English

திருநெல்வேலி

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணை நிலங்களையும், பொதிகை மலையில் உற்பத்தியாகி வற்றாது வளம் கொழிக்கும் தாமிரபரணி நதியையும் தன்னகத்தே கொண்ட மாநகரம் திருநெல்வேலி!
நெல்லைச்சீமை எனும் திருநெல்வேலி!

பசுமை பூமி!

திருநெல்வேலி தகவல் களஞ்சியம்

திருநெல்வேலி மாநகரின் நிலப்பரப்பு, மக்கள்தொகை, உள்ளாட்சி அமைப்பு, கிராம பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்கள்.
நெல்லை ஒரு பார்வை

பொது :
மாவட்டம் : திருநெல்வேலி
தலைநகரம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு

நிலப்பரப்பு :
மொத்தம் : 3876.06 சதுர.கி.மீ
கிராமப்புறம் : 2923.25 சதுர.கி.மீ
நகர்ப்புறம் : 115.23 சதுர.கி.மீ
வனம் : 837.58 சதுர.கி.மீ

மக்கள் தொகை :
2011 மக்கள் தொகை கணக்குப்படி (திருநெல்வேலி - தென்காசி மாவட்டம் சேர்த்து)
மொத்தம் : 33,22,644
ஆண்கள் : 16,42,403
பெண்கள் : 16,80,241

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

திரு. நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி,
பாரதிய ஜனதா கட்சி.

திரு. இசக்கி சுப்பையா
அம்பாசமுத்திரம்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

திரு. அப்துல் வஹாப்
பாளையங்கோட்டை,
திராவிட முன்னேற்றக் கழகம்.

திரு. ரூபி ஆர். மனோகரன்
நாங்குநேரி,
இந்திய தேசிய காங்கிரஸ்.

திரு. எம்.அப்பாவு
இராதாபுரம்,
திராவிட முன்னேற்ற கழகம்.

துறைகள்

வருவாய்
பிரிவுகள் : 2
தாலுகாக்கள் : 8
வருவாய் கிராமங்கள் : 370

வளர்ச்சி
தொகுதிகள் : 9
பஞ்சாயத்து
கிராமங்கள் : 204

உள்ளாட்சி அமைப்புகள்
முனிசிபல் கார்ப்பரேஷன்: 1
நகராட்சிகள்: 2

தொகுதிகள்
சட்டசபை: 5
பாராளுமன்றம்: 1

அண்மை பதிவுகள்

திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அன்றாட நிகழ்வுகள், முக்கியமான சம்பவங்கள், ஆன்மீக நிகழ்ச்சிகள், மாவட்டத்தில் உள்ள அணைகளின் தண்ணீர் இருப்பு விவரங்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்கள்.

நெல்லை செய்திகள்

மேலும் அறிய

திருநெல்வேலி கோவில்கள்

தாமிரபரணி பாயும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆற்றின்கரையில் எண்ணற்ற பல சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும் மற்ற கோவில்களும் அமையப்பெற்றுள்ளன. அவற்றுள் நவ கைலாய ஸ்தலங்கள், நவ திருப்பதிகள், தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள், தச வீரட்டான ஸ்தலங்கள், முப்பீட ஸ்தலங்கள், நவ சமுத்திர ஸ்தலங்கள், பஞ்ச ஆசன ஸ்தலங்கள், பஞ்ச விக்ரக ஸ்தலங்கள், பஞ்ச குரோச ஸ்தலங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கது. இந்த கோவில்களின் வரலாறு, அமைவிடம், சிறப்பம்சங்கள், முக்கிய திருவிழாக்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேலும் அறிய

நெல்லை கொவில்கள் பற்றிய பதிவுகள்

நான்கு உற்சவர்கள் கொண்ட திருச்செந்தூர் திருக்கோவில்
திருநெல்வேலி அருகில் உள்ளது திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.  பொதுவாக ஒரு கோவிலில் ஒரு உற்சவர் அல்லது சில இடங்களில் இரண்டு உற்சவர்கள் திருமேனி அமையப்பெற்றிருக்கும். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் இந்த திருக்கோவிலில் நான்கு உற்சவர்கள் காட்சி தருவது சிறப்பம்சம் ஆகும். திருச்செந்தூரில் காட்சிதரும் நான்கு உற்சவர்கள்: ஸ்ரீ ஆறுமுகநயினார் (சண்முகப்பெருமான்) ஸ்ரீ ஜெயந்திநாதர் ஸ்ரீ அலைவாயுகந்த பெருமான் ஸ்ரீ குமரவிடங்க பெருமான். இதில் ஆறுமுகநயினார் வருடத்திற்கு இரண்டு முறை ஆவணி […]
ஆழ்வார்திருநகரி கல் நாதஸ்வரத்தின் சிறப்பு.
கல்லிலே கலை வண்ணம் கண்ட நம் முன்னோர்கள், கல்லில் இசை வண்ணமும் கண்டுள்ளனர் என்பதற்கு சான்றாக விளங்குகிறது கல் நாதஸ்வரம். தமிழகத்தில் மிகவும் அரிதாக காணப்படும் இந்த கல் நாதஸ்வரத்தை திருநெல்வேலி அருகில் உள்ள, ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவிலில் இன்றும் நாம் காண முடிகிறது. இங்கு காணப்படும் கல் நாதஸ்வரம் சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். முன்னர் இந்த பகுதியை ஆட்சி செய்த கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் இந்த கல் நாதஸ்வரம் இந்த கோவிலுக்கு வழங்கப்பட்டதாக […]
1 2 3 39
மேலும் அறிய

திருநெல்வேலி உணவுகள்

மேலும் அறிய

திருநெல்வேலி உணவுகள்

சொதி குழம்பு , கூட்டாஞ்சோறு, நெல்லை அவியல், முழு உளுந்து தோசை, உளுந்தம்பருப்பு சோறு, திருநெல்வேலி அல்வா போன்ற பல சுவைமிக்க உணவு வகைகள் திருநெல்வேலியில் மிகவும் பிரபலம் ஆகும். திருநெல்வேலியின் சிறப்பு மிக்க உணவு வகைகள் மற்றும் அதன் செய்முறை பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

மேலும் அறிய

திருநெல்வேலி சுற்றுலா தலங்கள்

இயற்கை எழில் சூழ்ந்த பூமி என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை, மணிமுத்தாறு, பாபநாசம், காரையார், களக்காடு, முண்டந்துறை, கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், அரியகுளம் பறவைகள் சரணாலயம், மருதூர் அணைக்கட்டு, அகத்தியர் அருவி போன்ற சுற்றுலா தலங்களும், திருநெல்வேலிக்கு அருகே அமையப்பெற்றுள்ள குற்றாலம், தோரணமலை, அத்திரி மலை, கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், மணப்பாடு கடற்கரை, கழுகுமலை போன்ற சுற்றுலா தலங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இங்கு நாம் அந்த சுற்றுலா தலங்களின் சிறப்புக்கள் மற்றும் சென்றடையும் வழிமுறைகள் பற்றி காணலாம்.

மேலும் அறிய

திருநெல்வேலி சுற்றுலா தலங்கள்

சுத்தமல்லி அணைக்கட்டு
அடிக்கிற வெயிலுக்கு எங்கயாவது போய் தண்ணீரில் விழுந்து குளிச்சா சுகமா இருக்கும் என்று நம்ம எல்லோருக்குமே தோணும். அந்த அளவுக்கு வெயில் மண்டைய சுட்டெரிக்குது. என்னதான் நம்ம மாநகரத்துக்குள்ள தாமிரபரணி ஆறு ஓடினாலும், கொஞ்சம் அமைதியான பகுதிகளுக்கு போய் நாம குளிச்சுட்டு வர்றது தனி சுகம் தான் என்று நம்மில் பலருக்கும் தோன்றலாம். அந்த வகையில் திருநெல்வேலி மாநகரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுத்தமல்லி அணைக்கட்டு ஒரு சிறப்பான பகுதியாக விளங்குகிறது. தாமிரபரணி […]
மனதை மயக்கும் மாஞ்சோலை
மாஞ்சோலை என்னும் பகுதி திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ள ஒரு அழகான மலை வாசஸ்தலமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அற்புதமான களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைகள் கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கின்றன. தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும் இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிக்கிறது. திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீத்தூரத்தில் உள்ள இந்த மாஞ்சோலை மணிமுத்தாறு நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் […]
1 2 3
மேலும் அறிய

புகைப்படங்களின் தொகுப்பு

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

திருநெல்வேலி ஓர் சிறந்த சுற்றுலா தலம்

திருநெல்வேலிக்கு சுற்றுலா செல்வது நிச்சயம் உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை தரும். சாலை மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் முக்கிய நகரங்களில் இருந்து நன்கு இணைக்கப்பட்ட திருநெல்வேலியை சென்றடைவது மிகவும் எளிதானது. நீங்கள் இயற்கை அழகை ரசிக்க விரும்பினாலும் சரி, பழமையான திருக்கோயில்களை தரிசிக்க விரும்பினாலும் சரி, ஆர்ப்பரித்து விழும் அருவியில் குளிக்க விரும்பினாலும் சரி, பல்வேறு வெளிநாட்டு பறவைகளை கண்டு ரசிக்க விரும்பினாலும் சரி, மண் மணம் மாறாத உணவுகளை உண்டு ரசிக்க விரும்பினாலும் சரி அதற்கு திருநெல்வேலியை விட சிறந்த இடம் வேறில்லை!
நினைத்தாலே இனிக்கும் நிகரில்லா திருநெல்வேலி!
  • குடிப்பதற்கு - தாமிரபரணி
  • குளிப்பதற்கு - அகத்தியர் அருவி
  • கும்பிடுவதற்கு - நெல்லையப்பர் கோவில்
  • திருவிழாவுக்கு - ஆனித்தேரோட்டம்
  • உண்பதற்கு - இருட்டுக்கடை அல்வா
  • பசுமைக்கு - நெல் வயல்கள்
  • சுற்றுலாவுக்கு - மாஞ்சோலை
  • வியப்பதற்கு - பாபநாசம் அணைக்கட்டு
  • சரணாலயத்துக்கு - கூந்தன்குளம்
  • காது குளிர - திருநெல்வேலி தமிழ்
  • ரசிப்பதற்கு - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள்
  • குறிஞ்சி நிலத்துக்கு - பொதிகை மலை
  • முல்லை நிலத்துக்கு - களக்காடு
  • மருதம் நிலத்துக்கு - சேரன்மகாதேவி
  • பாலை நிலத்துக்கு - திசையன்விளை
  • நெய்தல் நிலத்துக்கு - உவரி
இப்படி எண்ணற்ற சிறப்புகளையும் ஒருங்கே பெற்று திக்கெல்லாம் புகழும்படியாக விளங்குகிறது திருநெல்வேலி!
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top homeuserusersstorechart-barsmagnifiercrosschevron-right-circletext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram