திருநெல்வேலி மாநகரில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த ஆட்சித் தலைவர் உத்தரவு…!

Tirunelveli Cityகொரோனா நோய் தீவிரமாக பரவி வரும் இன்றைய காலக்கட்டத்தில், அதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்ட நிலையில், மேலும் நோய் தொற்று தீவிரம் அடைந்து வருவதால் கூடுதல் நடவடிக்கையாக இன்று முதல் பல்வேறு தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி இன்று முதல் பகல் 12.00 மணி வரை மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்குரிய கடைகளான காய்கறி, பலசரக்கு மற்றும் தேநீர் கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்தத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகப் பின்பற்றப்படுவது மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு, விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

About Lakshmi Priyanka

Check Also

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் நெல்லை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வரும் 21/06/2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த திங்கள்கிழமை அன்று …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.