திருநெல்வேலியில் புளி மிளகாய் கீரை குழம்பு மிகவும் பிரசித்தம். இது புளி, மிளகாய் வத்தல், அரைக்கீரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த குழம்பின் செய்முறையும் மிகவும் எளிது தான். இதற்காக ரொம்ப மெனக்கிட வேண்டியதில்லை. சுமார் இருபது நிமிடத்தில் இந்த குழம்பை தயார் செய்து விடலாம். இந்த குழம்பு தயார் செய்ய அரைக் கீரைகளை முன்பே சுத்தம் செய்து வைத்துக் கொண்டால், அதை தயாரிப்பது மிகவும் எளிதானது. இப்போது நாம் இந்த புளி மிளகாய் கீரை குழம்பு செய்முறை பற்றி இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அரைக்கீரையை குப்பை பார்த்து தடியான காம்புகளை நீக்கி தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் புளியை கரைத்து கொள்ளவும். இந்த கரைசலுடன் மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து அதில் அரைக்கீரையையும் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும். கீரை வெந்ததும் இந்த கலவையை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் இருப்புச் சட்டியை அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு குத்துப் பருப்பு போட்டு தாளித்து, அதனுடன் கிள்ளிய மிளகாய் வத்தல், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கி, அதில் அரைத்து வைத்துள்ள கீரை கரைசலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் திருநெல்வேலி புளி மிளகாய் கீரை குழம்பு தயார்.
குறிப்பு:
புளி மிளகாய் கீரை குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி, பொரிகடலை துவையல் மற்றும் சுட்ட அப்பளம் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.