திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழா பத்தாம் நாள் நினைவலைகள்!

Aani Paerunthiruvizhaதிருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் – ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோவிலின் ஆனிப்பெருந்திருவிழா இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக நடைபெறாத நிலையில், இந்த வருட திருவிழா நிகழ்வுகளை நாம் தினமும் நினைவலைகளாக காணலாம்.

இவ்வருட ஆனிப்பெருந்திருவிழா துவங்கி இருந்தால், பத்தாம் திருநாளான இன்று காலை சுவாமி நெல்லையப்பர் – பல்லக்கிலும், காந்திமதி அம்மை – பல்லக்கிலும் புறப்பட்டு ரத வீதிகளில் தேர்த்தடம் பார்த்து உலா வருவார்கள். பின்னர் பகலில் திருக்கோவிலுக்குள் உள்ள பொற்றாமரை திருக்குளத்தில் வைத்து தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் மாலையில் திருக்கோவிலுக்குள் உள்ள தனி சோமாஸ்கந்த மூர்த்திக்கு சிறப்பு அபிஷேங்கள் நடைபெற்று பூஜைகள் நடைபெறும். பின்னர் ஆனித்திருவிழாக்கு ஏற்றப்பட்ட கொடியிறக்கப்பட ஆனித்திருவிழா இனிதே நிறைவு பெற்றிருக்கும்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவிழா நடைபெறாத நிலையில், அடுத்த வருட ஆனித்திருவிழா தடையின்றி சிறப்பாக நடைபெற சுவாமி – அம்பாளை பிரார்த்திப்போம்!

About Lakshmi Priyanka

Check Also

ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாதம் முளைப்பாரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!