திருநெல்வேலி மாவட்டத்தில் ஆடி மாதம் கடைசி தினம் அன்று முன்னோர்களை வணங்கும் வகையில் ஆடி இறுதி வழிபாடு செய்யப்படும். இந்த நாளில் பிரசாதமாக படைக்க கும்மியானம் பிரத்யேகமாக செய்யப்படும். இந்த கும்மியானத்தில் பல தானியங்கள் மற்றும் கருப்பட்டி சேர்ந்துள்ளதால் இது உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு உணவாக விளங்குகிறது. இப்போது நாம் அந்த கும்மியானம் செய்யும் முறை பற்றி இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பாசி பயறு, கொண்டைக்கடலை, கடலை பருப்பு, கானம்(கொள்ளு) , தட்டாம் பயறு, பச்சரிசி ஆகிய அனைத்தையும் தனித்தனியாக இருப்புச் சட்டியில் போட்டு இளம் சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதனை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக திரித்துக் கொள்ளவும். இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, அதில் கருப்பட்டியை தட்டி போட்டு கொதிக்க விடவும். கருப்பட்டி நன்றாக கரைந்து கொதித்து வரும்போது, கருப்பட்டி கரைசலை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி, அடியில் தங்கியுள்ள கற்களை நீக்கிக் கொள்ளவும். இப்போது மீண்டும் கருப்பட்டி பாகை அடுப்பில் வைத்துக் கொதிக்க விட்டு, அதில் திரித்து வைத்துள்ள கலவையை சேர்த்து கிளறி வேக விடவும். பின்னர் அனைத்தும் ஒன்று சேர்ந்து நன்றாக வெந்து வரும் தருவாயில் ஏலக்காயை பொடித்து தூவி இறக்கி விடவும். இதில் தேவைப்பட்டால் கூடுதலாக பசும் பால், வறுத்த தேங்காய் பற்கள் அல்லது துருவிய தேங்காய் பூ சேர்த்துக் கொள்ளலாம். இப்போது சூடான கும்மியானம் தயார்.
குறிப்பு:
கும்மியானம் செய்யும் போது வறுத்து திரிக்கும் பொருட்களை ரவை பதத்தில் திரித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் ருசியாக இருக்கும். மையாக திரித்து விட்டால் அதன் சுவை கூழ் போல மாறிவிடும்.