்தம். திருக்கோவில் வரலாறு: […]
மேலும் படிக்க
திருமலை குமாரசாமி திருகோயில், பண்பொழி (Thirumalaikovil, Panbozhi)
திருமலைக்கோவில் (Thirumalai Temple) சிலப்பதிகாரத்தில் நெடுவேள் குன்றம் என்று சிறப்பித்து கூறப்படும் இந்த "திருமலைக்கோவில்" மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திற்கு சற்று தள்ளி "ஓம்" என்னும் பிரணவ வடிவம் கொண்ட தனி குன்றின் மீது சுமார் 500 அடி உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. சுவாமி பெயர்: திருமலைக்குமரன். திருக்கோவில் விருட்சம்: புளிய மரம். தீர்த்தம்: பூஞ்சுனை (அஷ்ட பத்ம திருக்குளம்). சிறப்பு சன்னதி: உச்சி பிள்ளையார், பைரவர், திருமலைக்காளி. திருமலை குமாரசாமி கோவில் வரலாறு: (History of […]
மேலும் படிக்க
Ilanji Kumaran Temple(இலஞ்சி குமரன் கோவில்)
இலஞ்சி என்ற சொல்லுக்கு ஏரி, குளம், மடு, பொய்கை, மதில், மகிழ மரம் என பல பொருள் உண்டு என இலஞ்சி தல புராணம் குறிப்பிடுகிறது. "இலஞ்சி" என்ற சொல்லை பல கவிஞர்கள் தங்கள் கவிப்பாக்களில் பயன்படுத்தி உள்ளனர். "இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமாளே" என அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தை குறிப்பிடுகிறார். அது போல மதுரைக் காஞ்சியில் "ஒளிறு இலஞ்சி" என்றும் மலைபடுகடாகத்தில் " சுடர்ப்பூ இலஞ்சி" என்றும் சிறப்பிக்கப் பட்டுள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்த […]
மேலும் படிக்க
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் (Sankarankovil Sankara Narayanar Temple)
பாண்டிய நாட்டின் பஞ்சபூத தலங்களில் ஒன்றாக திகழும் சங்கரநாராயணர் திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பு எழுப்பப்பட்ட பழமை வாய்ந்த புகழ்பெற்ற திருக்கோவில் ஆகும். புராண காலத்தில் புன்னை வனம் என்று அழைக்கப்பட்ட இந்த தலம், சங்கர நயினார் கோவில் என்றே அழைக்கப்பட்டு தற்போது சங்கரன்கோவிலாக மருவியுள்ளது. இந்த தலத்துக்கு பூ கைலாயம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் என்ற பெயர்களும் உண்டு. சுவாமி பெயர்: சங்கர லிங்க சுவாமி. அம்மை பெயர்: கோமதி அம்மை. திருக்கோவில் விருட்சம்: புன்னை […]
மேலும் படிக்க
Palayamkottai Ayirathamman Kovil
பாளையங்கோட்டை மாநகரின் மத்தியில் அமையப் பெற்றுள்ளது ஆயிரத்தம்மன் திருக்கோவில். மைசூர், குலசேகரன்பட்டினம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா திருவிழா மிகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த தசரா திருவிழாவின் முக்கிய கோவிலாக திகழ்வதே இந்த ஆயிரத்தம்மன் திருக்கோவில் தான். இந்த திருக்கோவிலில் உறையும் அம்மன் முன்னர் இருந்த இடம் பட்டாளத்து திடல் என்று அழைக்கப்படும் எருமைக் கடா மைதானம் ஆகும். இது தற்போதும் சமாதானபுரம் பட்டாளத்து மாரியம்மன் கோவில் எதிரே காணப்படுகிறது. இங்கு தான் முதலில் ஆயிரத்தம்மன் […]
மேலும் படிக்க
மேலும் படிக்க

சைவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

வைஷ்ணவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

திருக்கோவில்கள் புகைப்படத்தொகுப்பு

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

தாமிரபரணி நதிக்கரை திருக்கோவில்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தன்பொருநை என்று சிறப்பிக்கப்படும் தாமிரபரணி நதிக்கரையில் எண்ணற்ற பழம்பெருமை வாய்ந்த சிவன் திருக்கோவில்கள், விஷ்ணு திருக்கோவில்கள், கிராம தெய்வங்களின் திருக்கோவில்கள், சாஸ்தா திருக்கோவில்கள், அம்மன் திருக்கோவில்கள், முருகன் திருக்கோவில்கள், விநாயகர் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப்பெற்ற திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை இங்கு நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம்.
திக்கனைத்தும் திருக்கோவில்கள்
  • நவதிருப்பதி
  • நவகைலாயம்
  • ஆதி நவகைலாயம்
  • பஞ்ச குரோச ஸ்தலங்கள்
  • பஞ்ச விக்ரக ஸ்தலங்கள்
  • பஞ்ச பூத ஸ்தலங்கள்
  • பஞ்ச ஆசன ஸ்தலங்கள்
  • நவசமுத்திர ஸ்தலங்கள்
  • முப்பீட ஸ்தலங்கள்
  • சாஸ்தா திருத்தலங்கள்
என திக்கனைத்திலும் திருக்கோவில்களை கொண்டது திருநெல்வேலி!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top calendar-fullmagnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram