Logo of Tirunelveli Today
English

நெல்லிக்காய் சாதம்

Tasty nellikaai sadham served in a bowl.

நெல்லிக்காய் சாதம் மதிய உணவுக்கு ஏற்ற சத்தான சாப்பாடு ஆகும். இது எலுமிச்சை சாதம் மற்றும் மாங்காய் சாதம் செய்முறையுடன் ஒத்து போகும் விதத்தில் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் அதிக அளவில் நம் உணவில் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எனவே நெல்லிக்காயை கொண்டு சாதம் சமைக்கும் முறை பற்றி இங்கு நாம் காணலாம்.

தேவையான பொருட்கள்:

  • சாப்பாடு அரிசி - இரண்டு கப்.
  • நெல்லிக்காய் - 10 எண்ணம்.
  • கடலை பருப்பு - 2 ஸ்பூன்.
  • வெந்தயம் - 2 ஸ்பூன்.
  • மிளகாய் வத்தல் - 4 எண்ணம்.
  • கடுகு / குத்துப் பருப்பு - 1 ஸ்பூன்.
  • பெருங்காயம் - சிறிதளவு.
  • நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்.
  • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
  • மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்.
  • உப்பு - தேவைக்கு.
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து.
  • இஞ்சி - இரண்டு துண்டு தோல் நீக்கி பொடியாக நறுக்கியது.

செய்முறை:

சாப்பாடு அரிசியை தண்ணீரில் களைந்து சுத்தம் செய்து, குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும். சாதம் உதிரி உதிரியாக இருந்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

நெல்லிக்காய்களை கழுவி புட்டு சலிப்பில் வைத்து துருவிக் கொள்ளவும். இப்போது அடுப்பில் இருப்புச்சட்டியை வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் கடுகு, குத்துப் பருப்பு போட்டு தாளித்து, அதனுடன் வெந்தயம், கடலை பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, கிள்ளிய மிளகாய் வத்தல், நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இந்த கலவை நன்றாக வதங்கிய உடன், அதில் துருவி வைத்துள்ள நெல்லிக்காயை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி மீண்டும் சிறிது நேரம் வேகவிடவும். பச்சை வாசனை நீங்கி அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வெந்து வந்தவுடன் அதை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, ஏற்கனவே உதிரி உதிரியாக தயார் செய்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி நன்றாக கிளறி மூடி வைக்கவும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து அதை திறந்து பார்த்தால் நல்ல ஒரு நறுமணத்துடன் கூடிய நெல்லிக்காய் சாதம் தயாராக இருக்கும்.

குறிப்பு:

நெல்லிக்காய் சாதம் ருசியாக இருக்க சாதத்தை அதிகம் குழைய விடாமல் உதிரி உதிரியாக வடித்துக் கொள்ள வேண்டும்.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2026 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram