திருநெல்வேலி மாநகர புதிய காவல்துறை துணை ஆணையாளராக திரு.சுரேஷ்குமார் பதவியேற்றார்!

Mr Sureshkumarதிருநெல்வேலி மாநகர காவல்துறையின் குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த திரு.மகேஷ்குமார் அவர்களை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்தும், அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர காவல்துறை துணை ஆணையாளராக பணியாற்றிய திரு.சுரேஷ்குமார் அவர்களை திருநெல்வேலி மாநகர புதிய துணை ஆணையாளராக நியமித்தும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவுப்படி நேற்று திருநெல்வேலியின் புதிய காவல்துறை  குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளராக திரு.சுரேஷ்குமார் அவர்கள் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். பதவியேற்றுக்கொண்ட திரு.சுரேஷ்குமார் அவர்கள், திருநெல்வேலி மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கும், மாநகரில் நடைபெறும் கொள்ளை, திருட்டு சம்பவங்களை தடுக்கவும், கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!