நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் உளுந்தம் பருப்பில் நிறைந்து காணப்படுகின்றன. இது நம் உடலில் உள்ள உஷ்ணத்தை போக்கி குளிர்ச்சி தரக்கூடியது ஆகும். மேலும் இதில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு தேவையான வலிமையை அளித்து ஆரோக்கியமாக வாழ உதவுகிறது. இந்த உளுந்தை நாம் தோல் நீக்கியும், தோல் நீக்காமலும் உணவில் பயன்படுத்தலாம். இப்போது இந்த உளுந்தை கொண்டு கஞ்சி எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கூடுதல் சுவைக்கு தேவைப்பட்டால்:
செய்முறை:
முதலில் தேவையான அளவு குத்து பருப்பு அல்லது தொலி பருப்பு இரண்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். பருப்பில் தேவையான தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும். குக்கரில் சுத்தம் செய்த பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அதில் கருப்பட்டி அல்லது மண்டை வெல்லத்தை தட்டி போட்டு கொதிக்க விடவும். அது நன்றாக கரைந்தவுடன், அந்த கரைசலை வடிகட்டி எடுத்து வேக வைத்துள்ள பருப்பில் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். பருப்பு நன்றாக வெல்ல கரைசலுடன் சேர்ந்து கொதித்து வரும் போது அதில் நுணுக்கிய ஏலக்காயை தூவி இறக்கவும். தேவைப்பட்டால் கூடுதலாக பசும் பால் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு:
குத்து பருப்பு என்றால் தோல் நீக்கப்பட்ட உடைத்த உளு வசத்தம்பருப்பு. தோலுடன் கூடிய தொலி பருப்பில் தான் கூடுதல் சத்துக்கள் உள்ளது என்பதால் அதனை பயன்படுத்திக் கொள்வது நல்லது.