எழுத்தாளர் பற்றி

எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். சிறுவயதிலிருந்தே ஊரின் மீது அதிகபற்று உண்டு. ஏலேய் நான் திருநெவேலிக்காரம்லேனு பெருமையா சொல்லிக்கிட்டு இருப்பேன். பாளையங்கோட்டையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் திருநெல்வேலிக்காரனு சொல்லும் போது அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும். வாரம் இருமுறை தாமிரபரணி ஆத்துல போய் குளிச்சு, வருஷத்துக்கு ஐந்து தடவை குற்றாலம் போய் குளிச்சு, தாமிரபரணி தண்ணீய குடிச்சி வளர்ந்தாதாலயோ என்னவோ மின்னியலில் பொறியியல் பட்டம் பெற்று சென்னையில் நல்ல வேலை கிடைத்தும், அதில் நாட்டமில்லாமல் திருநெல்வேலிக்கே திரும்ப வந்து சொந்தமாக தொழில் செய்து வருகிறேன்.

என் ஆச்சியின் சமையலுக்கு நான் அடிமை. ஆச்சியிடம் கற்றுக்கொண்டு சமைக்கப்பழகி ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. இன்றும் என் சமையலுக்கென்று நிறைய விசிறிகள் உண்டு. தற்போது திருநெல்வேலியின் சிறப்பு உணவு வகைகள் என்ற தலைப்பில் நான் சமைத்த உணவு வகைகளை பற்றி எழுதிவருகிறேன். அதுபோல திருநெல்வேலிக்கு என்று சிறப்பு சேர்க்கும் கோவில்கள், கலைகள், விழாக்கள் மற்றும் விஷயங்களை தேடியும், படித்தும் எழுதிவருகிறேன்.

-திருநெல்வேலிக்காரன்.

error: Content is protected !!