பொது :
மாவட்டம் : திருநெல்வேலி
தலைநகரம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
நிலப்பரப்பு :
மொத்தம் : 3876.06 சதுர.கி.மீ
கிராமப்புறம் : 2923.25 சதுர.கி.மீ
நகர்ப்புறம் : 115.23 சதுர.கி.மீ
வனம் : 837.58 சதுர.கி.மீ
மக்கள் தொகை :
2011 மக்கள் தொகை கணக்குப்படி (திருநெல்வேலி - தென்காசி மாவட்டம் சேர்த்து)
மொத்தம் : 33,22,644
ஆண்கள் : 16,42,403
பெண்கள் : 16,80,241
திரு. நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி,
பாரதிய ஜனதா கட்சி.
திரு. இசக்கி சுப்பையா
அம்பாசமுத்திரம்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
திரு. அப்துல் வஹாப்
பாளையங்கோட்டை,
திராவிட முன்னேற்றக் கழகம்.
திரு. ரூபி ஆர். மனோகரன்
நாங்குநேரி,
இந்திய தேசிய காங்கிரஸ்.
திரு. எம்.அப்பாவு
இராதாபுரம்,
திராவிட முன்னேற்ற கழகம்.
வருவாய்
பிரிவுகள் : 2
தாலுகாக்கள் : 8
வருவாய் கிராமங்கள் : 370
வளர்ச்சி
தொகுதிகள் : 9
பஞ்சாயத்து
கிராமங்கள் : 204
உள்ளாட்சி அமைப்புகள்
முனிசிபல் கார்ப்பரேஷன்: 1
நகராட்சிகள்: 2
தொகுதிகள்
சட்டசபை: 5
பாராளுமன்றம்: 1
தாமிரபரணி பாயும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆற்றின்கரையில் எண்ணற்ற பல சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும் மற்ற கோவில்களும் அமையப்பெற்றுள்ளன. அவற்றுள் நவ கைலாய ஸ்தலங்கள், நவ திருப்பதிகள், தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள், தச வீரட்டான ஸ்தலங்கள், முப்பீட ஸ்தலங்கள், நவ சமுத்திர ஸ்தலங்கள், பஞ்ச ஆசன ஸ்தலங்கள், பஞ்ச விக்ரக ஸ்தலங்கள், பஞ்ச குரோச ஸ்தலங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கது. இந்த கோவில்களின் வரலாறு, அமைவிடம், சிறப்பம்சங்கள், முக்கிய திருவிழாக்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சொதி குழம்பு , கூட்டாஞ்சோறு, நெல்லை அவியல், முழு உளுந்து தோசை, உளுந்தம்பருப்பு சோறு, திருநெல்வேலி அல்வா போன்ற பல சுவைமிக்க உணவு வகைகள் திருநெல்வேலியில் மிகவும் பிரபலம் ஆகும். திருநெல்வேலியின் சிறப்பு மிக்க உணவு வகைகள் மற்றும் அதன் செய்முறை பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.
இயற்கை எழில் சூழ்ந்த பூமி என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை, மணிமுத்தாறு, பாபநாசம், காரையார், களக்காடு, முண்டந்துறை, கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், அரியகுளம் பறவைகள் சரணாலயம், மருதூர் அணைக்கட்டு, அகத்தியர் அருவி போன்ற சுற்றுலா தலங்களும், திருநெல்வேலிக்கு அருகே அமையப்பெற்றுள்ள குற்றாலம், தோரணமலை, அத்திரி மலை, கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், மணப்பாடு கடற்கரை, கழுகுமலை போன்ற சுற்றுலா தலங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இங்கு நாம் அந்த சுற்றுலா தலங்களின் சிறப்புக்கள் மற்றும் சென்றடையும் வழிமுறைகள் பற்றி காணலாம்.