திருநெல்வேலி அருகே உள்ள கழுகுமலை ஸ்ரீ கழுகாசலமூர்த்தி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோவில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குடைவரைக் கோயில் ஆகும். இங்குக் கருவறையில் காட்சி தரும் மூலவர் ஸ்ரீ கழுகாசலமூர்த்தி, மயில்மீது அமர்ந்த கோலத்தில் ஒரு முகம் மற்றும் ஆறு கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இங்குக் கோடை காலத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக, அக்னி நட்சத்திர காலத்தில் கருவறையில் உள்ள முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு கருவறையை சுற்றிலும் தண்ணீர் கொண்டு நிரப்பப்படும் நிகழ்வு சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இவ்வருடம் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் கழுகுமலை திருக்கோயில், ஸ்ரீ கழுகாசலமூர்த்தி உறையும் கருவறை முழுவதும் சுமார் இரண்டு அடி உயரத்துக்கு, திருக்கோயில் தீர்த்தம் குமார தெப்பத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு நிரப்பட்டது. கோடை கால அக்கினி நட்சத்திர வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் வெம்மையில் இருந்து முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு இந்த நிகழ்வு இங்கு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று தொடங்கிய இந்த நிகழ்வு அக்னி நட்சத்திர காலமான பின் வரும் 24 நாட்களும் தொடர்ந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த நிகழ்வில் பக்தர்கள் பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Vellakulam Village Check Dam on Stream - 19 min (10.4 km)
- சுந்தர கோனார் தோட்டம் - 39 min (23.9 km)
- Azhagu Muthu Kone Memorial - 23 min (12.1 km)
- Tamilakurichi Dam - 1 hr 38 min (67.9 km)
- Karaiyadiur lake - 2 hr 5 min (101 km)