திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது!

Veena-Musical Instrumentதிருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த இசைப்பள்ளியில் பயில விரும்பும் மாணவ – மாணவிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த படிப்புகளை 3 ஆண்டுகள் முழுநேரமாக படிக்க வேண்டும். முதலாம் ஆண்டுக்கு ரூ.152, இரண்டாம், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.120 மட்டும் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாவட்ட அரசு இசைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வசதி, ரெயில் கட்டண சலுகை வசதி, அரசு மாணவர் விடுதி, மாதந்தோறும் மாணவர்களுக்கு தலா ரூ.400 கல்வி உதவித்தொகை மற்றும் இலவச சீருடை, இலவச சைக்கிள் மற்றும் இலவச காலணி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு தமிழக அரசு தேர்வு இயக்கத்தால் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சான்றிதழை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில் அரசு இசைப்பள்ளிகளிலும், தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை கோவில்களிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெறும் மாணவ – மாணவியர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள  0462-2900926, 9443810926 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.