கல்லிலே கலை வண்ணம் கண்ட நம் முன்னோர்கள், கல்லில் இசை வண்ணமும் கண்டுள்ளனர் என்பதற்கு சான்றாக விளங்குகிறது கல் நாதஸ்வரம். தமிழகத்தில் மிகவும் அரிதாக காணப்படும் இந்த கல் நாதஸ்வரத்தை நெல்லை அருகில் உள்ள, ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவிலில் இன்றும் நாம் காண முடிகிறது. இங்கு காணப்படும் கல் நாதஸ்வரம் சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
முன்னர் இந்த பகுதியை ஆட்சி செய்த கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் இந்த கல் நாதஸ்வரம் இந்த கோவிலுக்கு வழங்கப்பட்டதாக ஸ்தல புராணம் மூலம் தெரிய வருகிறது. முன்னர் இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் பிரபலமாக இசைக்கப்பட்ட இந்த கல் நாதஸ்வரம் தற்போது அதன் பழமை காரணமாக மரப்பெட்டிக்குள் வைத்து வைத்து பூட்டி பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.