திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழா எட்டாம் நாள் நினைவலைகள்!

Author
June 22, 2021
Est. Reading: 1 minute
No Comments

திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் - ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோவிலின் பிரசித்தி பெற்ற ஆனிப்பெருந்திருவிழா இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக நடைபெறாத நிலையில், இந்த வருட திருவிழா நிகழ்வுகளை நாம் தினமும் நினைவலைகளாக காணலாம்.

இவ்வருட ஆனிப்பெருந்திருவிழா துவங்கி இருந்தால், எட்டாம் திருநாளான இன்று காலை தாமிரசபை ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி அம்மை - வெள்ளை சாத்தி திருக்கோலத்தில் பெரிய பிரகாரத்தில் உலா வந்திருப்பார். இன்று பகலில் தாமிரசபை ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி அம்மை - பச்சை சாத்தி திருக்கோலத்தில் தட்டி அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்திருப்பார்கள்.

இன்று மாலை இந்த ஸ்தலத்தின் சிறப்பு மூர்த்தியான ஸ்ரீ கங்காளநாதர் - தங்கச் சப்பரத்திலும், ஸ்ரீ மோகினி (விஷ்ணு) - சப்பரத்திலும் எழுந்தருளி
திருக்கோவில் யானை காந்திமதி முன்செல்ல, பஞ்சவாத்தியங்கள், நாதஸ்வரம் - மேளம் முழங்க, தேவார - திருமுறை பண்ணிசை முழங்க ரத வீதிகளில் உலா வந்திருப்பார்கள்.

இரவில்  சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் - தங்க கைலாச பர்வத வாகனத்திலும், ஸ்ரீ காந்திமதி அம்மை - தங்கக்கிளி வாகனத்திலும்  எழுந்தருளி தேர்க்கடாட்சம் கண்டருள, ஸ்ரீ விநாயகர் - தேரிலும், ஸ்ரீ சுப்பிரமணியர் - தேரிலும் எழுந்தருள இரண்டு தேர்களும் பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு ரத வீதிகளில் உலா வந்திருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2021 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram