இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் தொகுதியின் கீழ்பாஞ்சாலங்குறிச்சி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமமானது ஓட்டப்பிடாரத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 21 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள இடமாகும். மாநிலத் தலைநகர் சென்னையில் இருந்து 607 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.பதினெட்டாம் நூற்றாண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த இடமாக பாஞ்சாலங்குறிச்சி திகழ்கின்றது.பாஞ்சாலங்குறிச்சியின் அஞ்சல் குறியீட்டு எண் 628401 ஆகும்.
Image Credit : thoothukudi.nic.in
மாமன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடமாக பாஞ்சாலங்குறிச்சியை நாம் பார்க்கிறோம் . வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து முதன் முதலில் வீர முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த புனித பூமியில் தான் திறம்பட வீரம் செழிந்திட ஆட்சி புரிந்தான் . இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதி மூச்சு வரை அசாதாரண துணிச்சலுடன் போராடியவர் நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாக வாழ்ந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
வீரபாண்டிய கட்டபொம்மன் இந்திய வரலாற்றிலேயே ஒரு தனி அகராதியில் இடம் பிடித்தார் என்கின்றது வரலாறு. வீரத்திற்கே எடுத்துக்காட்டாய் இந்திய சுதந்திர வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாறு.
அப்படிப்பட்ட மாபெரும் பெருமையுடன் விளங்கும் பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டிய மன்னர் வசம் வந்தது எப்படி! என்பது ஒரு சுவாரஸ்யமான வரலாறு.
பஞ்ச பாண்டியரின் வழிவந்த ஜகதீரபாண்டியர் , மன்னராக ஒட்டப்பிடாரம் எனும் அழகிய வீரபாண்டிய புரத்தை ஆட்சி செய்து வருகிறார் . இவரிடம் ஆதி கட்டபொம்மு என்பவர் காவல்காரராய் பணியாற்றி வந்தார்.
தம்முடைய சிறப்புமிகு செயலால் அரசு குடும்பத்தின் நம்பிக்கையை கட்டபொம்மு முழுமையாக பெறுகிறார். அவருடைய பணியில் உள்ள நேர்மை கண்டு ஜகதீரபாண்டியன் மனம் மகிழ்ந்து , அவரை தம்முடைய குடும்பத்தில் ஒருவராய் நினைத்து பழகுகிறார்.
வருடங்கள் நகர்கின்றன. மன்னர் ஜெகதீரபாண்டியனுக்கு வேறு சந்ததி இல்லாததால் கட்டபொம்முவிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்கின்றார். கட்டபொம்முவும் விசுவாசமாக நடந்து கொண்டதால் மிகப்பெரிய அரச பதவி அவருக்கு கிடைக்கின்றது.
கட்டபொம்மு தம்முடைய பெயருடன் மன்னரின் நினைவாக, பாண்டியன் என்ற பெயரையும் தன்னோடு இணைத்து கொண்டு கட்டபொம்ம பாண்டியனாக வீரபாண்டியபுரத்தை (பாஞ்சாலங்குறிச்சி) ஆட்சி செய்கிறார்.
கட்டபொம்மு தம்முடைய முன்னோரின் நினைவாக பின்னர் பாஞ்சாலங்குறிச்சி என பெயர்மாற்றம் செய்தார். தூத்துக்குடியின் கோவில்பட்டி தாலுகாவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி பாரம்பரியமாக மதுராவின் 72 பாளையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பாஞ்சாலங்குறிச்சியில் 1760 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி இரண்டாம் ஜெகவீரபாண்டியனுக்கும் ஆறுமுகத்தம்மாளுக்கும் பிறந்தவர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன். வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சிக்கு வந்த பிறகு பாஞ்சாலங்குறிச்சி தனித்துவம் வாய்ந்த இடமாக புகழ் பெற்றது.
திருச்செந்தூர் அருகே சாலிகுளத்தில் அமைந்துள்ள பாஞ்சாலங்குறிச்சி கோட்டை அல்லது வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை ஒரு புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். கட்டபொம்மன், ஊமைத்துரை, இவர்களின் காலங்களுக்கு பிறகு அவர்கள் வாழ்ந்து வந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.1974 ஆம் ஆண்டு தமிழக அரசால் கட்டப்பட்டது பின்னர் பழங்கால கோட்டையை ஒத்து அமைக்கப்பெற்ற புதிய கோட்டை இந்நாளளவும் கட்டபொம்மன் புகழ் பாடி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. 1977 ஆம் ஆண்டு முதல் இக்கோட்டை இந்திய சுற்றுலா துரையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது. மேலும் பழைய கோட்டையின் எஞ்சி இருக்கும் அடிப்பகுதி அமைப்புகள் அகழ்வாராய்ச்சி துரையின் பராமரிப்பில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள பாஞ்சாலங்குறிச்சி கோட்டை அப்பகுதியின் மிகச் சிறப்பான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.இந்த கோட்டையானது வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவாக கட்டப்பட்டது . மேலும் ஆங்கிலேயருக்கு எதிராக மிக வீரத்தோடு போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவாகவும் இந்த இடம் திகழ்கின்றது.
Image Credit : thoothukudi.nic.in
தற்போதுள்ள கட்டபொம்மன் நினைவுக் கோட்டை. நினைவு மண்டபம், சுவர்களில் வீரச் செயல்களை சித்தரிக்கும் அழகிய சாயாவின் ஓவியங்கள் காலத்தின் வரலாற்றைபிரதிபலிக்கிறது. கட்டபொம்மனின் குலதெய்வமான ஸ்ரீ தேவி ஜக்கம்மாள் கோயில் கோட்டைக்கு அருகில் உள்ளது. கோட்டைக்கு அருகில் பிரிட்டிஷ் வீரர்களின் கல்லறையையும்பார்க்கலாம். இந்திய தொல்லியல் துறையால். பழைய கோட்டையின் எச்சங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை கோட்டையை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை . சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.. மற்ற அனைத்து நாட்களிலும் மாலை 6 மணி வரை பார்வையாளர்கள் கோட்டையைச் சுற்றிப் பார்க்கலாம் குறைந்த கட்டணமே நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 2006 ஆண்டு முதல் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் பாஞ்சாலங்குறிச்சியில் விழாவைநடத்தி வருகிறது. திருநெல்வேலிக்கு அருகில் . கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடமான கயத்தாறில் அவருக்கு மற்றொரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
பாஞ்சாலங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தரிசிப்பதற்கு ஏராளமான கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலும் புகழ் பெற்ற கோவிலாக விளங்குகிறது. பாஞ்சாலங்குறிச்சியில் ஶ்ரீ மயிலேறும் பெருமாள் ஐயனார் திருக்கோயில், வெங்கடேஸ்வரபுரத்தில் அருள்மிகு ஸ்ரீமாட்டுடையார் சாஸ்தா திருகோவில்,ஒட்டப்பிடாரம் வெள்ளரத்தில் ஸ்ரீ காளி அம்மன் கோவில் , கே.தளவாய்புரபுரத்தில் ஸ்ரீ விநாயக கோவில் என ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள கோவிலைத் தரிசிப்பதற்கு வருகை புரிகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 15 மற்றும் மே இரண்டாவது வாரத்தில் கட்டபொம்மன் திருவிழா கட்டபொம்மனை போற்றும் வகையிலும், அவரை நினைவு கூறும் வகையிலும் கொண்டாடப்படுகிறத . இந்த திருவிழாவின் போது சிறிய மாட்டு வண்டி பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது என்பது மிகவும் சிறப்பு அம்சமாகும் .
பாஞ்சாலங்குறிச்சிக்கு 165 கிலோமீட்டர் தொலைவில் மதுரை விமான நிலையம் உள்ளது . தூத்துக்குடியில் இருந்து நகர பேருந்து சேவைகள் உள்ளன. தூத்துக்குடியில் இருந்து 25 கிலோமீட்டர், திருநெல்வேலியில் இருந்து 55 கிலோமீட்டர் பேருந்தில் செல்ல வேண்டும்.
கைலாசு புறத்தில் அமைந்துள்ள TDTA K.G.M.H.S,S.பள்ளி தருவை குளத்தில் அமைந்துள்ள அரசு ஹெச்எஸ்எஸ், பள்ளி புதியம்புத்தூரில் அமைந்துள்ள ஜான் பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி. காட்டுநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள நடராஜன் மேல்நிலைப்பள்ளி,
தூத்துக்குடியில் செய்துங்கநல்லூரில் செயின்ட் மேரி கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது.
கயத்தாறில் பாபா கல்வியியல் கல்லூரிஅமைந்துள்ளது.
திருச்செந்தூர் நாசரேத் கிராமத்தில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி, அமைந்துள்ளது.
நாகலாபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது.
கோவில்பட்டியில் நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த இடமான பாஞ்சாலங்குறிச்சி வீர மண்ணாக சிறப்பு வாய்ந்த இடமாக இன்றும் திகழ்கின்றது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை வந்து பார்த்து விட்டுச் செல்வது பாஞ்சாலங்குறிச்சிக்கு இருக்கக்கூடிய தனிப்பட்ட சிறப்பாகும்.