கார பிடி கொழுக்கட்டை என்பது அரிசி மாவுடன், மசாலா பொருட்கள் சேர்த்து தாளித்து, காரசாரமாக செய்யப்படும் உணவு வகை ஆகும். கை விரல்களால் அழுத்தி பிடித்து இது செய்யப்படுவதால் இது பிடி கொழுக்கட்டை என வழங்கப்படுகிறது. காரம் சேர்த்து செய்தால் கார பிடி கொழுக்கட்டை, இனிப்பு கலந்து செய்தால் இனிப்பு பிடி கொழுக்கட்டை என இதில் இரண்டு வகைகள் உள்ளன. காலை உணவிற்கு கார பிடி கொழுக்கட்டை ஏற்றதாக இருக்கும். காலை உணவாக இதை தயார் செய்யும் போது, சூடான கொழுக்கட்டையை தேங்காய் சட்னி அல்லது கார சட்னி உடன் பரிமாறலாம். இப்போது நாம் கார பிடி கொழுக்கட்டையின் செய்முறை பற்றி இங்கு நாம் காணலாம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
புழுங்கல் அரிசியை எடுத்து தண்ணீரில் களைந்து, ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்னர் அதனை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் தேவையான உப்பு சேர்த்து இருப்புச் சட்டியில் போட்டு இளம் சூட்டில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, குத்துப் பருப்பு போட்டு தாளித்து, கடலைப்பருப்பு, கிள்ளிய மிளகாய் வத்தல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து அதனுடன் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள மாவை சேர்த்து நன்றாக கிளறி பிசைந்து கொள்ளவும். பின்னர் இதனை உருட்டி கைகளால் கொழுக்கட்டையாக பிடித்து இட்லி தட்டில் வைத்து நீராவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் கார பிடி கொழுக்கட்டை தயார்.
குறிப்பு:
மாவை கொழுக்கட்டையாக பிடிக்கும் போது கைகளில் சிறிது நல்லெண்ணெய் தடவிக் கொண்டால் மாவு பின்னர் நன்றாக வெந்தவுடன் ஒட்டாமல் பிடிக்க முடியும்.