அத்வைதம் என்ற உயர்ந்த தத்துவத்தைப் பரப்பிய மகான் ஆதிசங்கரர் அவதரித்த தினம் இன்று.
வரலாற்று ஆய்வாளர்கள் கூற்றின் படி பல சங்கரர்கள் பல்வேறு காலங்களில் இருந்திருக்க வேண்டும். அதில் முதலாய் விளங்கியது ஆதிசங்கரர் என்று நாம் கொள்ளலாம். எது எப்படியோ இந்த சங்கரர் பெயரில் தான் பல்வேறு நல்ல செயல்கள் நடந்துள்ளது. இது கதை என்றெல்லாம் பலர் கூறினாலும் சமய ஒருமைப்பாடு என்ற ஒற்றுமையைக் கொண்டு வந்த மிகப் பெரிய செயல் வடிவம் "ஆதிசங்கரர்" தான்.
சங்கரர் காலத்திற்கு முன் சனாதன தர்மம் பல்வேறு வகைகளாகப் பிரிந்து இருந்தது.
அவற்றுள் மேற்கண்ட ஆறு சமயங்களை சங்கரர் ஒருங்கிணைத்தார்.
கேரளாவில் உள்ள காலடியில் பிறந்த சங்கரர் சிவ அம்சம் என்றே கூறுவர்.சௌந்தர்ய லஹரி, மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம், பஜ கோவிந்தம், மீனாக்ஷி பஞ்சரத்னம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற பல நூல்களை இயற்றினார். பிரம்ம சூத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியவற்றிக்கு உரை எழுதினார். பாரதம் முழுதும் நடந்து, 4 மடங்கள் நிறுவி, பற்பல அற்புதங்கள் புரிந்து தனது 32 வயதில் முக்தி அடைந்தார்.
அத்வைதம் என்பது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்ற தத்துவத்தை பிரபலபடுத்தியவர் ஆதிசங்கரரை இந்த நாளில் நினைந்து போற்றி வணங்குவோம்.