Logo of Tirunelveli Today
English

பண்பொழி (Panboli)

Panboli temple Aerial view

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் பண்பொழி இரண்டாம்நிலை பேரூராட்சி அமைந்துள்ளது.

மாவட்டத்திற்கு தலைமையிடமான தென்காசிக்கு கிழக்கே 9 கிமீதொலைவில் பண்பொழி பேரூராட்சி இருக்கிறது. செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலைவிலும். கடையநல்லூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், குற்றாலத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ள பேரூராட்சியாக விளங்குகிறது.

15 வார்டுகளும், 60 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி 8 சகிமீ பரப்பளவு கொண்டு அமைந்திருக்கிறது. இந்த மாநகராட்சி தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் , கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

பண்பொழி நகராட்சியில் மக்கள் தொகை (Population of Panboli , Tirunelveli)

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பண்பொழி பேரூராட்சியில் மக்கள் தொகை 9313 ஆகும். இப்பேரூராட்சியில் 2619 வீடுகள் அமைந்து இருக்கின்றன.

பண்பொழி நகராட்சியின் சிறப்புகள்

பண்பொழி நகராட்சியானது பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது . அந்த பேரூராட்சியில் பண்பொழி திருமலை முருகன் கோயில் உள்ளது.

சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற அச்சன்கோவில் அமைந்துள்ளது.

குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள அழகுகொஞ்சும் பேரூராட்சியாக பண்பொழி விளங்குகின்றது.

பண்பொழி என்றால் இசை விளையும் சோலை என்றும் தென்தமிழ் என்றும் பொருளாகும். பண்பொழில் எனும் பெயர் பேச்சு வழக்கில் திரிந்து பன்புளி என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக பம்புளி அல்லது பம்புளிப் பட்டினம் என்ற பெயரில் இந்த பேரூராட்சி இருந்து வந்தது. முந்தைய கம்பெனிப் பதிவுகளில், கம்பளிப்பட்டினம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி குற்றால மலை, கவிர மலை என மூன்று மலைகள் சேர்ந்து காட்சியளிப்பதால் திரிகூடமலை என்று அழைக்கப்படுகின்றது. பிரணவ மலை என்றும் பெயர் பெற்று திகழ்கின்றது. ஓம் என்ற வடிவில் அமைந்த தெய்வீக மலைகள் அமைந்துள்ள இடமாக பண்பொழி பேரூராட்சி விளங்குகின்றது.

பண்பொழியில் உள்ள புகழ் பெற்ற திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில், வரலாறு (History of Thirumalai Muthukumaraswamy Temple in Panboli , Tirunelveli)

தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் பன்மொழி ஊராட்சியில் அருகே அமைந்துள்ள புகழ் பெற்ற முருகன் கோயிலாகும் . தேவார ஸ்தலம் என்ற பெயர் பெற்ற இந்த கோவில் தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் பண்பொழி பேரூராட்சிகளில் அமைந்துள்ளது

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், கேரள மாநிலத்தின் எல்லையில் முருகப்பெருமான், திருமலை முத்துக்குமாரசுவாமி ஆக இந்த திருக்கோவிலில் எழுந்தருளி இருக்கின்றார். சுரண்டையில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் மூலவராக முருகனும் , மலைமீது திருமலைக்காளியும் காட்சி அளிப்பது இந்தப் ஊராட்சியின் சிறப்பு அம்சமாகும்.

பொதிகை மலையின் இயற்கையான அழகையும் மலையேறிச் செல்லும் மகிழ்ச்சியான தருணத்தையும் பெற விரும்புவோருக்கு பயணம் மேற்கொள்வதற்கு அருமையான தளமாக விளங்குகிறது . முருகப் பெருமான இந்த ஸ்தலத்திலே, கையில் வேலோடு பால முருகனாக மயில் மீது காட்சி தருகிறான். படிகளில் ஏறிச் செல்லும் போது அங்கங்கே ஓய்வு எடுப்பதற்கு அழகான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 500 அடி உயரம் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ள மிகப் பெரிய பிரமாண்டமான கோவிலாகத் திகழ்கிறது.

Aerial view of Panboli town from the Thirumalai Kumaraswamy temple.

Image Credits : Twitter.com

சப்த கன்னிகள் பூஜித்த அஷ்டபத்ம குளம்

பன்மொழி பேரூராட்சியில் மலையின் மீது அமைந்துள்ள திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் தீர்த்தகுளத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைக்கப்படுகிறது . இந்தக் திருக்குளம் தற்போது பூஞ்சுனை என பெயர் கொண்டு விளங்குகிறது. இலக்கியங்களில் சொல்லப்படும் காண்பதற்கு அரிதான குவளை எனும் மலர், தினமும் ஒரு மலராக இந்தக் குளத்தில் மலர்ந்தது இந்த தீர்த்தகுளத்துக்கு உரிய சிறப்பு அம்சமாகும்.

இந்த தீர்த்தக்குளத்தில்தான் சப்த கன்னியரும் எழுந்தருளி முருகனை பூஜை செய்தனர். அனைத்து சிவாலயங்களிலும் சப்த கன்னிசிலைகள் இருக்கும். ஆனால் மிகப் பெரிய பாக்கியமாக இந்த அஷ்டபத்ம தீர்த்தக்கரையில் சப்த கன்னியர்கள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

பிரணவ மலை எனும் புகழ் பெயர் பெற்ற திருமலை

மேற்குத் தொடர்ச்சி மலை தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. அந்த மலையின் தொடர்ச்சியாக நிலப்பகுதியோடு இணைந்து காணப்படும் திருமலை ‘கவிர மலைப்பகுதி’ என்று அழைக்கப்படுகிறது . கரவி மலை என்பது நாளடைவில் வழக்கப் பேச்சாக ’கவிர மலை’ ஆகியது என்பர் .பொதிகை மலையோடு திருக்குற்றால மலையையும் ஒட்டியவாறு ஆய்க்குடியும் கவிரமலையும் அமைந்துள்ளன. கவிர மலைப்பகுதியில்தான் ஆய்க்குடிபகுதியை தலைநகராகக்கொண்டு கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஆய்அண்டிரன் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அழகிய சோலைநடுவினில் காட்சி தரும் கோட்டைத்திரடு கோயில்

பண்பொழி பேரூராட்சியில் அழகிய சோலைநடுவினில் காட்சி தரும் கோட்டைத்திரடு கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சேரநாட்டைச் சேர்ந்த பந்தள அரசர்கள் இந்தக் கோட்டையை அமைத்துள்ளனர். கோட்டையில் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் கோவில் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர்

குளிர்ச்சியான சோலைகளுக்கு இடையில் இருப்பதால், பழங்காலத் தமிழர்கள் "பைம்பொழில்' எனும் பெயரிட்டதாக ரா.பி.சேதுப்பிள்ளை ஊரும் பேரும் நூல்குறிப்பில் குறிப்பிடுகிறார். அனும நதிக் கரையில் "கோட்டைத் திரட்டு' எனும் இடத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே எந்த கோட்டை கட்டப்பட்டிருந்ததாக வரலாறு கூறுகின்றது.

கோட்டைப் பகுதியில் காணப்படும் தூண்கள், மண்டப கற்களில் மீன் சின்னம் , வராஹம் மற்றும் லிங்க சின்னம் என இந்தக் கோட்டைத்திரடு கோவிலில் பொறிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கான சான்றுகளை பண்பொழி பேரூராட்சியில் நீங்கள் காணலாம்.

பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில் திருவிழாக்கள் (Famous festivals in Thirumalai Muthukumaraswamy Temple)

பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோவிலில் திருவிழாக்கள் அனைத்தும் திருமலையின்வண்டாடும் பொட்டலிலும் , மேல்தளத்திலும் பண்பொழியிலும் நடைபெறுகின்றன.

பண்பொழியில் திருமலைக் குமாரசாமிக்கு கார்த்திகை மாதத்தில் மாதகடைசித் திங்கள் அன்று நரீசுவரமுடி அயார்கோயிலுக்கு எதிர்புறம் உள்ள சிங்காரத் தெப்பக் குளத்தில்தெப்ப உற்சவம் வருடா வருடம் சிறப்பாக நடைபெறுகின்றது. தை மாதத்தில் வரும் தைப்பூசத் உற்சவமும் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். ஐப்பசி மாதம் பத்து தினங்களும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக இந்த கோவிலில் நடை பெறுகின்றது. அதுமட்டுமின்றி தமிழ் வருடப்பிறப்பு சித்திரை மாத ஐந்து தினங்கள் தமிழ் மாதப் பிறப்பு உற்சவங்கள் ஏராளமான பக்தர்கள் வருகை புரிய விழா களைகட்டும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

குற்றாலத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்தத் திருமலைக்கும் வந்து திருமலைக்குமார சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.

Image Credits : Blogspot.com

திருமலை குமாரசுவாமி கோயிலுக்கான நடைதிறப்பு விவரங்கள்

திருமலைக்குமாரசுவாமி திருக் கோவிலில் மூலவராக அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி எழுந்தருளியிருக்கிறார் தலவிருட்சமாக புளிய மரமும் பூஞ்சுணை தீர்த்தக் குளமும் உடைய பிரசித்தி பெற்ற கோவிலாக இந்த திருக்கோவில் விளங்குகின்றது.

தினமும் காலை 6 மணி முதல் மதியம்1 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

கோவில் முகவரி: பண்போலி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு 627807
தொலைபேசி எண் : 04633 237 122

மக்களைக் காத்தருளும் பண்பொழி திரௌபதி அம்மன் கோயில்

தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி வட்டத்தில், செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி பேரூராட்சியில் பண்பொழி திரௌபதி அம்மன் கோயில் சக்தி வாய்ந்த கோயிலாக அமைந்துள்ளது.

மகாபாரதத்தில் வரும் மாந்தர்களில், பாண்டுவின் புதல்வர்களில் மூத்தவர் தர்மருக்கும் பஞ்ச பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி என்று அழைக்கப்படும் திரௌபதிக்கும் கோவில் கட்டி, சேனைத் தலைவர் கோமரத்தார்கள் என்ற பிரிவினர் வழிபட்டு வந்தனர். சமத்துவக் கோவில் என பெயர் பெற்ற இந்த திருத்தலத்தில் வெளிப்பிரகாரத்தில் கிழக்குப்பக்கத்தில் முகமதியரின் சமாதி ஒன்று அமைந்திருக்கிறது. இந்த முகமதியரின் சமாதியையும் வெளிப்பிரகாரத்தில் கோவிலைச் சுற்றிவரும் பக்தர்கள் சுற்றி வணங்கி வழிபடுகின்றனர்.

பண்பொழி கோயிலுக்கு நகராட்சியில் அருகில் உள்ள பேருந்து போக்குவரத்து வசதிகள் ( Near by Bus stop to Panboli , Tirunelveli)

பண்பொலி பேருந்து நிலையம்- 5 கிமீ ( காரில் பயணம் செய்தால் 10 நிமிடங்கள் ஆகும்)
தென்காசி மாவட்டம் - 14 கிமீ (காரில் பயணம் செய்தால் 27 நிமிடங்கள் ஆகும்)
குற்றாலம் - 18 கிமீ (காரில் பயணம் செய்தால் 35 நிமிடங்கள் ஆகும்)
திருநெல்வேலிமாவட்டம் - 71 கிமீ (காரில் பயணம் செய்தால் 2 மணி 10 நிமிடங்கள் ஆகும்)

தென்காசி சந்திப்புரயில் நிலையம் (நிலையக் குறியீடு TSI) அருகே மற்றும் செங்கோட்டை ரயில் நிலையம் (நிலையக் குறியீடு SCT) பண்பொழி கிராமத்திற்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.ரயிலில்: அருகிலுள்ள ரயில் நிலையம் தென்காசி சந்திப்பு, செங்கோட்டை ரயில் நிலையம்

பண்பொழி பேரூராட்சிக்கு அருகே தூத்துக்குடி, திருவனந்தபுரம் மற்றும் மதுரையில் தளங்கள் இருக்கின்றது.

பண்பொழி பேரூராட்சி ஒரு சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு வருகை புரிந்து இயற்கைச் சூழலைக் கண்டு களிக்கின்றனர்.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram