குற்றாலத்திலிருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் பாபநாசம் அணை அமைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாபநாசம் அணை விளங்குகின்றது. 143 அடி வரை தண்ணீர் இந்த அணைகளில் தேக்கி வைக்க முடியும். பாபநாசம் அணையின் கொள்ளளவு 5500 மில்லியன் கனஅடியை.கொண்டுள்ளது.
1942ஆம் ஆண்டு முதன்முதலில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மலையில் பாபநாசத்தில்
கட்டப்பட்ட ஒரு அழகிய அணையாகும். தாமிரபரணி ஆற்றங்கரைக்கு மிகவும் அருகாமையில் அமைந்துள்ள பாபநாச உலகாம்பிகை சமேத நாதர் திருக்கோவில் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. சிவபெருமானும் பார்வதிதேவியும் இந்த இடத்திற்கு வந்து தான் அகஸ்திய முனிவருக்கு காட்சி தந்து அருளிய இடம் என்பதால் சுற்றுலா பயணிகள் இதை ஒரு தெய்வீக ஸ்தலமாகவும் கருதி பார்ப்பதற்கு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் குற்றாலத்திலிருந்து இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் காரையாறு அணை அமைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகம் அருகாமை பகுதியில் காரையாறு அணை அமைந்துள்ளது. ஏராளமான பயணிகள் செல்ல படகு சவாரிகள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இங்கு வருகின்றனர்.
இந்த அருவியில் மூலிகை சத்துக்கள் கொண்ட மரங்களும் செடிகளும் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு நீராடும் போது உடல் ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய நீராகவும் இந்த காரையாறு அணை அமைந்துள்ளது. இந்த காரையாறு அணை பான தீர்த்தம் என்று சொல்லக்கூடிய பெயர்பெற்ற இடமாகவும் திகழ்கின்றது.
மிக பிரபலமான சுற்றுலாதலம் என அழைக்கப்படும் குற்றாலத்தில் அனைவரும் விளையாடி மகிழக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் பல இருந்தாலும் படகு குழாமுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் விரும்பி வருகின்றனர்.
குற்றாலத்தில் ஐந்தருவி அருகே மேலவெண்ணமாடைகுளம் செல்லும் வழியில் படகு குழாம் அமைந்து உள்ளது.
பிரதான அருவிக்கும் ஐந்தருவிக்கும் இடையேயான படகு சவாரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு தண்ணீரில் பயணம் செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாகவும் உல்லாசமாகவும் இருக்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சத்துக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது.
மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் நீர்வீழ்ச்சியை ஒட்டி சுற்றுலா பயணிகள் படகுகளை வாடகைக்கு எடுக்க படகு இல்லங்கள் உட்பட அனைத்து வசதிகளும் அமைந்துள்ள இடமாக படகுகுழாம் திகழ்கின்றது.
குற்றாலத்தில் பிரதான அருவி அல்லது ஐந்தருவி அருகில் அமைந்துள்ளது பாம்பு பூங்கா. புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் இப்பூங்காவும் ஒன்று. . பாம்பு பண்ணையில் பல்வேறு வகையான பாம்புகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பாம்பு பூங்காவிற்கு வருவதோடு அருகிலுள்ள கண்கவர் இடங்களான சிறுவர் பூங்கா மற்றும் மீன் பண்ணைகளையும் பார்த்து ரசித்து விளையாடி மகிழ்கின்றனர்.
சுற்றுச்சூழல் பூங்கா என அழைக்கப்படும் குழந்தைகள் பூங்கா குற்றாலத்தில் அழகிய ஐந்து அருவிகளுக்கும் மேலே இரண்டு மலைகளுக்கு நடுவே 37 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பசுமையோடு மிகப் பொலிவாக காட்சி அளிக்கின்றது சுற்றுச்சூழல் பூங்கா என அழைக்கப்படும் குழந்தைகள் பூங்கா.
மிக அழகான ரம்மியமான ஒரு சூழ்நிலை குற்றால அருவியின் காற்றோட்டம் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியோடு பொழுதுபோக்காக தேடி வரும் ஒரு அழகிய இடமாக காட்சியளிக்கிறது சுற்றுச்சூழல் பூங்கா.
குற்றாலத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா என அழைக்கப்படும் குழந்தைகள் பூங்கா தமிழகத்தில் உள்ள பூங்காக்களில் மிகப் பெரியது.
ஒவ்வொரு இடங்களையும் பார்த்து ரசிக்கக் கூடிய இடங்கள் ஏராளமாக குற்றாலத்தில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த குழந்தைகள் பூங்கா.
நல்ல காற்றோட்டம், இயற்கை ததும்பிய அழகு , சுற்றிலும் மலைகள் என இந்த இடத்தை கண்டு களிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
சலசலக்கும் காற்று, காற்றின் ஓசையை ரசித்த வண்ணம் காலார நடந்து செல்ல உயிரோட்டமான நடைபாதை என மனதை மகிழ்விக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது குழந்தைகள் பூங்கா. அவ்வாறு நடக்கும் பொழுது மனம் மட்டுமல்லாமல் நம்முடைய உடலுக்கும் ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சிக்கு ஏற்ற வகையிலும் அமைந்து இருப்பதால் ஏராளமானோர் இந்த பூங்காவில் வந்து செல்கின்றனர்.
அந்தப் பூங்காவில் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் சிறகை விரித்து கொண்டு பறந்து ஓடுவது அழகு என்றால் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பல வண்ண மலர்களும் மேலும் அழகைத் தர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
மேற்கு நோக்கி பார்த்தால் மேற்கு தொடர்ச்சி மலை , கிழக்கே பார்த்தால் குற்றாலம் மற்றும் சுற்றியுள்ள பசுமையான கிராமங்கள் என மிகவும் அழகிய பூம்பாவாய் காட்சி தருகிறது.
விளையாட்டுத் திடல் மற்றும் ஆங்காங்கே தமிழ் பண்பாட்டு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிற்பங்கள் பூங்காவிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. கிராம்பு, மிளகு, ஜாதிக்காய் நறுமணம் எங்கிருந்து வருகின்றது என்று பார்த்தால் குழந்தைகள் பூங்காவில் விளைந்து கிடக்கும் தோட்டத்தில் இருந்து வருகின்றன என்பதையும் அறியமுடிகிறது.
மூங்கில் தோட்டம், இயற்கை ஓவியம் கூடங்கள் , குழந்தைகள் விளையாட்டு பூங்கா, நீர் விளையாட்டு திடல், பசுமை குடில் தோட்டங்கள் என பல அம்சங்கள் நிறைந்து பொழுதுபோக்கான இடமாக காட்சி தருகிறது.
சீசன் காலங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் குற்றாலத்தை ரசிப்பதற்கும் வருகை புரிகின்றனர். குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் அலைமோதும் சுற்றுலா பயணிகள் இந்த சுற்றுச்சூழல் பூங்கா என அழைக்கப்படும் குழந்தைகள் பூங்காவை பார்த்துவிட்டு செல்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் குண்டாறு அணை அமைந்துள்ளது. 1983 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் பாசன தேவைகளை நிறைவு செய்வதற்காக குண்டாறு அணை கட்டப்பட்டது. அன்று முதல் சுற்றுலாப் பயணிகள் வரும் சுற்றுலா தலமாக இன்றும் சிறப்பு பெற்று விளங்குகின்றது.
இந்த நீர்த்தேக்கத்தின் நீளம் 389 மீட்டர்,உயரம் 15 மீட்டர் என அமைந்துள்ள இயற்கை வளம் நிறைந்த நடுத்தர பாசன திட்டமாகும்.
குற்றாலத்திலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது.
அழகிய அருவியாக கொட்டி ஆர்ப்பரிக்கும் ஆறு என்று பார்த்தால் மணிமுத்தாறு அருவி என்பது மட்டுமல்லாது விவசாயிகளுக்கு விளை ஊற்றாய் விளங்கும் மணிமுத்தாறு அணை இரண்டுமே திருநெல்வேலி மாவட்டத்தின் மிக முக்கியமான அம்சம் கொண்டதாய் புகழ் பெற்று விளங்குகிறது.
இயற்கையாகவே மழை நீர் சேகரித்து வைப்பதற்காக கட்டப்பட்டது . இங்கு சுற்றியுள்ள பகுதி விவசாயிகளுக்கு இந்த அணையின் மூலமாகத்தான் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
ஏராளமான வனவிலங்குகளை காண்பதற்கும் ஏற்ற சிறந்த சுற்றுலா தலமாக இந்த இடம் விளங்குகிறது.
குற்றாலத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவி சுமார் 25 அடி உயரத்தில் இருந்து கொட்டுகின்ற அழகை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ரசிக்கின்றனர்.
அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள இந்த அகஸ்தியர் அருவியானது காரையார் மற்றும் சேர்வலாறு நீர்த்தேக்கங்களில் தொடர்பு உடையதாக அமைந்திருக்கிறது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அருகில் அமைந்துள்ள இந்த அகஸ்தியர் அருவிக்கு போகும் பாதையில் நிறைய புலிகள் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினரால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏராளமான விலங்குகளை இந்த இடங்களில் பார்த்து ரசிக்கலாம். இந்த அருவிக்கு அருகில் சிறு அகத்தியர் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
அருவியின் மேற்பகுதியில் கல்யாண தீர்த்தம் வற்றாத நதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. வருடந்தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி கொடுத்த இடம் என்பதால் தெய்வீக ஸ்தலமாகவும் அகஸ்தியர் அருவி விளங்குகின்றது.
வடகிழக்கு பருவ மழையின் போது நீர்வீழ்ச்சியின் அளவு மிகவும் அதிகமாக தண்ணீர் போக்குவரத்து காணப்படுவதால் இருப்பதால் மக்கள் அந்த சமயங்களில் குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.