திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க “வணக்கம் நெல்லை 24/7” வாட்ஸ்-அப் எண் அறிமுகம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள், நேற்று  “வணக்கம் நெல்லை” 97865 66111 என்ற புதிய வாட்ஸ்-அப் எண்ணை அறிமுகம் செய்து வைத்தார்.

பொது மக்கள் இந்த எண்ணில் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் புகார்களை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம். இந்த வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கப்படும் குறைகள் மற்றும் புகார்கள் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மூலம் அந்தந்த துறைக்கு உடனடியாக அனுப்பப்படும். இதற்காக முக்கிய துறைகளின் அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தலைமையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!