இன்று தேய்பிறை அஷ்டமி., பைரவர் வழிபாடு.!

Bairavarஇன்று சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி. பொதுவாக அஷ்டமி திதி என்பது பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. அனைத்து சிவாலயங்களிலும்  ஈசான மூலையில் தெற்கு நோக்கிய பைரவர் சன்னதி அமையப்பெற்றிருக்கும். பைரவர் மகா சக்தி படைத்த தெய்வமாக வணங்கப்படுகிறார். இவர் தீய சக்திகளையும், தீயவர்களையும் துவம்சம் செய்து அநீதியை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. எனவே பைரவரை அஷ்டமி திதியில் அவருக்கு பிடித்தமான வடை மாலை, செவ்வரளி பூ மாலை சாற்றியும், தயிர் சாதம், மிளகு சாதம் படைத்தும் வணங்குவது சிறப்பு பலனை தரும்.  திருநெல்வேலி பகுதியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இன்று மாலை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது. எனினும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இன்று நடைபெறும் பூஜையில் பக்தர்கள் பங்கு கொள்ள முடியாது. எனவே வீட்டில் இருந்த படியே பைரவரை மனதில் நினைத்து வழிபடுவோமாக.!

About Lakshmi Priyanka

Avatar

Check Also

திருநெல்வேலி கோடை வசந்த உற்சவம் நேற்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது..!

திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் – ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோவில். இங்கு சித்திரை …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.