வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க சிறப்பு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நெல்லை ஆட்சியர் தகவல்!

Nellai Collectorமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில், மீண்டும் ஒரு முறை தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் சிறப்பு கால அவகாசம் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ள விரும்பும் பதிவுதாரர்கள் வரும் 27.08.2021 தேதிக்குள் தங்கள் பதிவினை இணையதளம் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு இணையதளம் மூலம் புதுப்பிக்க முடியாதவர்கள் மேலே குறிப்பிட்ட தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையதளம் மூலமாக தங்கள் பதிவை புதுப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வரும் 27.08.2021 தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!