தேவையானவை :
ராகி மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - அரை கப்
பேக்கிங் சோடா - ஒரு தேக்கரண்டி
அரிசி மாவு. - கால் கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து (பொடியாக நறுக்கியது)
காரட் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
- வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். காரட்டை துருவி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எல்லா வகையான மாவையும் ஒன்றாக போட்டு உப்பு சேர்த்து கலக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, துருவிய காரட், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
- பின்னர் வதக்கியவற்றை மாவில் போட்டு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் பணியார கல்லை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கரைத்து வைத்திருக்கும் மாவை குழியின் முக்கால் அளவிற்கு ஊற்றி இருபுறமும் நன்றாக திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.
- சுவையான ராகி பணியாரம் ரெடி.