சித்திரை மாதத்தின் துவக்கத்தில் வேப்ப மரத்தில் பூக்கள் பூக்க துவங்கும். கோடை காலமான இந்த பருவத்தில் பூக்கும் வேப்பம் பூக்களில் நம் உடம்புக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. வேப்பம் பூக்களை உணவில் சேர்த்துக்கொள்வது சர்க்கரை வியாதி, சரும வியாதி ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. சித்திரை மாதம் வரும் நயினார் நோன்பு அன்று வேப்பம்பூ பச்சடி சமைக்கும் வழக்கம் திருநெல்வேலி பகுதியில் உண்டு. இப்போது நாம் இங்கு வேப்பம் பூ பச்சடி எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி காணலாம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் புளியை தண்ணீரில் பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்து அதனை கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். வேப்பம்பூவை கழுவி காயவைத்து எடுத்து, லேசாக நல்லெண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதன் சூடு ஆறியதும், கையால் நன்றாக அழுத்தி நொறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் இருப்புச்சட்டியை வைத்து அது சூடானதும், அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, குத்து பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் ஆய்ந்து வைத்துள்ள கருவேப்பிலை, கிள்ளி வைத்துள்ள மிளகாய் வத்தல், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இப்போது கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை இதில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இந்த கரைசல் நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன், இதில் நொறுக்கி வைத்துள்ள வேப்பம் பூக்களையும், ஒரு துண்டு வெல்லத்தையும் சேர்த்து கிளறி கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான வேப்பம்பூ பச்சடி தயார்.
குறிப்பு:
வேப்பம் பூக்கள் சித்திரை மாதத்தை ஒட்டியே அதிக அளவில் பூக்கும். எனவே கிடைக்கும் போதே அதை சேகரித்து வெயிலில் உலர்த்தி பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்.