வசந்த உற்சவம் காண தனது பிறந்த ஊருக்கு எழுந்தருளும் பரமகல்யாணி அம்மை!

Sivasailam Sri Paramakalyani Ambal Temple திருநெல்வேலி அருகே அமையப்பெற்றுள்ளது சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ சிவசைலநாதர் திருக்கோவில். கடனா நதிக்கரையில் மேற்குநோக்கி அமையப்பெற்றுள்ள இந்த சிவாலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் கருவறையில் காட்சிதரும் பரமகல்யாணி அம்மை திருமேனி, இந்த கோவில் அமையப்பெற்றுள்ள பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆம்பூர் என்னும் ஊரின் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது. எனவே ஆம்பூர் பரமகல்யாணி அம்மையின் பிறந்த ஊராக கருதப்படுகிறது.

இதனால் வருடத்திற்கு ஒரு முறை சித்திரை மாதம் ஆம்பூர் வாழ் மக்கள் சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மை உடனுறை ஸ்ரீ சிவசைலநாதர் சுவாமிகளை தங்கள் ஊருக்கு அழைப்பு செய்து வசந்த உற்சவம் நடத்துகின்றனர். இந்த உற்சவத்திற்காக மூன்று நாட்கள் ஆம்பூருக்கு எழுந்தருளும் ஸ்ரீ சிவசைலநாதர் மற்றும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார மண்டகப்படிகள் ஆம்பூர் மக்கள் சார்பாக நடத்தப்படும். பின்னர் ஸ்ரீ சிவசைலநாதர் – ஸ்ரீ பரமகல்யாணி அம்மை இடப வாகனங்களில் எழுந்தருளி ஆம்பூர் வீதிகளில் உலா வந்து, சிறப்பு பூஜைகளை ஏற்று சிவசைலம் திரும்பி செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.