Logo of Tirunelveli Today
English

குல சாஸ்தா, குல தெய்வம் கோவில்கள் பற்றிய தொகுப்பு

Multitudes of families gathered at their ancestral temple praying to their ancestral Saasthas.

குல சாஸ்தா, குல தெய்வம் கோவில்கள் பற்றிய தொகுப்பு

திருநெல்வேலி ஜில்லா என்று பொதுவாக அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் நாஞ்சில் நாடு  என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ வழிபாடு செய்வது விசேஷமாக நடைபெறும். இதற்காக அன்று இந்தப் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல சாஸ்தா கோவில் இருக்கும், அந்தக் குடும்பத்திற்கென ஒரு குலதெய்வமும் இருக்கும். பெரும்பாலும் சாஸ்தா கோவில்கள் ஒவ்வொரு சாஸ்தா பெயரிலும் தனித் தனியாக இருக்கும். குல தெய்வங்கள் அந்த சாஸ்தா கோவில்களில் பரிவார தெய்வங்களாக வீற்றிருந்து அருள்பாலிக்கும். சில குடும்பங்களுக்கு எல்லை காவல் தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும். சில குடும்பங்களுக்கு அந்த ஊரின் பிரதான தெய்வங்களான சிவன், முருகன், அம்பாள், விஷ்ணு போன்ற தெய்வங்கள் குல தெய்வங்களாக இருக்கும். பெரும்பாலும் இந்த சாஸ்தா கோவில்களும், குல தெய்வ கோவில்களும் ஊருக்கு வெளியே எல்லைப்பகுதியிலும், ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும், மலை அடிவாரத்திலும், மலைமீதும், வனப்பகுதியிலும் என அமையப்பெற்றிருக்கும். பங்குனி உத்திரம் அன்று தவறாமல் இப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் இந்தக் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பணிநிமித்தம் காரணமாக வெளியூர் சென்று குடியிருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ வழிபாடு செய்யத் தவறாமல் தங்கள் சொந்த ஊருக்கு வந்துவிடுகிறார்கள்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி , கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதோடு குல தெய்வங்கள் கோவிலையும் சேர்த்து கணக்கிட்டால் கிட்டத்தட்ட மூவாயிரம் கோவில்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவற்றுள் இங்கு நாம் முக்கியமான மற்றும் பிரசித்தி பெற்ற சாஸ்தா கோவில்களின் பட்டியலையும், குல தெய்வங்களின் பட்டியலையும் காணலாம்.

சாஸ்தா கோவில்கள் - 108:

  1. காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்.
  2. பிராஞ்சேரி வீரியப்பெருமாள் சாஸ்தா திருக்கோவில்.
  3. காருக்குறிச்சி களக்கோடி தர்மசாஸ்தா திருக்கோவில்.
  4. திருச்செந்தூர் - மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில்.
  5. பாபநாசம் ஹரிஹர புத்திர இந்திர சாஸ்தா திருக்கோவில்.
  6. மலையான்குளம் பாடகலிங்க சாஸ்தா திருக்கோவில்.
  7. ஶ்ரீ பசுங்கிளி சாஸ்தா கோயில்
  8. கீழ்ப்பிள்ளையார்குளம் திருமேனி அழகர் சாஸ்தா திருக்கோவில்.
  9. திருநெல்வேலி நகரம் முருங்கையடி சாஸ்தா திருக்கோவில்.
  10. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வளாகம் வன்னியடி செண்பக சாஸ்தா திருக்கோவில்.
  11. பிராஞ்சேரி வீரியப்பெருமாள் சாஸ்தா திருக்கோவில்.
  12. ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா திருக்கோவில்.
  13. ஆழ்வார்குறிச்சி குளத்தூர் அய்யன் சாஸ்தா திருக்கோவில்.
  1. நாணல்காடு அறம்வளர்த்தநாதர் சாஸ்தா திருக்கோவில்.
  2. புளியங்குளம் செந்தில்வேல் அய்யன் சாஸ்தா திருக்கோவில்.
  3. மன்னார்கோவில் பூலுடையார் சாஸ்தா  திருக்கோவில்.
  4. திருப்பணிகரிசல்குளம் சேவுகப்பெருமாள் சாஸ்தா திருக்கோவில்.
  5. கழுகுமலை திருவானைக்காவல் சாஸ்தா அய்யனார் திருக்கோவில்.
  6. கற்குவேல் அய்யனார் கோயில்.
  7. கடம்பாகுளம் பூலுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  8. தெற்கு வள்ளியூர் கருமேனி சாஸ்தா திருக்கோவில்.
  9. தெற்கு வண்டானம் வலதுடையார் அய்யனார் திருக்கோவில்.
  10. சேதுக்குவாய்த்தான் (ஏரல்)  சூலுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  11. கொற்கை அழகுமுடி சாஸ்தா திருக்கோவில்.
  12. உமரிக்காடு கோட்டை வாழ் ஐயன் திருக்கோவில்.
  13. பழையகாயல் துரையப்ப சாஸ்தா திருக்கோவில்.
  14. ஆத்தூர் தர்மசாஸ்தா திருக்கோவில்.
  15. ஆத்தூர் திட்டு முட்டு சாஸ்தா திருக்கோவில்.
  16. சேர்ந்தபூமங்கலம் நல்லுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  17. சொக்கப்பழங்கரை வன்னி உடையார் சாஸ்தா திருக்கோவில்.
  1. அங்கமங்கலம் நரசிம்ம சாஸ்தா திருக்கோவில்.
  2. பெருங்குளம் தர்மபெருமாள் சாஸ்தா திருக்கோவில்.
  3. வெள்ளூர் இலங்காமணி சாஸ்தா திருக்கோவில்.
  4. புதுக்குடி பரியேறும் பெருமாள் சாஸ்தா திருக்கோவில்.
  5. செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா திருக்கோவில்.
  6. ஆலங்கிணறு நெல்லால் பொங்கலிட்ட நெட்டுவான் கோட்டை ஐயனார் திருக்கோவில்.
  7. சாத்தான்குளம் திருநாவுக்கரசு சாஸ்தா திருக்கோவில்.
  8. தோழப்பன்பண்ணை பொய் சொல்லா மெய்யர் சாஸ்தா திருக்கோவில்.
  9. ஶ்ரீவைகுண்டம் வெயிலுகந்த பெருமாள் சாஸ்தா திருக்கோவில்.
  10. சிறுத்தொண்டநல்லூர் அடைக்கலம் காத்த ஐயனார் திருக்கோவில்.
  11. மங்கலக்குறிச்சி ஆணையப்ப சாஸ்தா திருக்கோவில்.
  12. தெய்வநாயகப்பேரி செம்புகுட்டி ஐயனார் திருக்கோவில்.
  13. முக்காணி காணியாள ஐயனார் திருக்கோவில்.
  14. சித்தூர் தென்கரை மஹாராஜா திருக்கோவில்.
  15. அனந்தநம்பிகுறிச்சி அழகர் சாஸ்தா திருக்கோவில்.
  16. வரண்டியவேல் பொன்படைப்போர் சாஸ்தா திருக்கோவில்.
  17. ஏரல் - ஆலடியூர் பூதத்தநயினார் சாஸ்தா கோயில்.
  18. பண்டாரவிளை குளம் வேம்படி சாஸ்தா திருக்கோவில்.
  19. மூன்றடைப்பு - தோட்டாக்குடி சிதம்பரேஸ்வரர் சாஸ்தா திருக்கோயில்.
  20. தோழப்பன்பண்ணை நத்தமுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  21. வல்லநாடு மேகமுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  22. ஆறுமுகமங்கலம் பிறர்குடி வாழ் ஐயன்  சாஸ்தா திருக்கோவில்,
  23. நொச்சிகுளம் பிழை பொறுத்த பெருமாள் சாஸ்தா திருக்கோவில்.
  24. இராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையார் சாஸ்தா திருக்கோவில்.
  25. பத்தமடை மகாலிங்க சாஸ்தா  திருக்கோவில்.
  26. மானாடு - தண்டுபத்து கலியுக வரதர் சாஸ்தா திருக்கோவில்.
  27. பேரூரணி கரும்புலி சாஸ்தா திருக்கோவில்.
  28. ஶ்ரீவைகுண்டம் - நளன்குடி  மயிலேறும் பெருமாள் சாஸ்தா திருக்கோவில்.
  29. கீழமுடிமண் ஸ்ரீ வீரப்பெருமாள் அய்யனார் சாஸ்தா திருக்கோவில்.
  30. சிவராமமங்கலம் பெரிய சாஸ்தா திருக்கோவில்.
  31. வல்லக்குளம் - கால்வாய் ஸ்ரீ கலிதீர்த்தப்பெருமாள் சின்னத்தம்பி சாஸ்தா திருக்கோவில்.
  32. பிடாநேரி வாழவந்த பெருமாள் சாஸ்தா திருக்கோவில்.
  33. மேலத்திருச்செந்தூர் குன்றுமலை மேல் ஐயன் சாஸ்தா திருக்கோவில்.
  34. மேலப்பாவூர் ஸ்ரீ மருத உடையார் தர்ம சாஸ்தா திருக்கோவில்.
  35. மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  36. இராமையன்பட்டி மேகமுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  37. கங்கை கொண்டான் செண்பக சாஸ்தா  திருக்கோவில்.
  38. பாப்பான்குளம் சடையுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  39. வெள்ளூர் பிழை பொறுத்த அய்யனார்  திருக்கோவில்.
  40. மஞ்சள்நீர்க்காயல் பெரும்படை சாஸ்தா திருக்கோவில்.
  41. தச்சன்விளை ஆணை மேல் ஐயன் சாஸ்தா திருக்கோவில்.
  42. பாளையங்கோட்டை நடுக்காவுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  43. மேலநத்தம் ஆணையப்ப சாஸ்தா திருக்கோவில்.
  44. மேலப்பாட்டம் ஆயிரங்காவய்யன் சாஸ்தா திருக்கோவில்.
  45. படப்பக்குறிச்சி குளத்துப்புழை அய்யன் சாஸ்தா திருக்கோவில்.
  46. சேரன்மகாதேவி செங்கொடி சாஸ்தா திருக்கோவில்.
  47. பூதத்தான் குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா திருக்கோவில்.
  48. ஆண்டிபட்டி ஆனைமலை சாஸ்தா திருக்கோவில்.
  49. வடுகச்சிமதில் புலி உடையார் சாஸ்தா  திருக்கோவில்.
  50. சிறுமளஞ்சி பெருவேம்புடையார் சாஸ்தா திருக்கோவில்.
  51. களக்காடு பெருவுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  52. படலையார்குளம் வென்னியுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  53. ஆழிகுடி குருந்துடையார் சாஸ்தா திருக்கோவில்.
  54. இராஜவல்லிபுரம்  நல்லதம்பி சாஸ்தா  திருக்கோவில்.
  55. முத்தாலங்குறிச்சி பூந்தலை உடையார் சாஸ்தா திருக்கோவில்.
  56. பொந்தன்பொழி மருதமுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  57. பாவூர்சத்திரம் கைகொண்டார் சாஸ்தா திருக்கோவில்.
  58. கடையம் சூட்சமுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  59. ராமநதி தலைமலை அய்யனார் சாஸ்தா திருக்கோவில்.
  60. நரசிங்கநல்லூர் முருகுவுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  61. பூவாணி நிறைகுளத்து அய்யனார் சாஸ்தா திருக்கோவில்.
  62. கரந்தாநேரி பூலுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  63. உக்கிரன்கோட்டை அணைக்கரை சாஸ்தா திருக்கோவில்.
  64. மேகலிங்கபுரம் மேகலிங்கசாஸ்தா திருக்கோவில்.
  65. பழவூர்  வேலங்கி அய்யனார் சாஸ்தா திருக்கோவில்.
  66. தாழையூத்து பாலுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  67. சிவகளை சேரந்தையர் சாஸ்தா திருக்கோவில்.
  68. மூலைக்கரைப்பட்டி தெய்வேந்திரமுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  69. அருணாப்பேரி மேகம் திரை கொண்ட சாஸ்தா திருக்கோவில்.
  70. ஆறுமுகனேரி குளக்கரை பண்டார சாஸ்தா திருக்கோவில்.
  71. ஆலங்குளம் வன்னியடி செண்பக சாஸ்தா திருக்கோவில் .
  72. தென்திருப்பேரை நிறைகுளத்து சாஸ்தா திருக்கோவில்.
  73. தெற்கு கருங்குளம் பூ சாஸ்தா திருக்கோவில்.
  74. நாகல்குளம் பட்டமுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  75. களக்காடு அகலிகை சாபம் தீர்த்த சாஸ்தா திருக்கோவில்.
  76. மாணிக்க திட்டு ஆயிரங்கண்ணூடையார் சாஸ்தா திருக்கோவில்.
  77. இடைகால் வெண்கலமுடையார் சாஸ்தா திருக்கோவில்.
  78. கடையநல்லூர் தலைகாவுடையார் சாஸ்தா திருக்கோவில்.
இதையும் படியுங்கள்: ஶ்ரீ பாண்டுரங்கன் கோவில்

குல தெய்வங்கள் - 51:

  1. சங்கிலி பூதத்தார்  
  2. சுடலை மாட சாமி 
  3. பேச்சி அம்மன்
  4. பிரம்மராட்சி அம்மன் 
  5. தளவாய் மாட சாமி 
  6. தூசி மாட சாமி 
  7. இசக்கி அம்மன் 
  8. சின்னத்தம்பி 
  9. தடிவீரன் 
  10. கும்பமுனி 
  11. பட்டவராயர் 
  12. கரடி மாட சாமி 
  13. கரையடி மாட சாமி 
  14. கச மாடன் 
  15. மாடத்தி அம்மன் 
  16. முப்பிடாதி அம்மன் 
  17. நாலாயிரத்தம்மன் 
  18. வடக்குவா செல்வி அம்மன் 
  19. அலங்கார செல்வி அம்மன் 
  20. திருவரங்க செல்வி அம்மன் 
  21. பிட்டாபுரத்தி அம்மன் 
  22. பேராத்து செல்வி அம்மன்
  23. பாலகுருநாதசாமி 
  24. அங்காளபரமேஸ்வரி அம்மன் 
  25. முத்தாரம்மன் 
  26. ஆயிரத்தம்மன் 
  27. கருப்பசாமி 
  28. திருவடி போத்தி 
  29. தூத்துவாரி அம்மன் 
  30. உச்சினிமாகாளி அம்மன் 
  31. உலகம்மன் 
  32. சந்திமறித்தம்மன் 
  33. சந்தனமாரி அம்மன் 
  34. ஐகோர்ட் மஹாராஜா 
  35. தீப்பாய்ச்சி அம்மன் 
  36. வண்டிமலைச்சி அம்மன் 
  37. பாதாள கண்டி அம்மன் 
  38. சப்த கன்னியர்கள் 
  39. தம்பிராட்டி அம்மன் 
  40. மலைபார்வதி அம்மன் 
  41. தளவாய் போத்தி
  42. லாட சன்னியாசி
  43. தவசி தம்புரான்
  44. வீரபத்திரர்
  45. ஆழிபோத்தி
  46. சிவனிணைந்த பெருமாள்
  47. பத்ரகாளி அம்மன்
  48. பன்றி மாட சாமி
  49. சப்பாணி மாட சாமி 
  50. கழுநீர் தொட்டியான் 
  51. முனீஸ்வரர் 

 

 

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram