Logo of Tirunelveli Today
English

Palayamkottai (பாளையங்கோட்டை)

வாசிப்பு நேரம்: 8 mins
No Comments

பாளையங்கோட்டை மாநகராட்சியின் சிறப்புகள் (Palayamkottai Corporation Specialties)

"தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட்" என்று பெருமையுடன் அழைக்கப்படும் பாளையங்கோட்டை வரலாற்றில் சிறப்பான இடமாக திகழ்கின்றது. புகழ்பெற்ற திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை அமைந்திருக்கிறது. தனி நகராட்சியாக செயல்பட்டு வந்த பாளையங்கோட்டை, திருநெல்வேலி உருவாக்கப்பட்ட பின்பு அதன் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. அனைத்து புகழ்பெற்ற நிறுவனங்களும் ஒரே இடத்தில் காட்சி தருகின்றது என்றால் அதற்கான பெருமை கொண்ட மாநகராக விளங்குகின்றது பாளையங்கோட்டை.

புகழ்பெற்ற கோவில்கள், திருத்தலங்கள், மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள், மிகப்பெரிய நூலகங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் என அதிக அளவில் அமைந்துள்ள பாளையங்கோட்டையில் உள்ள சிறப்புகளைப் பற்றி அனைத்தும் பார்ப்போம்.

பாளையங்கோட்டை என்றாலே நம் நினைவுக்கு வருவது வீரபாண்டிய கட்டபொம்மன். நம்முடைய இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த ஊர் பாளையங்கோட்டை என்பதால் என்றென்றும் புகழ் மணக்கும் மாநகராட்சியாக பாளையங்கோட்டை விளங்குகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களுள் பாளையங்கோட்டை வட்டமும் ஒன்றாகும் வட்டாட்சியர் அலுவலகம் பாளையங்கோட்டையில் தான் அமைந்துள்ளது. முன்னீர்பள்ளம் ,சிவந்திபட்டி, மேலப்பாட்டம், பாளையங்கோட்டை எனும் நான்கு வட்டங்களும் 60 வருவாய் கிராமங்களும் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இந்த வட்டத்தின் கீழ் அமைந்துள்ளது.

பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் கீழ் வண்ணாரப்பேட்டை, பாளை மார்க்கெட் ,மேலப்பாளையம் ,ஹைகிரவுண்ட், சமாதானபுரம், சாந்தி நகர், என். ஜி. ஓ காலனிகள், மகாராஜா நகர், தியாகராஜ நகர், கேடிசி நகர், பெருமாள்புரம் அமைந்து இருக்கின்றது என்பது மிகவும் குறிப்பிடத் தக்கது.

பாளையங்கோட்டையில் சிறப்புக்குரிய சுலோச்சன முதலியார் ஆற்றுப்பாலம் (Palayamkottai Sulochana Mudaliar River Bridge)

சுமார் 175 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்தச் சுலோச்சன முதலியார் ஆற்றுப்பாலம் திருநெல்வேலி- பாளையங்கோட்டை இரட்டை நகரங்களுக்கு மத்தியில் ஓடும் தாமிரபரணி ஆற்றைக் கடந்து செல்வது இணைக்கும் பாலமாக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அமைந்துள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்த சுலோச்சன முதலியார் என்னும் தனி மனிதன் தனது சொத்துக்களை எல்லாம் விற்று அதன் மூலம் வந்த வருமானத்தில் தாமிரபரணி ஆற்றின் மீது ஒரு மேம்பாலத்தைக் கட்டி கொடுத்து மக்களுக்கு அர்பணித்துள்ளார். அவரின் செயலைப் பாராட்டி அவரைக் கௌரவிக்கும் பொருட்டு அந்தப் பாலத்திற்கு அவருடைய பெயரைச் சூட்டி ஆங்கிலேய அரசுச் சிறப்பு செய்தது. அதுதான் திருநெல்வேலி மாநகரத்தில் 175 ஆண்டுகளைக் கடந்து, தற்போதும் பயன்பாட்டில் உள்ள கொக்கிரக்குளம் "சுலோச்சன முதலியார் ஆற்றுப்பாலம்"பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற இடமாக கருதப்படுகிறது.

பழமையான திருக்கோவில்கள் அமைந்த தெய்வீகச் ஸ்தலமாய் பாளையங்கோட்டை (Ancient Temples in Palayamkottai)

பழமையான திருக்கோவில்கள், ஆறுகள், நதிகள் என அனைத்தும் கொண்ட தெய்வீக ஸ்தலமாகவும் பாளையம் கோட்டை அமைந்துள்ளது.
திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டை நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு திரிபுராந்திசுவரர் திருக்கோயில். புராண காலத்தில் செண்பகாரண்யம் என்று வழங்கப்பெற்ற இக்கோவில் பாளையங்கோட்டை சிவன் கோவில் என்றே தற்போது பிரபலமாக அழைக்கப்படுகிறது.

பாளையங்கோட்டை நகரின் மத்தியப்பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்தோடு கம்பீரமாக அமையப்பெற்றுள்ளது அருள்மிகு வேதநாராயணன் அழகியமன்னார் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோயில். இக்கோவிலை இப்பகுதி மக்கள் "கோபாலங்கோவில்" என்றே அழைக்கின்றனர்.

கோலாகலமாக கொண்டாடப்படும் தசரா பண்டிகை (Palayamkottai Dasara Festival)

மைசூர், குலசேகரன்பட்டினம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் தசரா விழா 10 நாட்கள் 12 கோவில்களில் மிகவும் கோலாகலமாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆயிரத்தம்மன் திருக்கோவில் பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா திருவிழா மிகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த தசரா திருவிழாவின் முக்கிய கோவிலாக திகழ்வதே இந்த ஆயிரத்தம்மன் திருக்கோவில் தான். இன்னும் ஏராளமான புகழ்பெற்ற திருத்தலங்கள் பாளையங்கோட்டையில் அமைந்திருக்கின்றது.

மகிழ்வோடு ஆர்ப்பரிக்கும் தாமிரபரணி , மணிமுத்தாறு (Rivers Flowing through Palayamkottai)

தாமிரபரணி, மணிமுத்தாறு ,நம்பியாறு, பச்சையாறு, கடனாறு என நிறைய அருவிகள் ஆறுகளாக தவழ்ந்து ஓடிவரும் அழகை பாளையங்கோட்டையில் நாம் காணலாம்.

மணிமுத்தாறு அணை 1958ஆம் ஆண்டு காமராஜ் ஆட்சியின்போது கட்டப்பட்டது. அந்த நேரத்தில் மழை நீர் சேகரித்து வைப்பதற்காக கட்டப்பட்டது. இங்கு சுற்றியுள்ள பகுதி விவசாயிகளுக்கு இந்த அணையின் மூலமாகத்தான் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அழகிய அருவியாக கொட்டி ஆர்ப்பரிக்கும் ஆறு என்று பார்த்தால் மணிமுத்தாறு அருவி என்பது மட்டுமல்லாது விவசாயிகளுக்கு விளை ஊற்றாய் விளங்கும் மணிமுத்தாறு அணை இரண்டுமே திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டையில் மிக முக்கியமான அம்சம் கொண்டதாய் புகழ் பெற்று விளங்குகிறது.

தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று பெருமையுடன் விளங்கும் பாளையங்கோட்டை (Palayamkottai - Oxford of Tamilnadu)

அறிவுச்சுடர் ஒளிவீச இன்றியமையாத கல்வியை கொடுக்கக் கூடிய மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள் இங்கு ஏராளமாக அமைந்துள்ளது. முதன்முதலில் பார்வையற்றவர் மற்றும் காது கேட்காத கேட்காதவர் பள்ளி பாளையங்கோட்டையில் தான் துவங்கப்பட்டது. அன்று முதல் தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டு பாளையங்கோட்டை பல நாடுகளை முதல் கொண்டு திரும்பி பார்க்க வைத்தது.

செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, புனித சேவியர் கல்லூரி , செயின்ட் லூயிஸ் இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி, மற்றும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களும். வா. உ. சி நினைவு விளையாட்டு மைதானமும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது.

தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பாளையங்கோட்டை சிறை (Famous Palayamkottai Jail)

தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மத்திய சிறைச்சாலை பாளையங்கோட்டை சிறை ஆகும். தமிழகத்திலுள்ள பெரிய சிறைச்சாலைகளில் பாளையங்கோட்டை சிறையும் ஒன்றாக விளங்குகிறது. தமிழ்நாடு சிறை துறையின் கட்டுப்பாட்டில் தற்போது பாளையங்கோட்டை சிறை இருக்கின்றது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பழமையான சிறைச்சாலை இந்தியாவின் விடுதலைக்காக போராடும் வீரர்களை சிறையில் அடைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது பாளையங்கோட்டை சிறையில் கொடுங்குற்றம் புரிந்தோர், அரசியல் கைதிகள் போன்றோரை அடைத்து வைக்கின்றனர். சிறை வளாகத்தைச் சுற்றி உயர்ந்த கோட்டை மதில்களும், அதன் மேல் பகுதியில் மின்னூட்டப்பட்ட இரும்புக்கம்பி வளையங்களும், 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்களும் கோபுரங்களும் உள்ளன. வளாகச்சுவரைச் சுற்றிலும் 10 அடிக்கு ஒரு காவலர் வீதம் நிறுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறை என்பது தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்: பாஞ்சாலங்குறிச்சி

பாளையங்கோட்டையில் பிரதான இடங்களில் அமைந்துள்ள தரமான உணவகங்கள் (Hotels in Palayamkottai)

பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை சரவணபவன் ஹோட்டல் ஒரு சுத்த சைவ உணவகம். தென்னிந்திய வட இந்திய மற்றும் தந்தூரி உணவு வகைகளுடன் மிகவும் அருமையாக கிடைக்கக்கூடிய உணவகம்.. மக்கள் விரும்பும் வகையில் உணவகத்தில் சாப்பாடு ,பஃபே மாடல் ,வெளிப்புற கேட்டரிங் சேவைகள் என அனைத்து வசதிகளும் இந்த உணவகத்தில் நமக்கு கிடைக்கிறது.நெல்லை சரவண பவனில் உணவருந்தவும், ஆன்லைனில் ஆர்டர் செய்யவும் அனைத்து வசதிகளும் இருப்பதால் தரமான உணவகமாக விளங்குகிறது.

முகவரி:
எண் 1D/20, வடக்கு ஹை கிரவுண்ட் சாலை,
ஸ்ரீ சரவணா டவர்ஸ், பாளையங்கோட்டை,
திருநெல்வேலி, டீன் 627002

பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரம் உணவகம் சுத்த சைவ உணவகம். வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தவும் மகிழ்ச்சி அடையச் செய்யவும் தங்களுடைய இலக்குவாக கொண்டு சிறந்த முறையில் உணவகம் நடத்தப்படுகிறது.நியாயமான சேவை கட்டணத்தில் தரமான உணவகமாக ஸ்ரீ மதுரம் உணவகம் திகழ்கின்றது.

முகவரி:
9H, வடக்கு, ஹை கிரவுண்ட் ரோடு,
எதிர் கிருஷ்ணா மருத்துவமனை,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி,
தமிழ்நாடு 627002

மேலும் கேடிசி நகர், அன்பு நகர், தியாகராஜ நகர், முருகன்குறிச்சி, ஸ்ரீ புரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

ஹோட்டல் புளூமூன் பாளையங்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவகம் ஆகும் வாடிக்கையாளர்கள் விரும்பும் வசதிகள் அனைத்தும் கொண்டது. 38 அறைகள் கொண்டு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது. பலவகையான சுவையான உணவுகள் அனைத்தும் இந்த உணவகத்தில் கிடைக்கும்.,ஹோட்டல் ப்ளூ மூன் நகரின் மையத்தில் ஷாப்பிங் மால், தியேட்டர், மார்க்கெட் மற்றும் பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றால்சூழப்பட்டு அழகாய் காட்சியளிக்கும் உயர் ரக உணவகம் ஆகும்.

ஹோட்டல் புளூ மூன்,
940, திருச்செந்தூர் மெயின் ரெட்,
ரஹ்மத் நகர், பாளையங்கோட்டை,
திருநெல்வேலி, தமிழ்நாடு 627011,
இந்தியா.

பல நோய்களுக்கு தீர்வளிக்கும் சிறப்பம்சம் கொண்ட மருத்துவமனைகள் (Multi-speciality Hospitals in Palayamkottai)

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஹை கிரவுண்ட் அதாவது பாளை மேட்டுப்பகுதி என்றழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அரசு மருத்துவமனையில் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் அருகிலேயே திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வேய்ந்தான்குளம் பகுதியில் அமைந்துள்ளது என்பது சிறப்பம்சமாகும்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள P.S மருத்துவமனை அவசர பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மைக்ரோ சர்ஜரி மற்றும் லிபோசக்ஷன் திறன்களைக் கொண்ட அறுவை சிகிச்சை செய்யக்கூடிய வசதிகளைக் கொண்டு 1983 இல் நிறுவப்பட்டு நீண்ட வருடங்களாக சேவையை வழங்கி வருகிறது.

முகவரி:

எண் 53, லங்கார்கானா தெரு,
திருச்செந்தூர் சாலை,
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி - 627002,
தமிழ்நாடு - இந்தியா

அன்னை வேளாங்கண்ணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 1977 முதல் மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கக் கூடிய புகழ்பெற்ற மருத்துவமனையாக திகழ்கின்றது . நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சையளித்து தென் தமிழகத்தின் முற்போக்கான மருத்துவமனையாக பாளையங்கோட்டையில் அமைந்திருக்கிறது .
நியோ-நேட்டாலஜி, ரேடியாலஜி மற்றும் இமேஜிங், நுரையீரல், மருத்துவ புற்றுநோயியல்,, மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவம், ENT, பிளாஸ்டிக் & மைக்ரோ வாஸ்குலர் சர்ஜரி, நெப்ராலஜி, யூராலஜி, காஸ்ட்ரோஎன்டாலஜி எலும்பியல் மற்றும் பொது மருத்துவம் போன்ற அனைத்து சிகிச்சைகளும் இங்கு அளிக்கப்படுகிறது.

முகவரி:

எண் 1/111, சோமாசிநாயனார் தெரு,
பாளையங்கோட்டை,
முருகன்குறிச்சி சிக்னல் அருகில்,
திருநெல்வேலி - 627002,
தமிழ்நாடு - இந்தியா.

திருநெல்வேலிக்கும் பாளையங்கோட்டை இடையின் தூரம் (Tirunelveli to Palayamkottai Distance)

திருநெல்வேலியில் இருந்து பாளையங்கோட்டைக்கு இடையில் உள்ள தூரம் சுமார் மூன்று கிலோமீட்டர். இந்த தூரத்தை கார் மூலம் 9 நிமிடத்தில் சென்றடையலாம்.

பல சிறப்பம்சங்கள் கொண்ட மிகப்பெரிய மாநகராட்சியாக பாளையங்கோட்டை விளங்குகிறது. எதிர்காலத்தில் மேலும் பல சிறப்புகளைகொண்டு பாளையங்கோட்டை திகழும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை . பாளையங்கோட்டை மக்களுக்கு அரசு பல சலுகைகள் அளித்து முன்னேற்றங்கள் கொடுக்கக்கூடிய மாநகராட்சியை உருவாக்கி இருக்கின்றது என்பது பாளையம்கோட்டைக்கு மிகவும் பெருமை தருகின்ற சிறப்பம்சமாக அமைகின்றது.

References

பாளையங்கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா. (n.d.). பாளையங்கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா. Retrieved September 30, 2022, from https://ta.wikipedia.org/s/1b7w

Palayamkottai - Wikipedia. (2022, March 1). Palayamkottai - Wikipedia. Retrieved September 30, 2022, from https://en.wikipedia.org/wiki/Palayamkottai

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2023 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram