தமிழ்நாட்டின் திருநெவேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் என்ற அழகிய கிராமத்தில், பழமையான வைணவ யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவில். அமைந்துள்ளது, ஒருபுறம் பார்ப்பதற்கு அற்புதமான பொதிகை மலைத்தொடரும், மறுபுறம் பொருநை நதியும் ஓடி வருகின்ற அழகான இயற்கை காட்சிகளோடு , பசுமையான வயல்களால் சூழப்பட்டுள்ளது . சுந்தரராஜப் பெருமாள் கோயில் இந்துக் கடவுளான விஷ்ணுவுக்காக கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற திருத்தலம் ஆகும். வீரவநல்லூரில் சேரன்மகாதேவிக்கு மேற்கே 6 கிமீ தொலைவில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது
வீரவநல்லூர் சுந்தரராஜப் பெருமாள் கோவில் திருத்தல வரலாறு (History of Veeravanallur Perumal temple)
திருமாலிருஞ்சோலை சோலையில் கள்ளழகரின் அருளை பெறுவதற்கு பல ஆண்டுகள் காசியப முனிவர் கடுமையான தவம் மேற்கொள்கின்றார். அவருடைய பக்தியை கண்டு மகிழ்ந்த விஷ்ணு பகவான் அவருக்கு தரிசனம் தருகிறார். வைரம் மற்றும் பல்வேறு விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பகவானின் அற்புத அழகைக்கண்டு பக்திப் பரவசம் அடைகின்றார். இறைவன் வெரவநல்லூரில் எப்போதும் தன் துணைவிகளுடன் தங்கி மக்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று விஷ்ணுவிடம் காஷ்யப முனிவர், வரம் கேட்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று, பகவானும் அவரது துணைவியார்களான சுந்தரவல்லி மற்றும் சுந்தரநாயகியுடன் சுந்தரர்ஜனாக தனது பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பாண்டிய மன்னர்கள் பலரால் மேலும் மேலும் மெருகேற்ற பட்டு உருவாக்கப்பட்ட இந்த திருத்தலத்தில் வேங்கடவன் மிக அழகாக எழுந்தருளி காட்சி அளிக்கிறார். காசியப முனிவர் செய்த தவத்தின் பலனாக இறைவன் அங்கு குடி கொண்டமையால் இந்த தலமானது காஷ்யப ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Ariyanayagipuram check dam - 17min(8.3km)
- Ayyankulam Sri Mahaganapathy Temple - 19min(9.2km)
- Falls of naathi anai - 37min(17.9km)
- Suthamalli reservoir dam - 40min(21.7km)
வேட்டை நாயை வீரம் கொண்ட முயல் துரத்திய அதிசயம்
சுந்தர்ராஜப்பெருமாளின் பக்தனாகிய மன்னன் வீரமாறப் பாண்டியன் ஒருமுறை வேட்டையாட காட்டிற்கு செல்கிறார். அங்கு ஒரு அதிசய காட்சியை காண்கின்றார். ஒரு சிறிய முயல் ஒன்று வேட்டை நாயை துரத்தி செல்கின்றது. அந்த காட்சியை கண்ட மன்னன் ஆச்சரியம் கொள்கின்றார். அந்த வீர மண்ணுக்கு தொடர்புடைய ஆற்றலை புரிந்து கொண்டு இந்த இடத்திற்கு மாறவீரபாண்டியன் வீரவநல்லூர் என்று பெயரிட்டார் என்கிறது வரலாறு. இந்த வரலாற்றை சொல்லக்கூடிய தமிழின் பழைய படைப்புகளில், இந்த கிராமமானது வீரயும்பதி, வீர கல நல்லூர் மற்றும் தவ வனம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மண்ணுக்கே உரிய வீரத்துடன் தோன்றிய வீரபாண்டியகட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிச்சலுடன் போரிட்ட போது, ஒவ்வொரு போருக்கு முன்பாகவும் தனது படை வீரர்களுடன் இந்த திருத்தலத்தில் சென்று சுந்தரராஜனிடம் ஆசி பெற்று வீரப் பிரமாணம் செய்து கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன் காரணமாக வீரவநல்லூர் கிராமம் வீரமகன் நல்லூர் என்றும், வெற்றி நிறைந்த நல்லூர் என்றும் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் வீரவநல்லூர் என்று அழைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
சுந்தர்ராஜ பெருமாள் வீரவநல்லூர் திருக்கோவிலின் அமைப்பு (Structure of Sundarraja Perumal Veeravanallur temple)
சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் மகா மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குப் பின்புறம் மண்டபத்துடன் கூடிய பெரிய குளம் ஒன்று தீர்த்தக்குளம் ஆக காட்சி தருகிறது. தற்போது பெய்த மழைக்கு பின்னர் பெரியகுளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
- The KG Meridian (The lap of luxury)
- KA Hotel - 2-star
- Saaral Resort - 3-star
- The Agrahara - Concept Stay
இந்த கோவிலின் மூலவராக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் மற்றும் அவரது துணைவியார் சுந்தரவல்லி தாயார், சுந்தரநாயகி தாயார் முக்கிய சன்னதியும் அமைந்துள்ளது . நவநீத கிருஷ்ணன், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ வேதாந்த தேசிகர் மற்றும் ஸ்ரீ சேனை முதலி என அனைத்து ஆழ்வார்களின் சன்னதிகளும் இந்த திருத்தலத்தில் உள்ளது.
Image Credit : blogspot.com
புகழ்பெற்ற வீரவநல்லூர் பெருமாள் கோவிலின் சிறப்பு அம்சங்கள் (Special features of the famous Veeravanallur Perumal Temple)
வீரவநல்லூர் பெருமாள் கோவிலில் அமைந்திருக்கும் பெரிய குளத்திற்கு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணையில் இருந்து கால்வாய் மூலம் ஏராளமான தண்ணீர்கிடைக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மகா மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் மணி மண்டபம் அமைந்துள்ளது. வேதாந்த தேசிகருக்கு அவதார உற்சவம் 10 நாட்களுக்கு மேல் சிறப்பாக வருடம் தோறும் கொண்டாடப்படுகிறது.
கடந்த சில தசாப்தங்களாக, தினசரி பூஜையை கவனிக்க அர்ச்சகர் இல்லாத நிலை இருந்து வந்தது. சமீபகாலமாக கோவிலில் அர்ச்சனை செய்ய பரிஜாரகருடன் மத்திய இந்தியாவிலிருந்து ஒரு பாதிரியார் வரவழைக்கப்பட்டு பிறகுதற்போது புதிய தோற்றத்தில் காட்சி தருகிறது.
வீரவநல்லூர் பெருமாள் கோவிலின் முக்கிய திருவிழாக்கள் (Major Festivals of Veeravanallur Perumal Temple)
வீரவநல்லூர் பெருமாள் கோவிலில் விசேஷ தினங்கள் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. தை மாதம் 10 நாள் பூசம் திருவிழா, 9வது நாள் தேர் திருவிழா , ஐப்பசியில் 10 நாள் ஸ்ரீ ஜெயந்தி விழா, 7நாட்கள் பவித்ரோத்ஸவம், ஊஞ்சல் உற்சவம், மார்கழியில் 21 நாள் திருவிழா, திவ்ய பிரபந்தம் ஓதுதல் என அனைத்து விசேஷமான தினங்களும் சிறப்பு வாய்ந்த விழாக்களாக கொண்டாடப்படுகிறது.புரட்டாசி மாதத்தில் கருட வாகனம் மற்றும் ஹனுமந்த வாகனம் உட்பட அனைத்து வாகனங்களும்கொண்டு பிரம்மோற்சவ விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது
வீரவநல்லூர் அமைவிடம் (Location Veeravanallur) :
வீரவநல்லூர் திருநெல்வேலி சீமையிலிருந்து 37கிமீ தொலைவிலும், பாபநாசத்திலிருந்து 21 கிமீ தொலைவிலும், சேரன்மகாதேவிக்கு மேற்கே 6 கிமீ தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 150 கிமீ தொலைவிலும் , மதுரையிலிருந்து 195 கிமீ தொலைவிலும், அமைந்துள்ளது. வீரவநல்லூர் கிராமத்தில் மிகவும் புகழ்பெற்ற வீரவநல்லூர் பெருமாள் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பெருமானை தரிசித்து மகிழ்கின்றனர்.மிகப்பெரிய சுற்றுலா தலமாகவும் வீரவநல்லூர் கிராமம் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற ஒரு இடமாக வீரவநல்லூர் திகழ்கின்றது..