திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழா ஐந்தாம் நாள் நினைவலைகள்!

Aani Thiruvizha - Sri Nellaiappartempleதிருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் – ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோவிலின் பிரசித்தி பெற்ற ஆனிப்பெருந்திருவிழா இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக நடைபெறாத நிலையில், இந்த வருட திருவிழா நிகழ்வுகளை நாம் தினமும் நினைவலைகளாக காணலாம்.

இவ்வருட ஆனிப்பெருந்திருவிழா துவங்கி இருந்தால், ஐந்தாம் திருநாளான இன்று காலை சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் – வெள்ளி இடப வாகனத்திலும், ஸ்ரீ காந்திமதி அம்மை – வெள்ளி இடப வாகனத்திலும் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் ரத வீதிகளில் உலா வந்து அலுப்பு மண்டபம் சேர்ந்து சகல தீபாராதனைகளும் நடைபெற்றிருக்கும்.

இரவில் ஸ்ரீ விநாயக பெருமான் – வெள்ளி மூஷிக வாகனத்திலும், ஸ்ரீ சுப்பிரமணியர் – மயில் வாகனத்திலும், சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் – இந்திர விமானத்திலும், ஸ்ரீ காந்திமதி அம்மை – கிளிக்கு பழம் ஊட்டும் திருக்கோலத்தில்  இந்திர விமானத்திலும், முதலி மூவர்கள், அதிகார நந்தி – சப்பரத்திலும், சண்டிகேஸ்வரர் – சப்பரத்திலும் எழுந்தருளி, திருக்கோவில் யானை காந்திமதி முன்செல்ல, பஞ்சவாத்தியங்கள், நாதஸ்வரம் – மேளம் முழங்க, தேவார – திருமுறை பண்ணிசை முழங்க ரத வீதிகளில் உலா வந்திருப்பார்கள்.

About Lakshmi Priyanka

Check Also

வரலட்சுமி நோன்பு

ஆடி மாதம் பிறந்துவிட்டாலே பல்வேறு விசேஷங்கள் மற்றும் திருவிழாக்கள் களைகட்டத் துவங்கி விடும். ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு, ஆடி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.