திருநெல்வேலியில் புதிய காவல்துறை துணை ஆணையாளராக திரு.சுரேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார்!

New Commissioner Mr Sureshkumar திருநெல்வேலியில் புதிய காவல்துறை துணை ஆணையாளராக திரு.சுரேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார்!

திருநெல்வேலி மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளராக இருந்த திரு.ராஜராஜன் அவர்கள், தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் திருநெல்வேலி மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு புதிய துணை ஆணையாளராக சென்னை தமிழக சிறப்பு காவலர் பயிற்சி பள்ளியின் படைத்தலைவராக பணியாற்றி வந்த திரு.சுரேஷ்குமார் அவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து திரு.சுரேஷ்குமார் அவர்கள் நேற்று திருநெல்வேலியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திரு.சுரேஷ்குமார் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திருநெல்வேலி மாநகரத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும், ரவுடியிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும், ஜாமீனில் வெளியே வந்துள்ள பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைெவளியை கடைபிடிப்பதுடன் தங்களது கைகளை அடிக்கடி சுத்தம் செய்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.