திருநெல்வேலியில் டிரோன்களை பறக்க விட தடைவிதிக்கப்பட்டுள்ளது!

Droneஇந்திய எல்லைப்பகுதியான காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிரோன்கள் மூலமாக இந்திய விமானப்படை தளம் மற்றும் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனையடுத்து மத்திய அரசு, பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டில் உள்ள  ராணுவ முகாம்கள், அணு உலைகள், ஆராய்ச்சி மையங்கள், ஆயுத தொழிற்ச்சாலைகள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலியிலும் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் கடற்படை தளம் மற்றும் திருநெல்வேலியில் உள்ள கடற்படைக்கு சொந்தமான இடம் ஆகிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இடங்களில் குறிப்பாக திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் படம் பிடிக்க பயன்படுத்தப்படும் டிரோன்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் அனுமதி பெற்ற பின்னர் தான் பறக்க விட வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.