திருநெல்வேலியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது!

Author
June 29, 2021
Est. Reading: 0 minutes
No Comments

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உட்பட 23 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரில் உள்ள நகைக்கடை, ஜவுளிக்கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

 நேற்று முதல் இந்த புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை முதல் பேருந்துகள் இயங்க தொடங்கின. இதன் காரணமாக நேற்று நேற்று   மாநகர சாலைகளில் முழு அளவில் போக்குவரத்து நடைபெற துவங்கி உள்ளதால்  திருநெல்வேலி மாநகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, முருகன்குறிச்சி சிக்னல் பகுதி, கதீட்ரல் சர்ச் பகுதி, கொக்கிரகுளம் பகுதி, ஸ்ரீபுரம், திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருநெல்வேலி டவுன் ரத வீதிகள், குற்றாலம் சாலை, பேட்டை சாலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வாகனங்கள் நெருக்கடியாக ஊர்ந்து சென்ற வண்ணம் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
தற்போதைய பதிவுகள்
1 2 3 21

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2021 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram