Logo of Tirunelveli Today
English

இன்று வருத்தினி ஏகாதசி..!

வாசிப்பு நேரம்: 55 secs
No Comments
Tirupathi god adroned with jewels for varuthini eekadeshi.

சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு வருத்தினி ஏகாதசி என்று பெயர். இதன் பெருமைகள் பற்றிப் பவிஸ்யோத்திர புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஏகாதசி விரதத்தை கடை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அதில் விவரிக்கப்பட்டுள்ளது. வருத்தினி ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை கொடுக்கும் என்றும், அனைத்து பாவ வினைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த விரதத்தை கடைபிடிக்கும் அன்பர்கள் வெண்கல பாத்திரத்தில் உண்ணுதல், மாமிசம் உண்ணுதல், தேன் உண்ணுதல், கீரை உண்ணுதல் ஆகியவற்றை நீக்க வேண்டும். மேலும் விரதம் மேற்கொள்ளும் நாளில் சூதாட்டம், பகல் உறக்கம், கோபம் கொள்ளுதல், பொய் சொல்லுதல், முடி வெட்டுதல், நகம் வெட்டுதல் ஆகிய செயல்களையும் செய்யக்கூடாது. இந்த விரதத்தை யாரொருவர் முறைப்படிக் கடைப்பிடித்து பரந்தாமனை வணங்கினாலும், அவர்கள் ஆயிரம் பசுக்களை தானம் செய்தால் வரும் பலனை பெறுவார்கள் என்றும், எல்லா பாவ வினைகளில் இருந்து விடுபட்டு வைகுண்டம் சேர்வார்கள் என்று கூறப்படுகிறது. எனவே பல அற்புத பலன்களை தரும் இந்த வருத்தினி ஏகாதசி விரதத்தை இன்று நாம் கடைபிடித்து பரந்தாமனை வணங்குவோமாக....!

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2026 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram