திருநெல்வேலி அருகில் உள்ளது திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.
பொதுவாக ஒரு கோவிலில் ஒரு உற்சவர் அல்லது சில இடங்களில் இரண்டு உற்சவர்கள் திருமேனி அமையப்பெற்றிருக்கும். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் இந்த திருக்கோவிலில் நான்கு உற்சவர்கள் காட்சி தருவது சிறப்பம்சம் ஆகும்.
திருச்செந்தூரில் காட்சிதரும் நான்கு உற்சவர்கள்:
இதில் ஆறுமுகநயினார் வருடத்திற்கு இரண்டு முறை ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களில் திருவீதி உலா எழுந்தருளுவார். கந்த சஷ்டி சூரசம்ஹார விழா மற்றும் தினசரி தங்க தேர் உலா ஆகியவற்றில் ஜெயந்திநாதர் எழுந்தருளுவார். ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களிலும், பங்குனி உத்திரம் - ஐப்பசி திருக்கல்யாணத்திலும் குமரவிடங்க பெருமான் எழுந்தருளுவார். வைகாசி விசாகம் அன்று மயில் வாகனத்தில் அலைவாயு கந்த பெருமான் எழுந்தருளுவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.