இன்று மங்கையர்க்கரசி நாயனார் குருபூஜை.

Mangayarkarasi Naayanarஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை பாண்டிய நாட்டையே சைவமாக்கி நிரூபித்தவர் மங்கையர்க்கரசியார். இன்று பாண்டிய நாட்டில் சைவம் தழைத்து இருக்க முக்கிய காரணம் இவரே ஆகும். 63 நாயன்மார்களுள்  உள்ள 3 பெண் நாயன்மார்களில் ஒருவராக திகழும் இவர் சோழ நாட்டில் பிறந்து பாண்டிய நாட்டிற்கு மருமகளாக வந்தவர். இவர் பாண்டிய நாட்டை ஆண்ட கூன் பாண்டியன் என்னும் நின்றசீர் நெடுமாறனின் மனைவி ஆவார். பாண்டிய நாட்டில் இவர் திருமணம் ஆகி வந்த போது மதுரையில் சமண மதம் ஓங்கி இருந்தது. இதை கண்டு வருந்திய மங்கையர்க்கரசி நெற்றியில் திருநீறு கூட இட முடியாமல், திருநீற்றை சந்தனத்தோடு குழைத்து மார்பில் இடுவாராம்.

ஒரு பெண் அடியாராய் இருந்து குலச்சிறையார், நின்ற சீர் நெடுமாறன் என இரண்டு  நாயன்மார்களைச் சைவத்திற்கு தந்து, மதுரையை சைவ சமயத்திற்கு மீட்டெடுத்த பெருமை பெற்ற மங்கையர்க்கரசியார் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத ரோகிணி நட்சத்திரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் சித்திரை மாத ரோகிணியை முன்னிட்டு இன்று சிவன் கோவில்களில் மங்கையர்க்கரசியார் குருபூஜை சிறப்பாக நடைபெறும்.  சைவ சமயத்திற்கு அரும்பெரும் தொண்டாற்றி, நாயனார் பதவி பெற்ற மங்கையர்க்கரசியாரை நாமும் மனதில் நினைத்து வணங்குவோமாக.

About Lakshmi Priyanka

Check Also

வரலட்சுமி நோன்பு

ஆடி மாதம் பிறந்துவிட்டாலே பல்வேறு விசேஷங்கள் மற்றும் திருவிழாக்கள் களைகட்டத் துவங்கி விடும். ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு, ஆடி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!