கோதுமை தோசை என்பது தென்னிந்திய உணவு வகைகளுள் மிகவும் பிரபலமான உணவாகும். இந்த கோதுமை தோசைக்கு, நாம் கடையில் கிடைக்கும், பாக்கெட் கோதுமை மாவை வாங்கி தான் பொதுவாக பயன்படுத்துவோம். ஆனால் முழு கோதுமையை ஊற வைத்து, தோசை மாவாக அரைத்து எடுத்து கோதுமை தோசை தயார் செய்யும் முறை பற்றி இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முழு கோதுமை மற்றும் இட்லி அரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து சுத்தம் செய்து, அதில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து மூன்று மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். இது நன்றாக ஊறிய பின்னர் கிரைண்டரில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு மையாக அரைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும். இப்போது தோசை மாவு தயார். பின்னர் அடுப்பில் தோசை கல்லை போட்டு சூடானதும், அதில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசையாக சுட்டு எடுத்துக் கொள்ளலாம். சாதாரணமாக நாம் சப்பாத்திக்கு திரித்து வைத்துள்ள கோதுமை மாவை கரைத்து தோசையாக சுடுவோம், அதனை விட இப்படி ஊற வைத்து அரைத்து தோசை சுடுவது வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த மாவை அரைத்த உடனும் தோசையாக சுடலாம். ஆறு மணி நேரம் புளிக்க வைத்தும் தோசையாக சுடலாம். இந்த தோசைக்கு பச்சை மிளகாய் வத்தல் துவையல் தொட்டுக்கொள்ள ஏற்றதாக இருக்கும்.
குறிப்பு:
அரைத்த மாவை புளிக்க வைக்காமல் உடனே தோசை ஊற்றினால் கூடுதல் சுவையாக இருக்கும்.